LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-113

2.113.சீகாழி 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
2692 பொடியிலங்குந் திருமேனி 
யாளர் புலியதளினர் 
அடியிலங்குங் கழலார்க்க 
ஆடும் மடிகள்ளிடம் 
இடியிலங்குங் குரலோதம் 
மல்கவ் வெறிவார்திரைக் 
கடியிலங்கும் புனல்முத் 
தலைக்குங்கடற் காழியே. 2.113. 1
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர். திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம், இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக்களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும். 
2693 மயலிலங்குந் துயர்மா 
சறுப்பானருந் தொண்டர்கள் 
அயலிலங்கப் பணிசெய்ய 
நின்றவ் வடிகள்ளிடம் 
புயலிலங்குங் கொடையாளர் 
வேதத்தொலி பொலியவே 
கயலிலங்கும் வயற்கழனி 
சூழுங்கடற் காழியே.
2.113. 2
மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணிசெய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம், மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் தேவதஒலிபரவும் சிறப்பினதாய, கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும். 
2694 கூர்விளங்குந் திரிசூல 
வேலர்குழைக் காதினர் 
மார்விலங்கும் புரிநூலு 
கந்தமண வாளனூர் 
நேர்விலங்கல் லனதிரை 
கள்மோதந் நெடுந்தாரைவாய்க் 
கார்விலங்கல் லெனக்கலந் 
தொழுகுங்கடற் காழியே.
2.113. 3
கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர். குழையணிந்த செவியினர். மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர். அவருக்குரிய ஊர், மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும். 
2695 குற்றமில்லார் குறைபாடு 
செய்வார் பழிதீர்ப்பவர் 
பெற்றநல்ல கொடிமுன் 
னுயர்த்த பெருமானிடம் 
மற்றுநல்லார் மனத்தா 
லினியார் மறைகலையெலாங் 
கற்றுநல்லார் பிழைதெரிந் 
தளிக்குங்கடற் காழியே.
2.113. 4
குற்றம் இல்லாதவர். தம் குறைகளைக் கூறி வேண்டுபவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர், வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும். 
2696 விருதிலங்குஞ் சரிதைத் 
தொழிலார் விரிசடையினார் 
எருதிலங்கப் பொலிந்தேறும் 
எந்தைக் கிடமாவது 
பொதிலங்கும் மறைகிளைஞர் 
ஓதப் பிழைகேட்டலாற் 
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து 
தீர்க்குங்கடற் காழியே.
2.113. 5
வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர். விரிந்த சடையினர். எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை. அவருக்குரிய இடம், பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும். 
2697 தோடிலங்குங் குழைக்காதர் 
தேவர்சுரும் பார்மலர்ப் 
பீடிலங்குஞ் சடைப்பெருமை 
யாளர்க் கிடமாவது
கோடிலங்கும் பெரும்பொழில் 
கள்மல்கப் பெருஞ்செந்நெலின் 
காடிலங்கும் வயல்பயிலும் 
அந்தண்கடற் காழியே.
2.113. 6
தோடும் குழையும் விளங்கும் காதினர். வேதங்களை அருளியவர். வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர். அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடையவயல்களை உடையதுமான காழிப்பதியாகும். 
2698 மலையிலங்குஞ் சிலையாக 
வேகம்மதில் மூன்றெரித் 
தலையிலங்கும் புனற்கங்கை 
வைத்தவ்வடி கட்கிடம் 
இலையிலங்கும் மலர்க்கைதை 
கண்டல்வெறி விரவலாற் 
கலையிலங்குங் கணத்தினம் 
பொலியுங்கடற் காழியே.
2.113. 7
மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம், இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும். 
2699 முழுதிலங்கும் பெரும்பொருள் 
வாழும்முரண் இலங்கைக்கோன் 
அழுதிரங்கச் சிரமுர 
மொடுங்கவ் வடர்த்தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் 
துகந்தார்க் கிடமாவது 
கழுதும்புள்ளும் மதிற்புறம 
தாருங்கடற் காழியே.
2.113. 8
உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க, அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப்பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற்காழியாகும். 
2700 பூவினானும் விரிபோதின் 
மல்குந்திரு மகடனை 
மேவினானும் வியந்தேத்த 
நீண்டா ரழலாய்நிறைந் 
தோவியங்கே யவர்க்கருள் 
புரிந்தவ் வொருவர்க்கிடங் 
காவியங்கண் மடமங்கையர் 
சேர்கடற் காழியே.
2.113. 9
நான்முகனும், தாமரைமலரில் வாழும் திருமகளை மருவிய திருமாலும் வியந்து போற்ற, அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம், குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும். 
2701 உடைநவின் றாருடைவிட் 
டுழல்வார் இருந்தவத்தார் 
முடைநவின் றம்மொழி 
யொழித்துகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை 
பாயும்வயல் மலிதரக் 
கடைநவின்றந் நெடுமாடம் 
ஓங்குங்கடற் காழியே.
2.113. 10
உடையோடும், உடையின்றியும் திரிபவரும், கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர்சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம், கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும், வாயில்களை உடைய உயர்ந்த மாடவீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும்.
2702 கருகுமுந்நீர் திரையோத 
மாருங் கடற்காழியுள் 
உரகமாருஞ் சடையடி 
கள்தம்பா லுணர்ந்துறுதலாற் 
பெருகமல்கும் புகழ்பேணுந் 
தொண்டர்க்கிசை யார்தமிழ் 
விரகன்சொன்ன இவைபாடி 
யாடக்கெடும் வினைகளே.
2.113. 11
கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப்பதியுள், பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும். 
திருச்சிற்றம்பலம்

2.113.சீகாழி 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

2692 பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர் அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம் இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக் கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. 2.113. 1
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர். திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம், இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக்களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும். 

2693 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ் வடிகள்ளிடம் புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.2.113. 2
மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணிசெய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம், மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் தேவதஒலிபரவும் சிறப்பினதாய, கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும். 

2694 கூர்விளங்குந் திரிசூல வேலர்குழைக் காதினர் மார்விலங்கும் புரிநூலு கந்தமண வாளனூர் நேர்விலங்கல் லனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க் கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.2.113. 3
கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர். குழையணிந்த செவியினர். மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர். அவருக்குரிய ஊர், மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும். 

2695 குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர் பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம் மற்றுநல்லார் மனத்தா லினியார் மறைகலையெலாங் கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.2.113. 4
குற்றம் இல்லாதவர். தம் குறைகளைக் கூறி வேண்டுபவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர், வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும். 

2696 விருதிலங்குஞ் சரிதைத் தொழிலார் விரிசடையினார் எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக் கிடமாவது பொதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலாற் கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.2.113. 5
வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர். விரிந்த சடையினர். எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை. அவருக்குரிய இடம், பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும். 

2697 தோடிலங்குங் குழைக்காதர் தேவர்சுரும் பார்மலர்ப் பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க் கிடமாவதுகோடிலங்கும் பெரும்பொழில் கள்மல்கப் பெருஞ்செந்நெலின் காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.2.113. 6
தோடும் குழையும் விளங்கும் காதினர். வேதங்களை அருளியவர். வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர். அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடையவயல்களை உடையதுமான காழிப்பதியாகும். 

2698 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலாற் கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.2.113. 7
மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம், இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும். 

2699 முழுதிலங்கும் பெரும்பொருள் வாழும்முரண் இலங்கைக்கோன் அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ் வடர்த்தாங்கவன்தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.2.113. 8
உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க, அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப்பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற்காழியாகும். 

2700 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகடனை மேவினானும் வியந்தேத்த நீண்டா ரழலாய்நிறைந் தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ் வொருவர்க்கிடங் காவியங்கண் மடமங்கையர் சேர்கடற் காழியே.2.113. 9
நான்முகனும், தாமரைமலரில் வாழும் திருமகளை மருவிய திருமாலும் வியந்து போற்ற, அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம், குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும். 

2701 உடைநவின் றாருடைவிட் டுழல்வார் இருந்தவத்தார் முடைநவின் றம்மொழி யொழித்துகந்தம் முதல்வன்னிடம்மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக் கடைநவின்றந் நெடுமாடம் ஓங்குங்கடற் காழியே.2.113. 10
உடையோடும், உடையின்றியும் திரிபவரும், கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர்சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம், கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும், வாயில்களை உடைய உயர்ந்த மாடவீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும்.

2702 கருகுமுந்நீர் திரையோத மாருங் கடற்காழியுள் உரகமாருஞ் சடையடி கள்தம்பா லுணர்ந்துறுதலாற் பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.2.113. 11
கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப்பதியுள், பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.