|
||||||||
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) |
||||||||
Swahili became the first African language to get a translation of the Thirukkural in 2024. Being the most commonly spoken language in Africa, it is only natural for Swahili to have got this distinction. The estimated number of speakers of Swahili language, either as their primary or secondary language, is said to be over 200 million. It is an official language in five East African countries, besides being a working language of few other countries of the region. Member of the parliament Mr. M.M. Abdulla released a copy of the first and only translation of the Kural in Swahili, rendered by Raja Ilangovan and Kasthuri Kumaravel, in February 2024. This translation is expected to generate a lot of interest among the Swahili speakers and also among other language speakers in the region.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பேசப்படும் ஸ்வாஹிலி மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து முடித்துள்ள கென்யா வாழ் தமிழர்கள் திரு.குமரவேல்-திருமதி.கஸ்தூரி இருவரும் அந்நாட்டில் வசிக்கும் அந்நாட்டில் வசிக்கும் தமிழார்வலர் திரு.ராஜா இளங்கோவன் அவர்களது வழிகாட்டலில் இம்மொழிபெயர்ப்பை செய்துமுடித்துள்ளதாகவும், நம் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிந்து மகிழ்ந்ததாகவும் கூறி தொடர்புகொண்டார்கள். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் குறித்து நம் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் செம்மைப்படுத்தி நூலாக அச்சிட்டு வெளியிடும் பணி நடந்துவருவதாக தெரிவித்துள்ளனர். திருக்குறள் ஆர்வமுள்ள தம்பதிக்கு வாழ்த்துகளை கூறி, திருக்குறள் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல் குழு அவர்களுக்கு இத்திட்டத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்தோம்.
--------- கிஸ்வாகிலியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு அகர முதல எழுத்தெல்லாம் ஆதி A, as its first of letters, every speech maintains; As the letter A is the first of all letters, so the eternal God is first in the world. யான் கற்ற மொழிதனிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என மகாகவி பாரதி கூறியதன் பொருள் ஆப்பிக்க நாடான தென்யாவின் தலையாய மொழியான கிஸ்வாகிலியை ஆராய்ச்சி செய்யும் பொழுது எனக்குப் புரிந்தது. செந்தமிழக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது ஏன் என்றும் விளங்கியது. என் மனைவி கென்யாவில் படித்து வளர்ந்ததனால் கிஸ்வாகிலி மொழி நன்கு தெரியும். அதனால் ஸ்வாகிலி மொழியை கென்யாவிற்கு வரும் நமது தமிழ் அன்பர்களுக்கு தமிழ் வழியாக கற்றுக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் இருவரும் இறங்கினோம். அப்பொழுதுதான் தமிழ் மொழியின் பல சிறப்புகள் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
குமரவேல் மற்றும் கஸ்தூரி |
||||||||
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 19 Feb 2024 0 Comments | ||||||||
Tags: திருக்குறள் மொழிபெயர்ப்பு திருக்குறள் மொழிபெயர்ப்பு Swahili | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|