LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-17

5.017.திருவெண்ணியூர் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர். 
தேவியார் - அழகியநாயகியம்மை. 
1233 முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெம்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.1
முத்தினை, பவளத்தை, முளைத்த எம் பூங்கொத்தினை, சுடரை, சுடர்போல் ஒளி உடைய பித்தனை, கொல்லும் நஞ்சு போல்பவனை, வானவர்க்குள் நித்தனை நேற்றுக்கண்ட வெண்ணித்தலமே இன்று என் உள்ளத்தில் பதிந்திருந்து பேரின்பத்தை மிகுவிப்பது.
1234 வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே. 5.017.2
வெண்ணியாகிய பழைய நகரத்தை மேவியவரும், வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை உடைய கொத்தாக உள்ள சடையுடையவரும், கபாலத்தைக் கையில் ஏந்திய வரும், ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்தேனுக்கு அவர் நினைவு என் நாவினில் அண்ணித்து அமுதாக ஊறும்.
1235 காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடும்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.3
காற்றும் கனலும் ஆவான்; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான்; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன். கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன். இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது.
1236 நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச் 
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.4
நல்லவினை, விளங்கும் நால்வேதங்களை ஓதும்பிரானை, சொல்வடிவானவனை, ஒளியை, சுடர்விட்டு ஒளிர்கின்ற திருக்கயிலாயத் திருமலை உடையவனை, திரிபுரம் எரிசெய்த வில்லுடையவனை நேற்றுக்கண்ட வெண்ணியே இன்று எம்மை இது செய்வது.
1237 சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே. 5.017.5
சுடரைப் போல் ஒளிர்கின்ற வெண்ணீற்றுப் பொடியணிமேனியனை, பூவிதழும் (பிறவும்) சென்னியிலே வைத்த அமுதனையானை, படர்ந்த செஞ்சடையிலே பால் போன்ற மதியைச் சூடியவனை, இடர்கள் நீக்கும் இறைவனை யான் கண்டது வெண்ணித் தலத்திலாகும். சடைநெருங்கிய சென்னியில் அமுது (நீர் - கங்கை) வைத்தவனை - எனினும் அமையும். (வைத்த அமுதினை என்பதைஅருங்கேடன் என்பது போலக் கொள்க)
1238 பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாதனை நல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.6
பூதங்களுக்குத் தலைவனை, பூக்கள் நிறைந்த புகலூரனை, மகரந்தம் போல் தவழும் மதியைச் சூடியவனை, தலைவனை, நான்மறை ஓதியவனை, வேதப்பொருளானவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன்.
1239 ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.7
ஒருத்தியை ஒருபாகத்தில் அடக்கியும், மற்றொருத்தியைப் புன்சடையிற் பொருத்திய புனிதனை, கருத்துள் இருப்பவனை, திருநீலகண்டனை, கண்ணுதலானை, நிருத்தம் ஆடுவானை, நேற்று வெண்ணியிற்கண்டு ஏத்தினேன்.
1240 சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.8
சடை உடையவனை, சரியும் கோவண ஆடை கொண்டு உடையவனை, உணர்வார் வினைதீர்த்திடும் மழுவாளொடு பிறவும் படை உடையவனை, பாய்ந்து செல்லும் விடை உடையவனை நேற்று வெண்ணியிற் கண்டு ஏத்தினேன்.
1241 பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.017.9
திருக்கயிலாயப் பொருப்புக்குரியவனை, கங்கையாளைச் சடையிற் கொண்டவனை, அரும்பு போன்ற இளந்திங்களைக் கண்ணியாகக் கொண்டவனை, திருக்கயிலாயத்தைப் பரவிவாழ்த்தும் தொண்டர்கள் விருப்பத்துக்குரியவனை நேற்றுக் கண்டு வெண்ணியில் ஏத்தினேன்.
1242 சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாஅருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே. 5.017.10
வஞ்சிப்பார் வஞ்சனையைக் களையவல்ல எமது அழகன்; திருமேனிகாட்டி அருள்செய்த கொள்கையினை உடையான்; காலன் அஞ்சும்படி உதைத்தவன்; கண்டம் இருளும்படி செய்த கடல் நஞ்சினை உண்டு அமரர்களை உயிர் வாழச்செய்தவன். இப்பெருமானை நெருநல்கண்ட இடம் திருவெண்ணியூரே ஆம்.
1243 இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்திறல் வாட்டினார்
சிலையி னால்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னால்தொழு வார்வினை தாவுமே. 5.017.11
இலைகளுடன் கூடிய கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் ஆற்றலை வாட்டினார். வில்லினால் முப்புரங்களை எய்தவர்க்குரிய வெண்ணியைத் தலையினால் தொழுவார்களது வினை நீங்கும்.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.