LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு !!

திருவள்ளுவரின் பிறந்த நாளை நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டாட வேண்டுமென வலியுறுத்தி ராஜ்யசபாவில் எம்.பி தருன் விஜய் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேச ராஜ்யசபா தலைவரிடம், அனுமதி கேட்டிருந்த தருண் விஜய்க்கு, நேற்று பேச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, இந்தியா என்பது, துளசிதாசரும், வால்மீகியும் மட்டும் தான், என்ற நிலை தற்போது உள்ளது. உண்மை அதுவல்ல. திருவள்ளுவர், கண்ணகி போன்றவர்களையும், உள்ளடக்கியது தான் இந்தியா.

நான் இமயமலைச் சேர்ந்தவன் என்றாலும், தமிழ் அன்னைக்கு தான், என் முதல் வணக்கம். 'அகர முதல எழுத்தெல்லாம், ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற, கற்பனைக்கு எட்டாத தத்துவத்தைச் சொன்ன, மாபெரும் தத்துவ ஞானியான, திருவள்ளுவரைப் பற்றி, வட மாநில மக்கள், அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, வட மாநிலங்களில் பாடப் புத்தகங்களிலும், இடம்பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் மொழிகளான கன்னடம், தெலுங்கு, வங்கம் என, எத்தனையோ மொழிகள் இருந்தாலும், அத்தனைக்கும், தலையாய மொழி, தமிழ் தான்.

உலகம் முழுவதும் உள்ள, மிகவும் பழமையான மொழிகளை கண்டறிந்து, 'மெமரி ரிஜிஸ்டர்' என்ற பட்டியலை, யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது. அதில் இடம்பெற்ற, முதல் மற்றும் ஒரே இந்திய மொழி, தமிழ் தான். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியில், திருக்குறளை எழுதி, உலகத்திற்கு தந்த மகான், திருவள்ளுவரது பிறந்த நாளை, தேசிய அளவில் கொண்டாடுவதற்கு, அனைவரும் ஆதரவு தர வேண்டும் என இந்தியிலும், தடுமாற்ற தமிழிலும் உணர்ச்சி பொங்க, தருண்விஜய் பேசி முடித்ததும், சபையில் அவருக்கு ஆதரவாக பலத்த கரகோஷங்கள் உண்டாகின.

அந்த நேரத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி சபையில் எழுந்து "தருண் விஜயின் கோரிக்கைக்கு, இத்தனை பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவரின் பிறந்த நாளை, மத்திய அரசே கொண்டாடும். அடுத்த ஆண்டு முதல், தேசிய அளவில், கொண்டாடுவதற்கு உண்டான, அனைத்து ஏற்பாடுகளும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படும், மேலும் திருக்குறளை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

by Swathi   on 29 Nov 2014  0 Comments
Tags: மத்திய அரசு   தருண் விஜய்   ஸ்மிருதி இரானி   திருக்குறள்   திருவள்ளுவர் பிறந்த நாள்   Thiruvalluvar Birthday   Thiruvalluvar  
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.