|
||||||||
வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள் |
||||||||
1. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் திருக்குறள் கற்போம்!! குறள்வழி நிற்போம்!! என்ற முழக்கத்துடன், தமிழ்நாடு அரசு வழக்கும் திருக்குறள் முற்றோதல் விருதுக்கு மாவட்டம்தோறும் இலவசமாக திருக்குறள் நூல் வழங்கி, பயிற்சி வழங்கவும், பயிற்சியாளர்களை ஒருங்கிணைக்கவும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம். உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து ஆண்டுக்கு 40000 திருக்குறள் நூல்களை இலவசமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறது.
2. வலைத்தமிழ் பதிப்பகம் திருக்குறள் நூல்களை தொகுக்கவும், பதிப்பிக்கவும் ஒரு சிறப்புப் பதிப்பகம் இல்லாத நிலையில் வலைத்தமிழ் பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்களாக, புதிய நூல்களை பதிப்பித்தல், வெளிவந்துள்ள 7000+ திருக்குறள் நூல்களை தொகுத்தல், அச்சில் இல்லாதவற்றை மறுபதிப்பு செய்தல், அயல்நாட்டு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்து கிடைக்கச்செய்தல்.
3. குறள் வழிக் கல்விக்கழகம் இதுவரை வகைப்படுத்தப்படாத திருக்குறள் துறைகளை ஆராய்ந்து, “வழிகாட்டும் வள்ளுவம்” என்று நூல்களைப் பதிப்பித்து துறை சார் கருத்துகளை பரப்ப ஒரு முன்மாதிரி திருக்குறள் பயிற்சிக் கட்டமைப்பு குறள் வழிக் கல்விக்கழகம்.
4. குறள் வழி -மாத இதழ் உலகெங்கும் நடைபெறும் திருக்குறள் பரவலாக்கல் திட்டங்களை, நிகழ்வுகளை, சாதனைகளை, ஆய்வுகளைத் தொகுத்து, ஆவணப்படுத்தும் திருக்குறளுக்கான சிறப்பு மாத இதழ் குறள் வழி.
5. குறளங்காடி அமெரிக்கா சென்று வருபவர்கள் சுதந்திர தேவி சிலை , நயாகரா நீர்வீழ்ச்சி ஆகியவற்றை பார்வையிட்டு அதன் நினைவாக பல பொருள்களை வாங்கிவருவார்கள். அதுபோல் ஐயன் வள்ளுவரை பார்க்க வரும் அனைவருக்கும் பிடித்த பல நினைவுப்பரிசுகளை உருவாக்கி வள்ளுவத்தைப் பரப்ப குறளங்காடி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ளது. |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
| by Swathi on 28 Aug 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|