LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- கட்டுரைகள்

அறிவியல் தமிழ்

முனைவர். ஆர். ராஜ ராஜன்

தமிழகத்தில் வரலாற்று ஏடுகளில் புதைந்து கிடைக்கும் 18 சித்தர்களும் அறிவியல் வித்தகர்கள் என்று அறிந்து வியக்கும் காலம் இது.   அகத்தியர், நந்திதேவர், திருமூலர், போகர், கொங்கணவர், மச்சமுனி, கோரக்கர், சடாமுனி, சுந்தரநாதர், ராமதேவர், குதம்பைச் சித்தர், கருவூரார், இடைக்காடர், கமலமுனி, வால்மீகி, பதஞ்சலி, தன்வந்தரி, பாம்பாட்டி சித்தர் போன்றோர் சித்த மருத்துவம், யோகக்கலை, காயகல்ப முறை, ஆல்கிமி (வேதியியல்), இயற்கை அறிவு, கட்டிடக்கலை என்ற அறிவியல் கோட்பாடுகளின் ஆழத்தைக் கண்டிருக்கிறார்கள்.

         இயற்கையோடு இயைந்த வாழ்வைப் பெற்றிருந்த தமிழர்கள் இயற்கைக் கூறுகளை அறிவியல் நோக்கோடு அணுகியுள்ளனர். ஐவகை நிலங்களுக்குரிய கருப்பொருள்களுள் விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள், மரங்கள் இவற்றை ஒவ்வொரு நிலத்திற்கும் வரையறை செய்தமையைப் பார்க்கின்ற பொதுத் தாவரவியலையும், விளங்கியலையும் உணர முடிகின்றது.

          சங்கப்பாடல்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவற்றில் நாடகக் காட்சிக்குத் திரையிடுவது போல இயற்கையினை அறிவியல் பார்வையோடு துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்பெண்களின் கைவிரல், கழுத்து, முகம், கண்கள், மூக்கும் செவி இப்படி ஒவ்வொரு உறுப்பிற்கும் உவமைகளாக மலர்களைப் பிரித்துக் காட்டியுள்ளனர்மிக நுட்பமாகச் செடி, கொடிகள், மலர்கள் இவற்றின் இலைகள், பூக்கள், தண்டு இவை ஒவ்வொன்றையும் விவரித்திருப்பது அறிவியல் பார்வைதானே!

சங்கப்பாடல்களில் புறப்பாடல்களில் மருத்துவ அறிவியல் பற்றிய குறிப்புகளும், நோய் பற்றிய குறிப்புகளும் (Anemia ) பல  பாடல்களில் வருகின்றனபசலை நோய் என்ற நோய்  பலவற்றில் காணப்படுகிறது. மருத்துவர் சிலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மருத்துவர் தாமோதரனார்,

' அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாது மருந்து ஆய்ந்து கொடுக்கும் அடியேன்' என்ற வரிகளில் ஒரு மருத்துவன் நோயின் தன்மைகளைக் கண்டு நோய்க்கு ஏற்ற மருந்தினை ஆராய்ந்து கொடுக்க வேண்டுமே தவிர, நோயாளியின் விருப்பத்திற்கேற்ப கொடுக்கக் கூடாது என்கிறார்.

       "பசிப்பிணி மருத்துவ னில்லம் 

       அணித்தோ சேய்த்தோ கூறுமிநெ மக்கே” 

என்ற புறநானூற்று வரிகள் பசித்துன்பத்தைப் போக்கும் வள்ளல்களைப் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றுகிறார்கள்.

            பண்டைய தமிழகத்தில் மருத்துவ அறிவியலுக்கென்றே, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி முதலிய நூல்கள் இருந்திருக்கின்றன.    சிறுமை+ பஞ்சம்+ மூலம் என்பதுதான் சிறுபஞ்சமூலம்பஞ்சம் என்றால் ஐந்து; மூலம் என்றல் வேர்; ஐந்து வேர்களால் ஆன மருந்திற்குப் பஞ்சமூலம் என்று பேர். சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், சிறுவழுதுணை  வேர், கண்டங்கத்திரி வேர், நெருஞ்சில் வேர் என்ற இவற்றாலான மருந்து உடல் நோய்களைப் போக்கும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.  ஏலாதி என்பது ஏலம் + ஆதி என்பதாகும். ஏலம், இலவங்கப்பட்டை, நாகசேகரம், சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களாலான மருந்து உடல் நோயைப் போக்கும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

            அறுவை மருத்துவ அறிவியல் தமிழ்நாட்டில் இருந்துள்ளது 

              ”......... குருதியோட்டிக் 

             கதுவாய் போகிய துதிலா யெரக்கமொடு 

             பஞ்சியுள் களையாப் புண்ணார் "

என்ற புறப்பாடலில் புண்பட்ட பகுதியில் மருந்திட்டு பஞ்சு போட்டுக் கட்டும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

இன்னுமொரு பாடலில் மருத்துவன் தாமோதரன், சிந்தி நீர்ச்சர்க்கரையும், சிதைக்கப்பட்ட சுக்கையும் தேனோடு கலந்து முகர்ந்தால் தலைவலி போகும் என்ற மருத்துவக் குறிப்பாகக் கூறியுள்ளார்.

    திருக்குறளில்,

          "நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் 

           வாய்நாடி வாய்ப்பச் செயல்"  என்ற குறளிலும்,

          "மிகினும் குறையினும்நோய் செய்யும் நூலோர் 

           வளிமுதலா எண்ணிய மூன்று" என்ற குறளிலும் 

           "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 

             அற்றது போற்றி உணின்" என்ற குறளிலும் 

மருத்துவக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

 

திருமூலரின்  "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்ற வரிகள், உடம்பைப் பராமரிக்க வேண்டும் என்பதனையும் "கண்ணிடந்தப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன் " என்ற செய்தியும், "உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்து தன உதிரம் ஊற்றி அடல்உரச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்" என்ற கம்பரின் வரிகளும், தமிழில் இருந்த அறுவை மருத்துவ அறிவியலை விளக்குகின்றன.

பொறியியல் அறிவியல் தமிழில் இருந்ததைக் கரும்பு பிழியும் எந்திரத்தைப் பற்றி

     "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த " என்ற பதிற்றுப்பத்து வரிகளும், எந்திரம் உள்ள கிணறு பற்றி "அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்" என்ற வரிகளும் விவரிக்கின்றன.

அணுவைப் பற்றியும் தமிழில் ஆழமான செய்திகள் உள்ளன.  "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்  புகட்டி" என்ற வரிகளும், "ஓர் அணுவினைத் சத கூறிட்ட கோணினும் உளன் " என்ற கம்பரின் வரிகளும் விளக்குகின்றன.


தமிழ் மொழியை ஆழமாகச் சிந்திக்கின்ற பொது, எண்ணிலடங்கா அறிவியல் கோட்பாடுகள் அதனுள்ளே புதைந்திருக்கின்றதை உணர முடிகின்றது. எனவே தமிழ் மொழியே ஒரு அறிவியல் மொழி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.