|
||||||||
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை |
||||||||
இயல் இசை நாடகம் என முத்தமிழ் என்ற நிலையைத் தாண்டி இவற்றுடன் அறிவியல் தமிழ், கணினித் தமிழ் இணைந்து ஐந்தமிழ் என்றானது செம்மொழியாம் நம் தமிழ் மொழி. தமிழ் மொழியும் உண்மை, இலக்கண இலக்கிய வரையறை, ஆழம் இவற்றை உற்று நோக்குகின்ற போது இம்மொழி நம் வாழ்வியலோடு மட்டுமன்றி இயற்கையோடும் அறிவியல் சிந்தனையோடும் இணைந்து மொழி என்பது மறுக்க இயலாத உண்மை. நவீன உலகில் அறிவியல் உலகில் கடினமான ஆய்வுக்கு உட்பட்ட பல உண்மைகள் தெள்ளத்தெளிவாக மிக எளிமையாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் இரண்டறக் கலந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று முறையாகவும் ஆழமாகவும் தமிழைப் பயில்கின்ற போது தமிழில் ஒரு அறிவியல் என்று உணர இயலுகிறது நாம் தமிழில் படித்தறிந்து ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் பறை சாற்றியிருக்க வேண்டிய நிலை மாறி; ஆங்கிலத்தில் படித்து அறிந்து பின் தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய நிலையில் இருப்பது வரலாற்றின் மடை மாற்றம். இதன் விளைவாக, தமிழில் மறைந்து இருக்கின்ற, புதைந்திருக்கின்ற, அறிவியல் உண்மைகளை உய்த்துணர சற்றே மறந்தோம் இவற்றை மீண்டும் மீட்டெடுக்க வேண்டியது நாம் கடமை அன்றோ! ஒரு மொழியில் அத்துணை கூறுகளும் எப்படி ஒளிந்திருக்க இயலும் கற்கக் கற்க தமிழின் ஆழத்திலே எத்துணை அற்புதமான அறிவியல் புதையல்கள் வெளிவருகின்றன எப்படி இது சாத்தியமாகும் என்றால் அதற்கு மறுமொழி இயற்கைதானே. அறிவியல் என்பது தான் இயற்கை தேடுவதும் அதன் உள்ளார்ந்த உண்மைகளில் இருந்து புதுமைகளைப் புனைவது அறிவியல் என்றால் அது தமிழில் தேடுவதற்கு ஒப்பாகும். இயற்கையாகத் தோன்றிய மொழி தானே தமிழ் தமிழில் இயற்கையும் அறிவியல் புதைந்து கிடப்பது எந்த வியப்பையும் தராது. பருவகாலங்கள் விண்மீன்கள் நூல்கள் இவற்றைப் பற்றிய அளப்பரிய செய்திகள் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் விரவிக்கிடக்கின்றன. தொல்காப்பிய பொருள் இலக்கணத்தில் நிலத்தை ஐ வகைகளாகப் பிரித்த தொல்காப்பியர், ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற காலங்களைப் பிரித்தும் ஓராண்டின் ஆறு பருவங்களாக கார் காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில், முதுவேனில் என்று பகுத்துள்ளார் .12 ஆண்டுகள் கொண்டது ஒரு மாமாங்கம். வியாழன் போல் வட்டத்தினை ஐந்து முறை சுற்றி வருவது ஐந்து மாமாங்கம் கொண்டது. அதாவது 60 ஆண்டுகள் தொன்று தொற்று வழங்கி வருவதும் இதுதான் இவ்வாறு கோள்களின் இயக்கத்தைக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடுவதன் மூலம் தமது ஆய்வினை வெளிப்படுத்துகிறார். நச்சினார்க்கினியன் கூற்றிலிருந்து சந்திரன் மற்றும் சூரியன் இவற்றின் இயக்கங்கள், அதனோடு கோள்களின் இயக்கங்கள் இவற்றை எந்த ஒரு தொலைநோக்கி போன்ற கருவியும் இல்லாமல், வெறும் உற்றுநோக்கல் இயற்கை கூறுகள் இவற்றை மட்டும் கொண்டு உணர்ந்து, அதனை ஆண்டு என்றும்; அந்த ஆண்டிற்கு பெயரிட்டு வழங்கியும்; இந்த ஆண்டில் இக் கோள்களின் இயக்கம் இவ்வாறு அமையும் கணித்துக் கூறியது வியப்பிலும் வியப்பைத் தருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் எக்ஸ்ப்ளோரர், மனிதனை நிலவில் நடக்கச்செய்த அப்பல்லோ -11, ஜப்பானின் ஆஸியுமி, என்று இந்த வரிசையில் இன்றைக்கு இந்தியாவின் சந்திராயன்! இவற்றையெல்லாம் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம், இதை விட வியக்க வேண்டியது இவற்றிற்கெல்லாம் முன்னரே தமிழன் பெற்றிருந்த வானியல் ஆய்வு! தாமே ஒளிரும் விண்மீன்கள் " நாண்மீன்" ( Luminous objects ), ஒளியை பெற்று ஒளிர்வன. "கோள் விண்மீன்கள்" என்றும், சந்திரன் முதல் அனைத்துக் கோள்களும் "கோள் விண்மீன்கள்", ஞாயிறு நாண்மீன் என்றும், புறநானூறு மற்றும் பட்டினப்பாலை பாடல்களில் சான்றுகள் காணக்கிடக்கின்றன.
"மதிற் சேர் நாண்மீன் போல் " - புறம் 100 "நின்று நிலை இயற் நின் நாண்மீன்" - புறம் 124 மேலும் ,வெண்ணிறம் உடையது வெள்ளி, செந்நிறம் உடையது செவ்வாய் என்றும், வெள்ளி விடியலில் தோன்றும் என்பதனை, "வெள்ளி தோன்ற புல்லுக்கு குறலி ம்ப" என்கிறது அதே புறநானூறு.. வானியலை கணித்துக் கூறுபவர்களை கணியர் என்றனர். கோள்களின் நிலையை இவர்கள் துல்லியமாகக் கணித்ததால், "கணியன் பூங்குன்றனார்", பக்குடுக்கை நன்கணியார்" என்று பெயர் பெற்றார்கள் போலும்!
முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலில், "செஞ்ஞாயிற்றுச் செலவும் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும் வளி திரிதரு திசையும் வரிய து நிலைஇய காயமும் என்றிவை சென்றனர ருந்தார் போல என்றும் இதைத்தான் பாரும் உளரே!
வானியல் குறித்து ஒரு மிகப்பெரிய ஆய்வே நடந்துள்ளது
அதாவது ஞாயிற்று இருக்கு ஒரு பாதை உண்டு ஞாயிறு அப்பாதையில் இயங்குகிறது பரிப்பு என்பது இத்தனை நாழிகைக்குள் இவ்வளவு யோசனை அதாவது தொலைவு செல்லும் வானம் யாதொரு தாக்குதலும் இன்றி நிற்கிறது என்ற உண்மைகளை நேரில் போல் கூறிச்சென்ற ஆய்வாளர்கள் இருந்துள்ளனர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இவை மட்டுமன்றி எந்தக் காலத்தில் எந்தப் பகுதியில் இருந்து காற்று வீசும் என்றுணர்ந்து அதற்கேற்பக் கடலில் கலம் செலுத்தினர் என்று வருகிறோம் காற்று வீசுகின்ற இசைக்கேற்பக் காற்றிற்கு , வாடை, தென்றல், கொண்டல் என்று பெயரிட்டு அழைத்தனர். கோள்களின் நிலை மாற்றத்தினால் கிரகணம் தோன்றும் என்று கண்டறிந்து எந்தக் கருவியும் இன்றி, எவ்வாறு கண்டறிந்தனர் என்றெல்லாம் சிந்திக்கின்ற போது தமிழன் அறிவியலின் முன்னோடி தான் என்று உணர முடிகின்றது. உலகம் உருண்டை என்பதைப் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகே அயல் நாட்டினர் அறிந்தனர். ஆனால், இதற்கு முன்னரே தோன்றிய தமிழ் இலக்கியங்கள், இவ்வுலகம் பேரண்டத்தின் ஒரு கோள் என்று கூறியுள்ளனர். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று புகழப் படுகின்ற ஆன்மீக நூல், " அண்டப்பகுதியின் உண்டை பிறக்கம் அளப்பரும் தன்மை வளப் பெரும் காட்சி ஒன்றுக்கொன்று நின்றிடில் பகரின் நூற்றொரு கோடியில் மேற்பட விரிந்தன" என்ற வரிகள் பெருவெடிப்பு கொள்கையையும், இப்பேரண்டம் விரிவடைகிறது என்பதையும் உணர்த்துகிறது. உலகம் என்பது வேர்ல்ட் என்பதை குறிக்கும் சொல்லின் அடிப்படை " உலவு". உலவு என்றால் சுற்றுதல் என்று பொருள். உலகம் தன்னையும், ஞாயிற்றையும், சுற்றி வருகிறது என்ற அறிவியல் கருத்து இங்கே புதைந்து கிடக்கிறது. "ஞால்" என்ற சொல்லிலிருந்து பிறந்ததுதான் ஞாலம். ஞால் என்றால் தொங்குதல். எந்த பிடிப்பும் இல்லாமல் உலகம் தொங்குகிறது என்பதால் ஞாலம் ஆயிற்று. காற்றில்லாப் பகுதி வானில் வெற்றிடம் என்பது அறிவியல் உண்மை. இதைத்தான் " வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று வரிகள் சொல்லுகின்றன." வலவன் ஏவா வானூர்தி" என்கிறது அதே புறப்பாடல். விமானி யால் செலுத்தப்படாத வானூர்தி என்று பொருள். ஏன் அன்றைய தமிழர்கள் இன்றைய செயற்கைக்கோள்கள் போல, ஆளில்லா விமானத்தை செலுத்தி இருக்கக் கூடாது.
|
||||||||
by Swathi on 14 Oct 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|