LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

காப்புப்பருவம்

திருமால்.

287     நீர்கொண்ட வேணிப் பிராற்கருள் விருந்தினை நிகர்ப்பமுகிழ் நகைசெய்தோறு
      நிலவெழூஉப் பொங்கித் துளித்துக் கிடப்பது நிகர்ப்பநிரல் படமிலைந்த
வார்கொண்ட மணிவடக் கொங்கையுடை நங்கையைவிண் மங்கையர்க்கரசியைச்சீர்
      மலியகில நிகிலமு முயிர்த்தகரு ணைக்காந்தி மதியம்மை யைப்புரக்க
தார்கொண்ட துளபப் பெருங்கா டலைத்தொழுகு தண்ணறாக் கலுழிபொங்கத்
      தவலறு மொளிக்கவுத் துவமணி சமழ்ப்பவத் தடமார்பு செக்கர்காட்டக்
கூர்கொண்ட வேல்விழிச் செங்கமல மங்கையிரு குங்குமச் சேறளாவுங்
      கொங்கைகண் ஞெமுங்கத் திளைத்துக் களிக்குங் குரூஉச்சுடர்ப் பச்சைமுகிலே.     (1)

வேறு -- பஞ்சவர்ணேசுவரர்.

288     நிலவுபொங்கவொரு சிறையொதுங்குமிரு ணிகரவெண்பொடிபொதிந்த மெய்ப்பூச்சொளி
           நிமிரவெங்குமலை கடலெழுந்தகொடு நெடுவிடங்குலவு கண்டனைத்தார்ப்புய
     நெடியவன்பிரம னுணர்வமென்றகில நிகிலமுந்துருவ நின்றமெய்த்தீர்த்தனை
            நிகரில்வெங்கொடிய மகமெழுந்துபொறி நிறைபணங்கெழுமு கங்கணச்சேர்ப்பனை,
விலகிநன்கிரண முமிழ்பொலங்கொண்முடி மிசைவியன்சுரர்க ரங்குவித்தேத்தவும்
            விறல்கொளும்பணியு முழுவையும்பரவி மிளிரவும்புரிபொ னம்பலக்கூத்தனை
     வெருவிலண்டரெழு விடையைவென்றமுழு விடையில்வந்தருளு மைந்தனைக்கார்ப்புயல்
           விரிவிசும்பினிடை விரவுமிந்திரவில் விழையுமைந்துநிற நம்பனைப்போற்றுதும்
மலர்பெரும்புவன முவகைகொண்டுயர வழுவகன்றமறை யந்தமிழ்ப்பாட்டினை
            வளமிகும்புகலி மழலையின்சொலுடை மழமொழிந்தருளு மின்சுவைத்தேக்கமழ்
      மதுரநின்றவமு துதவுகொங்கைமிசை வடபறம்புலவு திங்களைப்போற்சுடர்
            மணிவடங்குலவ வெழுபசுங்கொடியை மலர்மடந்தையர்ம ருங்குகைக்கூப்புட
னிலகுனன்பரெவ ரெவர்செயும்பணிக ளெவன்மொழிந்தருள்வை யென்றெடுத்தேத்திட
           விருகணின்கருணை பொழிபுநின்றவளை யெமதுளங்குடிகொள் பைங்கிளிப்பேட்டினை
     யிமயம்வந்தமட நடையமென்பிடியை யெழிறழைந்துமலர் கொம்பரைச்சூட்டர
      விறைவணங்குநுழை யிடையையம்பிகையை யிசையுறந்தைநகர் மங்கையைக்காக்கவே.     (2)

வேறு --- நிருத்தவிநாயகர்.

289     முப்புரமுருக்குதிற லாளனைப்போற்கொலை
      முற்றுபகைசெற்றவொரு கோடுறத்தூக்கியே
ரப்புசுடர்விட்டெறியொர் கோடுவிற்சேர்த்தெழு
      மற்புதநிருத்தமத வானையைப்போற்றுவாந்
திப்பியமலர்த்தருவின் மேவுபட்பாட்டளி
      தெற்றெழுநறப்பருகி யேமுறப்பூத்துவார்
குப்புறுமிணர்த்தொகைய சூதம்விட்போய்ப்பொலி
      குக்குடநகர்க்கணமர் தேவியைக்காக்கவே.     (1)

வேறு -- முருகக்கடவுள்.

290     வரியளிக்குல முழக்கிடநறப்பொழியு மென்மலர்த் தீர்த்தனன்
            மணிமுடித்தலை சடக்கொலிபடப்புடைசெய் கைம்மலர்க் காய்ப்பனை
      வழுவறக்குறு முனிக்கினியநற்றமிழ்சொ லையனைச் சூற்புயல்
            வளர்வரைக்குறவர் பொற்கொடியடிச்சுவடு மொய்புயக் காட்டனை
விரிகடற்புடவி முற்றுமறையச்சிறைகொண் மஞ்ஞையிற் கார்க்கடல்
            வியன்முகட்டெழு மழப்பரிதியொப்பவரு செம்மலைச் சூர்ப்பிடி
      விழிகளிப்புற நறைத்தருமலர்த்தொடைகொள் செல்வனைக் கூப்புகை
            விதுமுடிப்பரம ருக்கருண்மறைக்குரிய வள்ளலைப் போற்றுதுங்
கரியவுற்பலம் விளர்ப்பவற நெய்த்திருள்செய் பெய்குழற் கேற்பவோர்
            கதிருநித்தில மணிப்பிறையணிச்சுவடு செய்திடச் சூட்டுபு
      கணவர்செக்கர்முடி யிற்றிவள் பிறைச்சுவடு பொன்னடிச் சேர்த்திய
            கவினுடைத்திருவை மிக்கருள்பழுத்தமலை வல்லியைத் தூப்படு
மரியநற்றவ ருளத்துமெமுளத்துமமர் செல்வியைக் கூர்ப்படை
            யலைதரப்பொருது பொற்குமிழ்மிசைக்குதிகொள் கண்ணியைக் கூட்டுணு
      மமுதுபெற்றணி பணிக்கொழுநர்முத்தமிடு கிள்ளையைத் தேக்குறு
            மருமறைக்கினிய குக்குடநகர்க்கண்வள ரம்மையைக் காக்கவே.     (4)

வேறு. பிரமதேவர்.

291     பாயிருட் படலங் கிழித்தொழுகு செங்கதிர்ப் பருதிவா னவன்முடங்கும்
      பைந்திரைக் கார்க்கட லகட்டெழுந் தெனவிரைப் பைந்துளவ னுந்திநாறுஞ்
சேயபொற் றாமரை மலர்த்தவிசி னேறியத் திகரியங் கொண்டல்காக்கச்
      செயிர்தீர் பெரும்புவன முழுதும் படைத்தகைத் தெளிமறைக் கடவுள்காக்க
மாயிரு விசும்புறு முடுக்கணந் தம்மகிழ்நன வள்ளலார் கொள்ளைவேணி
      மன்னியதை யுன்னியிக கன்னிதரு முடியே வயங்கியெக் காலுமழியாக்
கோயிலென வாழ்வது கடுப்பமுத் தணியாற் குலாவிக் கமழ்ந்துநெய்த்த
      கூந்தலிமயப்பிடியை மடநடை யனத்தையொண் கோழிநகர் வாழ்மயிலையே.     (5)

வேறு. தேவேந்திரன்.

292     பண்டு சமரிற் புறங்கொடுத்த பறம்பு திறம்பா வெறுழ்படைத்துப்
      பகைத்துப் பொரல்போ லயிராணி பசும்பொ னசும்பு மார்பினிடங்
கொண்டு பணைத்துப் புடைத்தெழுந்த கொம்மை யிளமென் முலைக்கோடு
      குத்திப் பொருத வடுப்பொலியுங் குருமா நிறப்புத் தேள்புரக்க
வண்டுபடுந்தா ராரூரன் மாறாநிதிக்கோ னிருவரையு
      மதியாப்பொருளோ ரிரண்டினுக்கும் வயத்தோ ழமைகொள் பிரானேபோற்
றுண்டு படுவெண் மதிநுதற்பூந் தோகைமாத ரிருவரையுஞ்
      சொலுந்தோ ழமைகொண் டருளுறையூர்ச் சுரும்பார் குழலெம் பிராட்டியையே     (6)

வேறு. திருமகள்.

293     வரியளி யுழக்கப் பசந்தே னசும்பூறு மாலைத் துழாய்க்கொண்டறன் -
      மறுமார்ப மறுமாதர் மருவப் பொறாதிதழ் மணத்தபங் கயமிருந்து,
கரியகண் முகிழ்த்திடுத லின்றிக் கடுங்காப் புறுத்தவு மறப்பொதுமையே -
      காட்டுமம் மார்பத் திருந்துரிமை கொண்டுமகிழ் கன்னிகையை யஞ்சலிப்பாந்,
தெரிவரிய வரமுடைத் தக்கனார் புரிதருந் தீத்தொழி லடுத்துநகைபோய்ச் -
      செயிருற்ற செங்கதிர் கடைக்கணருள் பெறுவான் செழுங்கா தடைந்ததேய்ப்பத்,
துரிசறு நிறங்கெழு மணித்தொகை குயிற்றுபொற் றோடுடைக் குயிலையெயிலைச்
      சுற்றுடுத் தோங்குவள முற்றவுறை யூர்க்கணமர் தோகையைக் காக்கவென்றே.     (7)

வேறு. கலைமகள்.

294    பல்கும் பொறிச்சிறைப் பண்மிடற் றளியிளம் பைங்குழவி வயிறுவிம்மப் -
      பருமுகை முலைக்கண் டிறந்தொழுகு மின்னறாப் பாலூட்டு பங்கயத்து,
மெல்குந் தகட்டகட் டிதழ்மேயி னான்மறை விரிந்தொளி பழுத்தசெந்நா -
      மேற்றனது வெண்மேனி செம்மேனி யாகவமர் விமலைபொற் றாள்பரசுவா,
மல்குந் துகிர்க்கொடி பழுத்தனைய செஞ்சடை மணாளன் றிருக்கரத்து -
      மறிமான் றழைந்ததன் றிருவுருப் பசுமையொளி வார்ந்தெழக் கண்டுதுளிநீர்,
பில்கும் பசும்புலென வாய்கறிப் பதுகண்டு பெருநகை கொளாவமகிழ்நன் -
      பிணையலறு கூட்டியுறை யூரில்விளை யாடுபெண் பிள்ளையைக் காக்கவென்றே.     (8)

துர்க்கை.

295     துறைபட்ட மறைபரசு மிறையவ னுதற்சுடர்த் தொகையழலு நகையழலும்வெந் -
      தூமம் படுங்கரச் சிகையழலு மிகையெழூஉச் சுழல்வது கடுப்பவளவாக்,
கறைபட்ட வெந்நுனைய முத்தலைப் படையொன்று கைத்தலையெழுந்து சுழலக் -
      கனல்பொழி விழித்துணை முடங்குளை மடங்கல்வரு கன்னியைப் பரவுவாம்பொற்,
சிறைபட்ட வெள்ளனப் புள்ளேறு நான்முகச் செம்மலும் பொம்மன்முலையந் -
      திருமாது கொண்கனுந் தெரிவரிய பிறைமுடிச் செம்பொன்மலை யைப்புணர்ந்தோர்,
பிறைபட்ட கோடுடைக் கைம்மலையை யீன்றொளி பிறங்குமர கதமலையைமின் -
      பிறழிமய மலைவந்த வுறையூ ரிருக்குமம் பெண்ணமலை யைக்காக்கவே.     (9)

வேறு. சத்தமாதர்கள்.

296     சிறைபடுநிலவெழ வனநட வுபுமறை நூலினை விரித்தவள்
      திசைகெட நசைகொடு திரிதரு தரியலர் மூவெயி லெரித்தவள்
செறிகட லழலெழ நெடுவரை குடரிற வோரயி றிரித்தவள்
      திருகிய மனனுடை யுருமுறழ் நிசிசரர் கோன்முடி நெரித்தவ
ளிறையள வெனவறை கடல்வளை புடவியொர் கோடிடை தரித்தவ
      ளிணருறு தருநறை யணிகமழ் தரவரை பாய்சிறை யிரித்தவ
ளெரிதரு திரிதரு திரிதலை யயிலைவி டாதுகை தரித்தவ
      ளெனுமிவ ரெழுவர்கள் செழுமல ரடிமுடி வாழ்தர விருத்துதும்
மிறைநிறை மனனுடை யமரர்க டமருட னோலிட வலைக்கடல்
      வெகுளெழு விடமடை மிடறுடை யடிகளை நாடொறு மயக்கியை
விரிசுட ரெரிவிழு மெழுகென வுருகுவர் பாலுறை திருப்பெணை
      வியனுல ககிலமு முதலிய வயிறுடை யாளைமு ளரைச்செழு
நறைமல ருறையெழி லரிவைய ரிருகர மாமல ரருச்சனை
      நனிசெய முனிவறு பணிவிடை யருளிய நீள்கடை விழிச்சியை
நளிநற விழிபொழின் மருவிய திருவுறை யூரம ரொருத்தியை
      நயமிலெ மொழியையு மினிதென வுவகைகொ டேவியை யளிக்கவே.     (10)

வேறு. முப்பத்துமூவர்

297     மாமத மொழுக்குதவ ளக்கரியு கைத்தலொடு
      செக்கர்க்குருத்தோடு சேர்மலரிருக்கையும்
வாளர வணைத்துயிலு மற்பொடு துதிப்பவர்
      திளைப்பக்கொடுப்பாளை யாரணமுடிக்கரும்
பூமல ரடித்துணை தருக்கினை முருக்கியெ
      முளத்துப்பதிப்பளை நூறினமயக்கறு
பூதியொளி யற்றணியு மக்கமணி விட்டவர்
      கருத்துக்கொளிப்பாளை யாரமுதருத்தியொண்
காமர்கிளி யைத்தனது கைத்தல மிருத்தியெழின்
      முத்திட்டிருப்பாளை யோவில்கவிசெப்பெனக்
காமுறு மியற்றமிழ் மணத்தசொ லெமக்கினி
      தெடுத்துக்கொடுப்பாளை மாமுகிறுயிற்றிடுந்
தோமறு மதிற்பெரிய குக்குட நகர்க்கண்வளர்
      செப்புத்தனத்தாளை நாடொறும்லிருப்பொடு
சூரியர் மருத்துவ ருருத்திரர் வசுக்களெனு
      முப்பத்துமுக்கோடி தேவர்கள்புரக்கவே.     (11)

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.