LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-117

2.117.திருஇரும்பைமாகாளம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாகாளேசுவரர். 
தேவியார் - குயிலம்மை. 
2736 மண்டுகங்கை சடையிற் 
கரந்தும் மதிசூடிமான் 
கொண்டகையாற் புரமூன் 
றெரித்த குழகன்னிடம் 
எண்டிசையும் புகழ்போய் 
விளங்கும் இரும்பைதனுள் 
வண்டுகீதம் முரல்பொழில் 
சுலாய்நின்ற மாகாளமே.
2.117. 1
கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச் சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும். 
2737 வேதவித்தாய் வெள்ளைநீறு 
பூசி வினையாயின 
கோதுவித்தா நீறெழக் 
கொடிமா மதிலாயின 
ஏதவித்தா யினதீர்க் 
கும்மிடம் இரும்பைதனுள் 
மாதவத்தோர் மறையோர் 
தொழநின்ற மாகாளமே.
2.117. 2
வேதவித்தாய், வெண்ணீறுபூசி, வினைகள் யாவற்றையும் அழித்து, கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து, குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து, அருள்புரியும் சிவபிரானது இடம், திருஇரும்பை நகரில் உள்ளதும், மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும். 
2738 வெந்தநீறும் எலும்பும் 
அணிந்த விடையூர்தியான் 
எந்தைபெம்மா னிடம்எழில் 
கொள்சோலை யிரும்பைதனுள் 
கந்தமாய பலவின் 
கனிகள் கமழும்பொழில் 
மந்தியேறிக் கொணர்ந்துண் 
டுகள்கின்ற மாகாளமே.
2.117. 3
திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும், விடைஊர்தியனும், எந்தையும், தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக்கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும். 
2739 நஞ்சுகண்டத் தடக்கி 
நடுங்கும் மலையான்மகள் 
அஞ்சவேழம் உரித்த 
பெருமான் அமரும்மிடம் 
எஞ்சலில்லாப் புகழ்போய் 
விளங்கும் இரும்பைதனுள் 
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் 
தழகாய மாகாளமே.
2.117. 4
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும். 
2740 பூசுமாசில் பொடியான் 
விடையான் பொருப்பான்மகள் 
கூசவானை யுரித்தபெரு 
மான்குறை வெண்மதி 
ஈசனெங்கள் இறைவன் 
னிடம்போல் இரும்பைதனுள் 
மாசிலோர்கண் மலர்கொண் 
டணிகின்ற மாகாளமே.
2.117. 5
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும். 
2741 குறைவதாய குளிர்திங்கள் 
சூடிக் குனித்தான்வினை 
பறைவதாக்கும் பரமன் 
பகவன் பரந்தசடை 
இறைவனெங்கள் பெருமான் 
இடம்போல் இரும்பைதனுள் 
மறைகள்வல்லார் வணங்கித் 
தொழுகின்ற மாகாளமே.
2.117. 6
கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும்,வினைகளை அழிக்கும் பரமரும், தூய்தான ஆறுகுணங்களை உடையவரும், பரவலான சடைகளை உடைய இறைவரும், எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும். 
2742 பொங்குசெங்கண் அரவும் 
மதியும் புரிபுன்சடைத் 
தங்கவைத்த பெருமானென 
நின்றவர் தாழ்விடம் 
எங்குமிச்சை யமர்ந்தான் 
இடம்போல் இரும்பைதனுள் 
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் 
தழகாய மாகாளமே.
2.117. 7
சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும், எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும். 
2743 நட்டத்தோடு நரியாடு 
கானத்தெரி யாடுவான் 
அட்டமூர்த்தி யழல்போ 
லுருவன் அழகாகவே 
இட்டமாக இருக்கும் 
இடம்போல் இரும்பைதனுள் 
வட்டஞ்சூழ்ந்து பணிவார் 
பிணிதீர்க்கும் மாகாளமே.
2.117. 8
நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும், அட்டமூர்த்தி வடிவினரும், அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும். 
2744 அட்டகாலன் றனைவவ் 
வினான்அவ் வரக்கன்முடி 
எட்டுமற்றும் மிருபத்திரண் 
டும்இற வூன்றினான் 
இட்டமாக விருப்பா 
னவன்போல் இரும்பைதனுள் 
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் 
தெழிலாரும் மாகாளமே.
2.117. 9
மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும், இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும், ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும். 
2745 அரவமார்த்தன் றனலங்கை 
யேந்தி யடியும்முடி 
பிரமன்மாலும் அறியாமை 
நின்ற பெரியோனிடம் 
குரவமாரும் பொழிற்குயில்கள் 
சேரும் இரும்பைதனுள் 
மருவிவானோர் மறையோர் 
தொழுகின்ற மாகாளமே.
2.117. 10
பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு, அனலை அங்கையில் ஏந்தி, பிரமன், மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும். 
2746 எந்தையெம்மான் இடம்எழில் 
கொள்சோலை யிரும்பைதனுள் 
மந்தமாய பொழில்சூழ்ந் 
தழகாரு மாகாளத்தில் 
அந்தமில்லா அனலாடு 
வானையணி ஞானசம் 
பந்தன்சொன்ன தமிழ்பாட 
வல்லார்பழி போகுமே.
2.117. 11
எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும். 
திருச்சிற்றம்பலம்

2.117.திருஇரும்பைமாகாளம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாகாளேசுவரர். தேவியார் - குயிலம்மை. 

2736 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம் எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.2.117. 1
கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச் சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும். 

2737 வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின கோதுவித்தா நீறெழக் கொடிமா மதிலாயின ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.2.117. 2
வேதவித்தாய், வெண்ணீறுபூசி, வினைகள் யாவற்றையும் அழித்து, கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து, குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து, அருள்புரியும் சிவபிரானது இடம், திருஇரும்பை நகரில் உள்ளதும், மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும். 

2738 வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.2.117. 3
திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும், விடைஊர்தியனும், எந்தையும், தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக்கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும். 

2739 நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.2.117. 4
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும். 

2740 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள் மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.2.117. 5
நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும், மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம், குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும். 

2741 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.2.117. 6
கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும்,வினைகளை அழிக்கும் பரமரும், தூய்தான ஆறுகுணங்களை உடையவரும், பரவலான சடைகளை உடைய இறைவரும், எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும். 

2742 பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம் எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.2.117. 7
சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும், எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும். 

2743 நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான் அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள் வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.2.117. 8
நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும், அட்டமூர்த்தி வடிவினரும், அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும். 

2744 அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான் இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.2.117. 9
மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும், இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும், ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும். 

2745 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம் குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள் மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.2.117. 10
பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு, அனலை அங்கையில் ஏந்தி, பிரமன், மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும். 

2746 எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.2.117. 11
எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.