LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-99

5.099.பாவநாசம் 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
2066 பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே. 5.099.1
பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான்.
2067 கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீச னெனாதவர்க் கில்லையே. 5.099.2
கங்கை நீராடிலும், காவிரியில் நீராடிலும், மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும்,பெருகி ஓலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன்? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2068 பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென் 
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் 
எட்டு மொன்று மிரண்டு மறியிலென் 
இட்ட மீச னெனாதவர்க் கில்லையே. 5.099.3
பட்டர் ஆயினும், சாத்திரங்கள் பல கேட்பினும், இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும், எட்டும் ஓன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன்? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
2069 வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே. 5.099.4
வேதம் ஓதினாலும், வேள்விகள் செய்தாலும், நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும், ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன்? ஈசனை உள்குபவர்க்கு அன்றிமற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
2070 காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே. 5.099.5
காலையில் சென்று கலந்து நீரில் முழ்கினாலும், வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும், ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன்? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2071 கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே. 5.099.6
காட்டுப பகுதிகளிற் கலந்து திரிந்தாலும், இழிவின்றிப் பெருந்தவம் செய்தாலும், ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன்? ஞானமயமாகியன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை.
2072 கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப் 
பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே. 5.099.7
வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும், உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன்? ஆடல்வேடத்தைஉடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை.
2073 நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலன்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே. 5.099.8
நன்கு தவம்நோற்றாலும், உண்ணாவிரதம் கிடப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், சென்று நீரிற்குளித்துத் திரிந்தாலும் என்ன பயன்? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி பற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2074 கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் 
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி 
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. 5.099.9
கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின். ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக்குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஓருவனின் செயலோடே அது ஓக்கும்.
2075 மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் 
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பய னில்லையே. 5.099.10
மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன்? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களபணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.