LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1164 - கற்பியல்

Next Kural >

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை. (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைவியர் காமக்கடற்படார் ; படினும் அதனைத் தக்க புணையால் நீந்திக்கடப்பர் என்ற தோழிக்குச் சொல்லியது.) காமக் கடல் உண்டே - காமக்கடல் எனக்கு இருக்கவே யிருக்கின்றது ; அது நீந்தும் ஏம்பபுணை இல் - ஆனால் அதை நீந்திக் கடக்கும் பாதுகாப்பான மரக்கலந்தான் எனக்கில்லை. தூதுவிடுத்து எனக்குத் துணையாதற் குரிய நீயும் ஆனாயல்லை யென்பதாம். மன் , உம் ஈரிடத்தும் அசைநிலை. இனி, மிகுதிப் பொருள எனினுமாம். இதில் வந்துளது உருவகவணி .
கலைஞர் உரை:
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காமம் கடல்போல இருக்கிறது. ஆனால் அக்கடலைக் கடக்க எனக்குப் பாதுகாப்பளிக்கும் மரக்கலமாகிய என் காதலர் இங்கில்லையே!
Translation
A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore.
Explanation
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
Transliteration
Kaamak Katalmannum Unte Adhuneendhum Emap Punaimannum Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >