|
||||||||
சிறந்த கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது? |
||||||||
திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், தங்களுக்கு வரப்போகும் துணையைப் பற்றி பல கற்பனை பிம்பங்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தாலும், அந்தத் துணை நல்ல, சிறந்த மனிதராக இருப்பாரா…. அவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? இக்கேள்விக்கு சத்குரு தரும் பதில் இங்கே… திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது? சத்குரு: இந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள்? அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த செயல் என்று எதுவுமே கிடையாது. நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அது எல்லோருக்கும் திருப்திகரமாக, நல்ல விதமாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மிகச் சிறந்த மனிதனைத் தேடுவதை நிறுத்துங்கள். அப்படி ஒருவர் கிடைக்கவே போவதில்லை. உங்கள் இதயம் யாரிடமாவது நேசம் கொள்கிறதா? யாரிடமாவது தாவிப் போகிறதா? யாரிடமாவது பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வம், வருகிறதா? அவரையே உங்களுக்குச் சிறந்த துணையாகத் தேர்ந்தெடுக்கலாம். அவர் தான் உலகில் சிறந்த கணவரா? அப்படியல்ல. அவரிடம் குறைகள் இருக்கும். ஆனால், அந்த உறவை மிகச் சிறந்த உறவாக உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். கவனமோ, தெளிவோ இன்றி வாழ்க்கையை அணுகினால், எந்த உறவையும் மிக அசிங்கமான உறவாக மாற்றி விட முடியும். இரண்டு நிலையும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. முட்டாளுடன் கூட வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அந்த உறவு அற்புதமாக அமைய வேண்டும் என்பது உங்கள் விழைவாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படி அமைத்துக் கொள்ள வேண்டிய கவனம் உங்களுக்குத் தான் தேவை. ஒவ்வொரு கணமும் அதே கவனத்தோடு, அதே விழிப்புணர்வோடு உறவை அணுகுங்கள். பத்து வருடங்கள் ஒழுங்காகத் தான் இருந்தேன். ஒரே ஒரு கணம் தான் தவற விட்டு விட்டேன் என்பது இங்கே செல்லுபடியாகாது. |
||||||||
by Swathi on 29 Mar 2014 0 Comments | ||||||||
Tags: சத்குரு Sathguru Best Husband Best Husband Qualification Tamil Best Husband Tamil Sirantha Kanavar சிறந்த கணவர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|