|
|||||
விஞ்ஞான உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் - கூகுள் கிளாஸ் !!! |
|||||
இணைய உலகில் ஜம்பவானாக திகழ்ந்து வரும் கூகுள் நிறுவனம், கூகுள் கிளாஸ் எனும் பிரம்மிக்கத்தக்க நவீன கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.கூகுள் கிளாஸ், மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதை பயன்படுத்தி சென்னை மருத்துவர் ராஜ்குமார் செய்த அறுவைசிகிச்சை, உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் கிளாஸ்-ன் சிறப்பு அம்சங்கள் :
1. கூகுள் கிளாஸ் பயன்படுத்தி, வீடியோ எடுக்கலாம், போட்டோ எடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்படும் படங்கள், வீடியோக்கள், அக்கண்ணாடியில் உள்ள "மெமரி கார்டில்' சேமிக்கப்படும். இதை சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
2. இதில் வை-பை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் ஆகிய வசதிகள் உள்ளன.
3. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டு, கண்ணாடியிடம் கேட்டால், உடனே பதில் தந்து விடும். உதாரணமாக தஞ்சை பெரிய கோவில் பற்றிய சில படங்கள் வேணடும் எனக் கேட்டால், இன்டர்நெட்டில் தேடி, அதற்குரிய தகவல்களை உடனே நமது கண் முன்னே, கண்ணாடியின் ஸ்கிரீனில் காண்பிக்கும்.
4. உங்களுக்கு வரும் இ-மெயில்களுக்கு, நீங்கள் வாய்மொழி மூலம் பதிலளிக்கலாம், அது எழுத்துகளாக மாறிவிடும்.
5. நீங்கள் பயணம் செய்யும் போது, செல்லும் பகுதிக்கு வழி கேட்டால், "கூகுள் மேப்' ஸ்கிரீனில் காண்பிக்கும்.
6. நம் கண் எதிரே நடக்கும் நிகழ்ச்சிகளை, உலகின் எந்த பகுதியில் இருந்தும் ஒளிபரப்பலாம்.
7. நாம் வெளிநாடு செல்லும் போது, அந்நாட்டு மொழியை நமது மொழிக்கு மாற்றியும் தருகிறது.
இதன் விலை இந்திய மதிப்பில் : 95 ஆயிரம் ரூபாய். |
|||||
by Swathi on 19 Sep 2013 1 Comments | |||||
Tags: Google Glass Google Products கூகிள் கிளாஸ் கூகுள் கண்ணாடி | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|