LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-10

5.010.திருமறைக்காடு 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
1163 பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. 5.010.1
பண்ணையொத்த மொழியாளாகிய உமை அம்மையை ஒருபங்கிற் கொண்டவரே! மண்ணுலகத்தவர் வலம் புரியும் மறைக்காட்டுறையும் பெருமானே! அடியேன் என்கண்களால் உம்மைக் காணுமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற இக்கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்வீராக.
1164 ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. 5.010.2
ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே. அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக.
1165 அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. 5.010.3
அட்டமூர்த்தியாகிய எந்தையே! தீயவர் புரங்களைச் சுட்ட உயர்ந்த தேவரே! பட்டமாகக் கட்டிய சடைமுடியுள்ள பரமரே! செவ்வையாக இக்கதவினைத் திறப்பித் தருள்வீராக.
1166 அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே. 5.010.4
அருமை உடைய நான்மறை அருளிய நாவுடையவரே! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக.
1167 மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. 5.010.5
திருமலையைப்போல் அழியாதிருக்கும் மறைக்காட்டுறையும் பெருமானே! கலைகள் வந்திறைஞ்சிக் கழல் ஏத்தப் படுபவரே! விலைமதிப்பற்ற செம்மணிவண்ணத் திருமேனியரே! தொலைவில்லாத இக்கதவுகளைத் திறந்தருள்வீராக.
1168 பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. 5.010.6
ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும், தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்குங் காண்டல் அரியீர்! அடிகளே! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக!
1169 வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. 5.010.7
வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசும் மேலானவரே! முடிவில்லாதவரே! மறைக்காட்டுறையும் பெருமானே! எம் தந்தையே! அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைஞ்சிடும் பொருட்டு இப்பெருங்கதவம் பிணிக்கப்பட்டிருத்தலை நீக்கித் திறந்தருள்வீராக.
1170 ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே. 5.010.8
கங்கையாற்றைச் சடையிற் சூடும் மறைக்காட்டுறையும் பெருமானே! ஒரு கூற்றை உமைக்கு ஈந்த இளையவரே! விடையேறிய எம்பெருமானே! இந்த மாறுபாடில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.
1171 சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. 5.010.9
வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே! அண்ணலே! ஆதியே! அணிமறைக் காட்டுறையும் பெருமானே! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக.
1172 விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. 5.010.10
விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக்காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக.
1173 அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. 5.010.11
பெருகும் புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டுறையும் பெருமானே! இராவணனை விரலால் அடர்த்திட்ட நீர் எளியேன்பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராயுள்ளீர்! எம்பெருமானீரே! விரைந்து. இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.