LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-98

5.098.உள்ளம் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
2056 நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின் றாடும் அமுதினைத்
தேற லைத்தௌ யைத்தௌ வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.1
திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற மேனியையும், ஒங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தௌவும் அத்தௌவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2057 பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தி யைத்தௌ வைத்தௌ வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.2
பொந்து போல்வதாகிய உடலிற்புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை அத்தௌவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2058 வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்
கள்ளத தைக்கழி யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி யைக் கண்ட துள்ளமே. 5.098.3
இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.
2059 அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும்
செம்மா னநிறம் போல்தோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.4
அம்மானை , அமுதே இன்னமுதே என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்தாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
2060 கூறே றும்உமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம்
ஏறே றுமெந்தை யைக்கண்ட னுள்ளமே. 5.098.5
கூறாகப் பொருந்தி உடையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய் , பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.
2061 முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர்
வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே
என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே. 5.098.6
தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லத சிலர் முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார், வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது.
2062 வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத் தாரே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.7
புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்லமனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
2063 மருவி னைமட நெஞ்சம் மனம்புகும்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடும்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதே னுள்ளமே. 5.098.8
அறிவற்ற மடநெஞ்சமே மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய் சிந்தையுள் சிவனாய் நின்ற உருவினை என்னுள்ளம் கண்டுகொண்டது.
2064 தேச னைத்திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.9
ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
2065 வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லினில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.098.10
ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்தபோது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.