|
||||||||
அறிவியல் தமிழ் |
||||||||
அறிவியல் தமிழ் திரு. இரா. ராஜராஜன்,சென்னை,இந்தியா தமிழ் மொழியானது கலை, கலாச்சாரம்,இலக்கியம், இறைமை, அறிவியல் என்ற மானுடத்தின் அனைத்துத் தேவைகளையும் கொண்ட மொழி என்பதைத் தாண்டி இன்ன பிற பன்முகக் கூறுகளைக் கொண்ட மொழி மட்டுமல்ல, நுண்ணிய அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய மொழியும் நம் தமிழ் மொழி நிலம், நீர், தீ, காற்று என்ற இயற்கைக் கூறுகளெல்லாம் தோன்றி, மனித இனம் என்று தோன்றியதோ அன்றே தோன்றிய மொழி, உயர்தனிச் செம்மொழி, உலக மொழிகளில் தலை சிறந்த மொழி என்பவையெல்லாம் நம் பெருமைக்குரிய உண்மைகள் என்றாலும், இம்மொழியின் தன்மை, தொன்மை, முதன்மை இவற்றை அடியொற்றி நோக்குகின்ற போது இது அறிவியலுடன் இணைந்த மொழிதான் என்றாலும், தற்போது ஆங்கில வடிவில் உலவி வரும் அறிவியல் கலைச் சொற்களையும், ஆங்கிலத்தில் சொல்லி, படித்து, எழுதிப் பழகிப் போன அறிவியல் நிரூபணங்களையும், பல்வேறு அறிவியல் எடுகோள்கள், கருத்துகள் இவற்றைத் தெள்ளத் தெளிவாகப், படித்து, எழுதிட இயலவில்லை என்ற பொதுவான கருத்து நிலவி வருவது உண்மையே. உள்ளத்தால் உணர்ந்து தமிழ் வழியாக அறிவியலைப் படித்தால் சிந்தனை சக்தியும், ஆக்கமும் பெருகும் என்ற குரல் ஆங்காங்கே ஓங்கி ஒலித்தாலும், உலகளாவிய பார்வையில், உலக நாடுகளுடன் செய்தித் தொடர்பிற்கு பொது ஊடகமாக ஆங்கிலம் உருவாக்கப்பட்டு விட்ட நிலையில், முற்றிலும், தமிழில் அறிவியலைக் கொணர்வதில் தயக்கம் இருப்பது உண்மை. ஆனால், தமிழ் அறிவியலைத் தன்னுள் கொண்ட ஒரு அறிவியல் மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழில் அறிவியல் உள்ளிட்ட அத்துணைப் பிரிவுகளும் தொன்று தொட்டு உள்ளன என்பது மட்டுமல்ல, அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் உள்ளது என்பதை அறிய வேண்டும். பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory ) சார்லஸ் டார்வின் தந்ததை உணர்ந்து போற்றுகிறோம் ; தவறில்லை; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இதே கோட்பாட்டை, “ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதனோடு நாவே மூன்றறிவு அதுவே அவற்றோடு மூச்சே நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே “
என்ற தொல்காப்பியர் தந்த தொல்காப்பியம் உள்ளடக்கிய அறிவியலை உணர்ந்தோமா? எப்படி நாம் வாழுகின்ற இந்தப் பூமிப்பந்து தோன்றியிருக்கக் கூடும். அண்ட சராசரங்கள் உருவாகியிருக்கக் கூடும் என்பதைச் சொல்லுகின்ற Big Bang Theory அதாவது, "விண்ணுலகில் அனைத்துப் பொருட்களும் ஒரே ஒரு மிக அடர்த்தியான நெருப்புக் கோளமாக இருந்திருக்க வேண்டும். இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்த நெருப்புக் கோலம் வெடித்துச் சிதறி, பல திசைகளிலும் வியாபித்து, அவைதான் கோள்களாகவும், வெண்மீன்களாகவும், பால் வழி மண்டலங்களாகவும் மாறியுள்ளன" என்ற செய்தியில் சொல்லப்படும் துகள்களின் இயக்கத்தின் ஐந்து நிலைகளை அமிழ்தல் (With drawing ) இமிழ்தல் (Over flowing ) குமிழ்தல் (Clustering around in order ) உமிழ்தல் ( emitting ) தமிழ்தல் (resulting in a well defined form ) என்று தமிழில் விளக்கப்படுகிறது. பூமியானது முழுமையான இறுதி வடிவம் பெற்றதைக் குறிக்கும். "தமிழ்தல்" என்ற அறிவியல் சொல்லில் இருந்து பெற்றது தான் தமிழ் என்பது வியப்பிற்குரிய உண்மை மட்டுமல்ல. தமிழை விட இனிக்கும் செய்தியன்றோ! (இனிமை தொடரும்…) |
||||||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|