LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழர்கள் வெளிநாட்டு பொறுப்புகள் -International positions

கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி தேர்வு

 

கனடாவின் புதிய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி (Gary Anandasangaree) பதவியேற்றுள்ளார்.

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் மே 13-ஆம் தேதி  முன்னெடுக்கப்பட்டன.

பொதுப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்த சங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19-ல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளைத் தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக ஹரி ஆனந்த சங்கரி அந்தக்காலங்களில் திகழ்ந்துள்ளார்.

மேலும், கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

"பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், பணிவுடன் உணர்கிறேன். நம்முடைய சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலமும், வெறுப்பை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், நமது பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும் கனேடியர்களுக்குச் சேவை செய்ய நான் உறுதிபூண்டுள்ளேன்" என ஹரி ஆனந்த சங்கரி தனது பதவியேற்பின்போது தெரிவித்துள்ளார்.

 

 

by hemavathi   on 15 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல்  பவுடர்  - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல் பவுடர் - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை
பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி.. பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி..
இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ  காலமானார் முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ காலமானார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது
உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர் உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர்
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப்  புகழ் வணக்கம்  - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.