LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-119

2.119.திருநாகேச்சரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர். 
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை. 
2758 தழைகொள்சந் தும்மகிலும் 
மயிற்பீலி யுஞ்சாதியின் 
பழமும்உந்திப் புனல்பாய் 
பழங்காவிரித் தென்கரை 
நழுவில்வானோர் தொழநல்கு 
சீர்மல்கு நாகேச்சரத் 
தழகர்பாதந் தொழுதேத்த 
வல்லார்க் கழகாகுமே.
2.119. 1
தழைகளோடு கூடிய சந்தன மரங்கள், அகில் மரங்கள், மயிற்பீலி, நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும். 
2759 பெண்ணொர்பாகம் அடையச் 
சடையிற் புனல்பேணிய 
வண்ணமான பெருமான் 
மருவும் இடம்மண்ணுளார் 
நண்ணிநாளுந் தொழுதேத்தி 
நன்கெய்து நாகேச்சரம் 
கண்ணினாற் காணவல்லா 
ரவர்கண் ணுடையார்களே.
2.119. 2
ஒருபாகத்தே உமையையும், சடையில் நீர் வடிவான கங்கையையும், கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய, மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர். 
2760 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை 
கொண்டும் மணிகுலவுநீர் 
பறவையாலப் பரக்கும் 
பழங்காவிரித் தென்கரை 
நறவநாறும் பொழில்சூழ்ந் 
தழகாய நாகேச்சரத் 
திறைவர்பாதந் தொழுதேத்த 
வல்லார்க்கிட ரில்லையே.
2.119. 3
குறவர் வாழும் குறிஞ்சிப்புனம், முல்லைநிலம் ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை. 
2761 கூசநோக்காதுமுன் சொன்ன 
பொய்கொடு வினைகுற்றமும் 
நாசமாக்கும் மனத்தார்கள் 
வந்தாடு நாகேச்சரம் 
தேசமாக்குந் திருக்கோயி 
லாக்கொண்ட செல்வன்கழல் 
நேசமாக்குந் திறத்தார் 
அறத்தார் நெறிப்பாலரே.
2.119. 4
ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய், கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளிவிளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப் பாலராவர். 
2762 வம்புநாறும் மலரும்மலைப் 
பண்டமுங் கொண்டுநீர் 
பைம்பொன்வாரிக் கொழிக்கும் 
பழங்காவிரித் தென்கரை 
நம்பன்நாளும் அமர்கின்ற 
நாகேச்சர நண்ணுவார் 
உம்பர்வானோர் தொழச் 
சென்றுடனாவதும்உண்மையே.
2.119. 5
மணம் கமழும் மலர்களையும், மலைப் பொருள்களையும் வாரிக்கொண்டு, பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர். 
2763 காளமேகந் நிறக்கால 
னோடந்தகன் கருடனும் 
நீளமாய்நின் றெய்தகாமனும் 
பட்டன நினைவுறின் 
நாளுநாதன் அமர்கின்ற 
நாகேச்சர நண்ணுவார் 
கோளுநாளுந் தீயவேனும் 
நன்காங் குறிக்கொண்மினே.
2.119. 6
கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்மின். 
2764 வேயுதிர்முத் தொடுமத்த 
யானை மருப்பும்விராய்ப் 
பாய்புனல்வந் தலைக்கும் 
பழங்காவிரித் தென்கரை 
நாயிறுந்திங் களுங்கூடி 
வந்தாடு நாகேச்சரம் 
மேயவன்றன் அடிபோற்றி 
யென்பார் வினைவீடுமே.
2.119. 7
மூங்கில் முத்துக்கள், யானைமருப்பு ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில், நாயிறு, திங்கள் இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய, இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும். 
2765 இலங்கைவேந்தன் சிரம்பத்தி 
ரட்டியெழிற் றோள்களும் 
மலங்கிவீழம் மலையால் 
அடர்த்தா னிடமல்கிய 
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் 
நண்ணும் நாகேச்சரம் 
வலங்கொள்சிந்தை யுடையார் 
இடராயின மாயுமே.
2.119. 8
இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும். 
2766 கரியமாலும் மயனும் 
மடியும்முடி காண்பொணா 
எரியதாகிந் நிமிர்ந்தான் 
அமரும்இட மீண்டுகா 
விரியின்நீர்வந் தலைக்குங் 
கரைமேவு நாகேச்சரம் 
பிரிவிலாதவ் வடியார்கள் 
வானிற் பிரியார்களே.
2.119. 9
கருநிறமுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காண இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய, பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார். 
2767 தட்டிடுக்கி யுறிதூக்கி 
யகையினர் சாக்கியர் 
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் 
வெள்ளி லங்காட்டிடை 
நட்டிருட்கண் நடமாடிய 
நாதன் நாகேச்சுரம் 
மட்டிருக்கும் மலரிட் 
டடிவீழ்வது வாய்மையே.
2.119. 10
தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய கையினராய்த்திரியும் சமணர், சாக்கியர், புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது, இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்குவது உண்மைப் பயனைத்தரும். 
2768 கந்தநாறும் புனற்காவிரித் 
தென்கரைக் கண்ணுதல் 
நந்திசேருந் திருநாகேச் 
சரத்தின் மேன்ஞானசம்
பந்தனாவிற் பனுவல் 
லிவைபத்தும் வல்லார்கள்போய் 
எந்தையீசன் இருக்கும் 
உலகெய்த வல்லார்களே.
2.119.11
மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில், கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர். 
திருச்சிற்றம்பலம்

2.119.திருநாகேச்சரம் 
பண் - செவ்வழி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர். தேவியார் - குன்றமுலைநாயகியம்மை. 

2758 தழைகொள்சந் தும்மகிலும் மயிற்பீலி யுஞ்சாதியின் பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க் கழகாகுமே.2.119. 1
தழைகளோடு கூடிய சந்தன மரங்கள், அகில் மரங்கள், மயிற்பீலி, நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும். 

2759 பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய வண்ணமான பெருமான் மருவும் இடம்மண்ணுளார் நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம் கண்ணினாற் காணவல்லா ரவர்கண் ணுடையார்களே.2.119. 2
ஒருபாகத்தே உமையையும், சடையில் நீர் வடிவான கங்கையையும், கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய, மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர். 

2760 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர் பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.2.119. 3
குறவர் வாழும் குறிஞ்சிப்புனம், முல்லைநிலம் ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை. 

2761 கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும் நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம் தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.2.119. 4
ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய், கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளிவிளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப் பாலராவர். 

2762 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் உம்பர்வானோர் தொழச் சென்றுடனாவதும்உண்மையே.2.119. 5
மணம் கமழும் மலர்களையும், மலைப் பொருள்களையும் வாரிக்கொண்டு, பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர். 

2763 காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார் கோளுநாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.2.119. 6
கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்மின். 

2764 வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப் பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.2.119. 7
மூங்கில் முத்துக்கள், யானைமருப்பு ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில், நாயிறு, திங்கள் இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய, இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும். 

2765 இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழிற் றோள்களும் மலங்கிவீழம் மலையால் அடர்த்தா னிடமல்கிய நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம் வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.2.119. 8
இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும். 

2766 கரியமாலும் மயனும் மடியும்முடி காண்பொணா எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இட மீண்டுகா விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.2.119. 9
கருநிறமுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காண இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய, பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார். 

2767 தட்டிடுக்கி யுறிதூக்கி யகையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளி லங்காட்டிடை நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சுரம் மட்டிருக்கும் மலரிட் டடிவீழ்வது வாய்மையே.2.119. 10
தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய கையினராய்த்திரியும் சமணர், சாக்கியர், புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது, இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்குவது உண்மைப் பயனைத்தரும். 

2768 கந்தநாறும் புனற்காவிரித் தென்கரைக் கண்ணுதல் நந்திசேருந் திருநாகேச் சரத்தின் மேன்ஞானசம்பந்தனாவிற் பனுவல் லிவைபத்தும் வல்லார்கள்போய் எந்தையீசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.2.119.11
மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில், கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.