LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மதுரைக் கோவை

கற்பு

I. மணவணி.

தகரணிமீ னேன்றல்

கடம்பா டவிச்சொக்கர் கன்னிநன் னாட்டன்ன கன்னிமண
முடம்பா டணிமுர சார்க்கின்ற தாலமு தூறுநிறை
குடம்பா ரியுமணி மாளிகை கோடியுங் கோவைமுத்த
வடம்பா டலம்பு நெடுந்தோ ரணநடும் வாசலிலே.     [318]


எரிவலஞ் செய்யு மியல்புகண்டு தோழி யுரைத்தல்

கொத்தார மாலை முடிச்சொக்க நாயகர் கூடல்சுற்று
மித்தா ரணியி லெவர்க்கெய்து மோதன் னிறைவன்மலர்க்
கைத்தா மரைமங்கை காட்டா மரைதொடுங் காட்சியிந்த
மைத்தா மரைமலர்க் குள்ளே குடிகொண்டு வாழுவதே.     [319]

உழையர் வாழ்த்து

விடம்பா வியகண்டர் வெள்ளிமன் றாளர் வியனடஞ்செய்
கடம்பா டவியுள்ள காலமெல் லாமெய்க் கலவியின்ப
முடம்பா மெனவு முயிரா மெனவு மொளிருமுத்த
வடம்பாய் முலைவல்லி யுஞ்சிலைக் காளையும் வாழியவே.     [320]

நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி கூறல்
தலைநா ளிவர்தந்த பேரின்ப வாரிக்குந் தண்ணளிக்கும்
விலைநா ணமருல கென்றிருந் தேன்சங்க மெய்த்தமிணூற்
கலைநா வலர்தம் பிரான்கடம் பாடவிக் கன்னிமண
முலைநாண் முயக்கின் விலைக்கினி யேது மொழிவதுவே.    [321]

மணவணி முற்றும்.

II. இல்லிருத்தல்.
மணமனைச் சென்ற செவிலிக்குத் தோழி கூறல்.
கொலைத்தலை மூவிலை வேற்சொக்க நாயகர் கூடல்முற்ற
முலைத்தலை வல்லிகற் பேதுசொல் வேன்கனல் முக்குளிக்கும்
உலைத்தலை வேல்விழி யாய்வடமீனு மொதுங்கும் வெய்யோன்
மலைத்தலை செல்லிற் கடைத்தலையா மண்ணல் வாரணமே.     [322]

மணமனைச் சென்ற செவிலி நற்றாய்க் குரைத்தல்.
காயுங் கனல்மழு வார்கடம் பாடவிக் கானவர்பொன்
மாயுந் துடியிடை வல்லிநல் லாயுன் வயிற்றுதித்த
யாயுந் துணைவனு மென்போல் பவரு மெழின்கரு
நீயுந் தலைவனும் யானுமிவ் வூரு நிகர்க்கு மன்றே.     [323]

இருவர் காதலு மருவுத லுரைத்தல்
அலைப்பட்ட வாருதி மந்தா கினியிரண் டன்றியொன்றாய்த்
தலைப்பட் டதுதரம் போதும தோசடைக் காடுசந்த்ர
கலைப்பட்ட நாதர் கடம்பா டவியிடைக் கைகலந்து
நிலைப்பட் டிவர்பெற்ற பேரின்ப வாரிக்கு நீணிலத்தே.     [324]

இல்லிருத்தல் முற்றும்.

III. மணஞ் சிறப்பு.

கருப்பத் தமைதிகண்டு இறைமகிழ்தல்
மங்கைக் கழகு வளரா லிலையிடை வந்துகுலச்
சிங்கக் குழவி குடிகொண்ட தால்நறுந் தேனொழுகுந்
தொங்கற் சடாடவி யார்சொக்கர் தாளைத் தொழாரின்முகங்
கொங்கைக் களிறு கருகியுள் ளேபயங் கொண்டனவே.     [325]

வெள்ளணி வியந்து கூறல்
அணிபூத்த கூட [*1]லபிஷேகச் சொக்க ரரசிருக்கும்
பணிபூத்த [*2]பாருக் கொருவிளக் காகப் பசும்புனிற்றுப்
பிணிபூத்த சாய லொருபிடி நாகம் பிறங்குசெக்கர்
மணிபூத்த தந்த மணியுல கேழும் வயங்குவதே.
[*1 வபிஷேபிகர்] [*2 தாருக்]     [326]

மணஞ்சிறப்பு முற்றும்.

IV. பரத்தையிற் பிரிவு.

கண்டோர் கூறல்
துரக்கும் பரிநெடுந் தேர்ச்சொக்கர் கூடற் றொடுகடல்மண்
புரக்குந் தலைவர் புகுந்தன ராகம் பொருதுகரை
பரக்கும் புதுப்புனல் கண்டெதி ரேறு பனிக்கயல்போல்
வரக்குங் குமமுலை யாரணி கோலி வனைந்தனரே.     [327]

தோழி தலைவியைப் புகழ்தல்
விற்போர் வலவன் கொடுமைதன் னேவல் விடாமலொன்றாய்
நிற்போ மையுமறி யாதொளித் தான்வெள்ளை நீறணிந்து
மற்போ தருபுயத் தார்சொக்க நாதர் மதுரைவல்லி
கற்போ வவனளி யோபொறை யோகரை *காண்பரிதே*{காண்கரியே}    [328]

சுடரொடு புலம்பல்
சிலைநாடு தோளண்ண லோடுசெந் தீவலஞ் செய்யுமந்தத்
தலைநாளில் நீயொரு சான்றல்ல வோவெண் டரளநிலாக்
கலைநாண் மதியர் கடம்பா டவியிற் கலந்தகலப்
பொலநாண் மணிவிளக் கேவிலக் காது பொருந்தினையே.     [329]

இறைவன் பரத்தமைக் கிரங்கல்
நறுமாந் தழையென்ன மேனிமுத் தாநகை யென்னவனப்
புறுமாண் டகைசெய்த மாயமெல் லாமழு வோடுகொண்ட
சிறுமான் கரத்தர் திருவால வாயிற் றெளிந்துமெய்யென்
றிறுமாந் திருப்பவ ராரெனைப் போலவொ ரேழையரே.     [330]

கனவுகண் டழுங்கல்
தோடிற் பொலியு மதுமாலை யஞ்சடைச் சொக்கர்நன்னாட்
டேடிற் பொலிதொங்கல் மார்பமென் கோனல்க வின்றுதுயில்
கூடிக் கருணைசெய் தீர்விழி காள்பயங் கொள்ளுமுன்னே
யூடிக் கெடுத்துவிட் டேனிது வோமுன்னை யூழ்வினையே.     [331]

தோழி தலைவனை இயற்பழித்தல்
ஆகம் பராயிருப் பாரால வாயில்நம் மன்பரின்பம்
போகம் பொறாதளிக் குந்திரு மார்பம் புணரவென்று
தாகம் பொறாதிருப் பார்க்கரி தாகித் தனதளவும்
மோகம் பெறாதிருப் பார்க்கெளி தாய்வரமுன் னின்றதே.     [332]

தலைவி இயற்பட மொழிதல்
எண்ணுங் கனவு நனவுமொன் றாக விளமுலையுங்
கண்ணு மனமுங் கலந்தக லார்கற்ப காடவியு
மண்ணும் புகழும் பிரான்மது ராபுரி வல்லியவர்
நண்ணும் பழுதுள தோவவற் கேபழி நான்சொல்வதே.     [333]

தலைவன் தலைவியை நினைதல்
அனமா யிளமயி லாயரங் காடு மரிவையர்பொற்
றனமார் படங்கத் தழுவுநெஞ் சேசலங் கொண்டெழுந்த
கனமா களத்தர் கடம்பா டவிமனைக் கற்பொடுநம்
மனமா ளிகையிருப் பாரென்செய் வாரிந்த வஞ்சனைக்கே.     [334]

தலைவன் தோழியை வாயில் வேண்டல்
விள்ளா மயல்கொண் டளியாது நீயன்று மீட்டவென
துள்ளா ருயிர்க்குயிர் வேறுமுண் டோபிறை யோடலர்ந்த
கள்ளாவி யங்கொண்றை யார்கடம் பாடவிக் கன்னியினம்
புள்ளா ரலங்கலங் கோதையல் லாலொரு போதெமக்கே.     [335]

தோழி வாயின் மறுத்தல்
தெளியுங் கலவி யழுந்திய நானன்பு சென்றுநெஞ்சு
சுளியுங் கருங்கங்கு லும்பக லானது சூடரவும்
அளியுஞ் சுழல்கொன்றை யாரால வாயினம் மன்பர்க்கின்று
வெளியுங் கருங்கங்கு லாய்விட்ட வாமெள்ள மெள்ளவந்தே.    [336]

தோழி தலைவியை வாயி னேர்வித்தல்
வாட்[டாரை காலு] மகுடா டவித்தொங்கல் வாசமறாத்
தாட்டா மரைமலர் தானல்ல வோமதத் தாரையறாக்
கோட்டானை யாவயத் தார்கூடல் வாயுன் கொழுங்கடையிற்
றோட்டாழ் ந[டைகொண்டு மென்மெலவந்து] துவளுவதே.     [337]

தலைவி வாயினேர்தல்
வாதுக் கிணங்குந் தமிழ்வையை நாடர் மதுரைநண்பர்
சூதுக் கிணங்கும தோநெஞ்ச மேவிடந் தோய்ந்திரண்டு
காதுக் கிணங்கு விழிமாத ருண்டு களித்தவின்பக்
கோதுக்கு நாமிருந் தாவிது வோவந்து கூடுவதே.     [338]

தலைவி தலைவனோடு ஊடியுரைத்தல்
பொன்னிற் கலவி நிறுப்பா ரிளமுலைப் போகமுண்பார்க்
கென்னிற் கலவி யிணங்கு மதோமது ரேசரெங்கள்
கன்னித் துறைவர் கடம்பா டவிவள்ளல் காதலித்துன்
சென்னிக் கணிவதெல் லாமவர் தாமரைச் சீறடியே.     [339]
வாக்குந் துணிவு மளவும் பரவியல் வாணர்தெள்ளிக்
கோக்குந் தமிழ்புனை வார்கூட னாடர்பொற் குன்றிலின்பந்
தேக்கும் பருவ மறிந்திது காலந் தெளிவித்தெம்மைக்
காக்குங் கடவு ளழிக்குமென் றாலெவர் காப்பவரே.     [340]

கலந்துழி மகிழ்தல்
துன்றுங் குழலி யனுராக போகந் தொலைவறநா
மன்றுந் தெளிந்தன மேமன மேவெள்ளி யம்பலமுங்
குன்றும் புகுந்து குடியிருப் பார்தமிழ்க் கூடலின்ப
மின்றுந் தெளிந்தன மேயின்ன மேதென் றியம்புவதே.     [341]

விருந்தொடு வந்தமைகண்டு ஆறிய தலைவியைக் கண்டோர் கூறல்
மருந்தாய்ப் பிறவி தவிர்த்தபொற் றாளர் மதுரையிற்செம்
பருந்தார்க்கும் வேலன் வரவுகண்டாள்முகம் பார்த்தொருவ
ரிருந்தாற் றரியவெங் கோபா னலம்விருந் தென்னுமந்த
வருந்தாப் புனல்கண் டவிந்தது காணு மருந்துதிக்கே.     [342]

புதல்வனோடு வந்தமை தோழி தெளிவித்தல்
கோடாத கோல்கொண்டு மண்புரப் பார்நங் குலமணியைத்
தேடா வகலத் தணிதல்கண் டாய்செழுந் தீவடிவில்
வாடா தணிகொன்றை யார்சொக்க நாதர் மதுரையினீ
யூடா மருந்தல்ல வோவணங் கேயவ் வொளிமணியே.     [343]

தலைவனை முனிதல்
அலைப்பாவை யஞ்சடை யாரால வாயெம் மழகழிந்த
முலைப்பால் முடையுங் கலையுங்கண் டாய்கடை முன்னர்நின்று
கொலைப்பால் விழியின் கொழுங்கடை யானலங் கூறுவிக்கும்
விலைப்பா வையர்செல்வ மேதொடு மோவெங்கள் மேகலையே.     [344]

இன்னாத் தொலையச் சூளெடுத்தற்கண் தலைவிகூறல்
நொதுமலர் வாழ்வுக்கு நோற்பார் கலவிக்கு நோற்றுநிற்கு
மதுமற வாயிங் கெழுமையு நீகொன்றை யாடகப்பூ
மதுமலர் மார்பர் மதுரா புரியந்த வல்லிநல்லார்
புதுமண வாளவுன் பொய்ச்சூளி லென்னெஞ்சு புண்பட்டதே.     [345]

தலைவி பரத்தையை யானையாக விசேடித்தல்
அடுக்குந் தலைவற் கபாயமெண் ணாநிற்கு மன்புசென்று
கொடுக்கும் பொருளுக் கலம்பிற வாது கொழித்தளந்து
தொடுக்குந் தமிழறி வார்சொக்கர் கூடற் றெடுத்ததொடர்
விடுக்கும் பொழுதடங் காதண்ணல் மேல்கொண்ட வேழநன்றே.     [346]

தலைவி தலைவனோடு புலந்து கூறல்
வீதித் தலையில் வியனாடு வாரிட்ட வெம்பரிக்குப்
போதித்த தேசிகர் நாமல்ல வோவெறும் பொய்யடங்க
வோதித் தமிய னுலைமெழு காகு முபாயமண்ணல்
சாதித் ததுநன்று நின்றின்ன மேதுகொல் சாதிப்பதே.     [347]

தலைவி புலவி தீர்தல்
பொய்யைக் கலவியந் தேன்மாலை யாகப் புனைந்துவஞ்சஞ்
செய்யர் சமைந்தொரு செம்மனின் றால்வெண் டிரையலம்பும்
வையைத் தலைவர் மதுரா புரியிலம் மாயமெய்யா
நையப் படைத்தன னேயென்செய் தானந்த நான்முகனே.     [348]

பாலனைப் பழித்தல்
[*1]வலத்தியல் சூல மதுரேசர் கோயில் வலஞ்செயப்போய்ச்
சலத்தியல் செய்து வருங்களி றேவிலை சாற்றிவிற்கு
நலத்தியல் சேரிக்கு நல்விருந் தாவது நாளுமுங்கன்
குலத்தியல் பாயிருந் தாலுன்னை யோநொந்து கூறுவதே.
[*1. இச்செய்யுள் இலக்கண விளக்கவுரையிற் காட்டப் பெற்றுளது. (பக். 500)]     [349]

புதல்வனை முனிதல்
கனக்குன்ற வில்லி கடம்பா டவிநின்று கண்பிசைந்து
சினக்குந் தொறுமழுந் தெள்ளமு தேசிந்தை சென்றுருகிற்
றனக்கென் றவரன்பை யாசைகொண் டாடுமுன் றந்தைக்கல்லா
லுனக்குங் களிதந்த தோவெங்கை மார்கொங்கை யூற்றின்பமே.     [350]

புதல்வனை வினாதல்
மின்பூட்டு செஞ்சடை வெள்ளிமன் றாளர் வியன்கிரியிற்
பொன்பூட்டி யுன்றந்தை மார்பையுந் தோளையும் புல்லிப்புல்லி
யன்பூட்டி விட்டதும் போதாம லுன்னையு மாதரித்தங்
கென்பூட்டி விட்டன ரோவன்னை மாரென் னிளங்களிறே.     [351]

புதல்வனை வற்புறுத்தல்.
கொங்கோல வண்டிமிர் தார்ச்சொக்க நாயகர் கூடலுங்கள்
செங்கோல் முறைமை முழுதுங்கொள் வாய்பொற் சிறுசதங்கை
பொங்கோடை வாரண மேயுந்தை போலவெம் போலொருவர்
தங்கோல முந்தனி யுங்கண்டு போகை தவிர்ந்தருளே.     [352]

செவ்வணி விடுத்தற்குத் தலைவி யிரங்கல்
வாருங் குவடு பொருமுலைப் பாகர் மதுரைநல்லார்
சேரும் பொதுமனை வாசலெல் லாமொரு செவ்வணிபூண்
டுருந் தெருவுஞ் சிறுநகை யாடி யொருத்திசென்று
தாருந் தலைவரை யென்கில்நன் றேநந் தலையெழுத்தே.     [353]

செவ்வணி யியற் பழித்தல்
வடிபூத்த வேற்கணல் லீர்மட னாணை வனப்பழிக்கும்
படிபூத்த விற்பிறப் பேதுசொல் வேன்தொண்டர் பண்டைமுத்தி
யடிபூத் தருளும் பிரானால வாயி லரும்புமுல்லைக்
கொடிபூத்த தென்றொரு கொம்புசெம் போது கொடுவந்ததே.     [354]

பாணன் வரவு கண்டு தோழியுரைத்தல்
கனிப்பாட லின்னிசைப் பாணனங் காதற் கணவர்நண்பாற்
றனிப்பாயல் தந்த தறிந்தில னோபொற் றடங்கிரிவிற்
குளிப்பா ரரசிருக் குங்கூடல் மாநகர்க் கொம்பனையாய்
தொனிப்பாடல் கொண்டுதுயி லெடைபாடத் தொடங்கினனே.    [355]

பாணனை முனிதல்
மகிழ்வாச மாலைப் புனலூ ரனுக்குங்கள் வாசலன்றிப்
புகுவாச லில்லை யெனும்புலைப் பாண பொறியறுகாற்
றொருவா சிகைச்சொக்கர் பேரிசை யாழினைச் சூளுறநீ
தகுவா யலையிது காணுங்கள் வாழ்வுந் தலைமையுமே.     [356]

பாண னிரந்துகூறல்
நடைக்கரும் பென்று பலர்கூற வண்பொரு ணாடிநிற்குங்
கடைக்கரும் புஞ்செம்மல் காமிக்கு மோவண்டு கால்வருடத்
தொடைக்கரும் புங்கொன்றை யார்சொக்கர் கூடற் நுவளுநுண்ணூ
லிடைக்கரும் பேயடி யேனிசைப் பாணனிங் கென்செய்வதே.    [357]

தலைவி இற்பரத்தையைப் பழித்தல்
வண்டார் கழனி மதுரேசர் மாட மறுகிலெங்கைத்
தண்டாத வீறென தாமறி யேன்தழு வித்தழுவிக்
கொண்டாடு மின்பத் தரம்போ யலைந்தது கொங்கையெங்கை
யுண்டா மினியிவற் கும்பெற லாமென் றுலகையுமே.     [358]

இற்பரத்தை தலைவியை யிகழுதல்
கற்புக் கரசிவ னானாலு மின்பக் கலைதெரியும்
பொற்புக் கெனக்கெவர் போதுங்கொல் லோபொருப் போடிகவி
மற்புக் கணிபுயத் தார்சொக்க நாதர் மதுரைநன்னாட்
டிற்புக் கிருந்தவ ளோபழிப் பாளென் னெழினலமே.     [359]

சேரிப் பரத்தையர் புனலாடுமிடத்துக் கூறல்
அளகந் திருத்தி யிளகார வண்ட லணிந்துகொங்கைப்
புளகம் படுத்திப் பயனென்கொ லோமெய்ப் புலத்தமிழ்நூல்
குளகம் படப்புனை வார்சொக்கர் கூடற் கொடியிடைவந்
துளகம் படுத்துவ னாகில்வண் டார்புன லூரனையே.     [360]

இற்பரத்தை மேம்பாடு கூறல்
தூணுங் கழையுஞ் சுளியானை யாலையச் சொக்கர்வென்ற
பாணும் பனிமொழிப் பாவைநல் லார்தம் பரப்படங்கப்
பூணுங் கலவிப் புனலூர னென்னைப் புனல்விழியிற்
காணுந் தனையுமன் றோவெங்கை மார்தங்கள் காதலனே.    [361]

புனலாடிவந்த தலைவனோடு தலைவி யூடியுரைத்தல்
நாணத் தலையன்றி நீபுன லாட நயந்தநலம்
பூணத் தவம்புரி வாரெங்கை மார்புனல் பூத்தசெங்கட்
கோணச் சரவணி யார்கூட னாடவிக் கோலமுன்னைக்
காணத் தவஞ்செய்த வாதமி யேனிரு கண்களுமே.     [362]

தலைவி தலைவனோடு புலத்தல்
கோணும் பிறையர் திருவால வாய்நம்பர் கூடலெங்கை
நாணும் பெருமையும் நன்றுநன் றேயொரு நாளெனினும்
பேணுங் கொழுநரெம் மோடின்ப வாரி பெருகியொன்றாய்ப்
பூணுங் கலவி யிடைமதி யாது புகுந்தனனே.     [363]

புலவி நுணுக்கம்
கன்னாக மாகக் கருணைசெய் வார்பொற் கடம்பவன
மன்னா ரருளுக் கழியுநெஞ் சேகள பாசலமென்
பொன்னாகம் பூணத் தழுவுமப் போதும் புலப்பரென்றால்
என்னாகு மென்றறி யேனிவ ராசையு மின்பமுமே.     [364]

கலவி நலமுவத்தல்
நிலவித் திகழ்பிறை யுங்கங்கை மாதும் நிலைதளரக்
குலவிக் குலவி விறகுவிற் பார்தமிழ்க் கூடவன்னார்
புலவிக் கெனவு மளவு படாத புதுமைதருங்
கலவிக் களவுநெஞ் சேயெங்ங னேகரை காண்பதுவே.     [365]

பரத்தையிற் பிரிவு முற்றும்.

V. வினைமேற் பிரிவு.

வினைமேற் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்
காலைக் கடிமுர சொன்னார் முரசென்று காணிலிந்த
மாலைக் குடையை மதியென்ப ரோமது மாரியறாச்
சோலைப் புறம்பனை சூழ்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டோலைக் குழைபொருங்கண்ணியெண்ணாதனவொன்றிலையே.     [366]

வினைமேற் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்
குறைவந்த வையைக்கு மண்சுமப் பார்சொக்கர் கூடலந்திப்
பிறைவந் தரும்பு நுதற்றிரு வேயறம் பேணிமனு
முறைவந்த தங்க ளரசாளு நீதி முதன்னமக்கொன்னார்
திறைவந்த தில்லையென் றார்தெரி யாதன்பர் சிந்தனையே.     [367]

தலைவன் பிரித்தமை கேட்டுத் தலைவி புலம்பல்
சட்டுஞ் சிறிய குருகா கிலும்பிரி வென்றுநெஞ்சிற்
காட்டும் பொழுது பொறாதென்பரேசொக்கர் கூடலின்பம்
பூட்டுங் கலவி தருவார் பிரிவெனும் புன்சொலின்று
கேட்டும் பொறுத்தனை யேபாவி யாவிநின் கேண்மைநன்றே.    [368]

கூதிர்க்காலங் கண்டு வருந்தல்
சுழிக்கும் புனல்வையை சூழ்மது ராபுரிச் சொக்கரஞ்சும்
பழிக்கஞ் சலர்சென்ற நாட்டில்லை யோபகி ரண்டமுண்டு
தெழிக்குங் கடையுகக் காலவெங் கோபச்செந் தீயெழுந்து
கொழிக்கும்பொறியென்ன லாமிள வாடைக் கொடுந்துளியே.     [369]

பனிக்காலங் கண்டு வருந்தல்
துரகாது வாடிய மாறிநின் றாடிய சொக்கர்செம்பொற்
கரகால வேலன்ன கண்மடவா யென்ன காலவண்மை
யுரகா டவிமுடிப் பார்காவல் பூண்ட வொருவர்தந்த
விரகா னலம்வந்து வெம்பனி யாக வெளிப்பட்டதே.     [370]

இளவேனிற் காலங்கண்டு வருந்தல்
கந்தார வண்டிமிர் தார்க்கடம் பாடவிக் காவலர்நாட்
டுய்ந்தார் தனியிருந் தாற்றவல் லார்மல ரோடையும்பூஞ்
சந்தா டவியுந் தழையினஞ் சூகமுந் தைவந்ததோர்
மந்தா நிலமுங் கொணர்ந்திள வேனில் வழிப்பட்டதே.     [371]

கார்கண்டு வருந்தல்
அன்னம் பனிநடை யாயடி மாறிநின் றாடல்கண்டு
தென்னன் பரவுந் திருவால வாயர் திரையலம்பும்
பொன்னஞ் சடிலமு மைக்கான கண்டமும் போலெழுந்து
மின்னம் புயல்வந்த தன்பர்பொற் றேரின்ன மீண்டிலதே.     [372]

பருவ மன்றென்றல்
கறையிட்ட வேல்விழி யாய்பிரிந் தார்சொன்ன காலமுமன்
றுறையிட்ட காருமக் காரன்று காணுமை பாகர்தொல்லை
மறையிட்ட பாடல் மதுரேசர் சுந்தர மாறான்று
சிறையிட்ட நாண்முதற்றிங்கண்மும்மாரிதிளைப்பதுவே.     [373]

பாசறை யுருவெளி
சுற்றத் தொடுந்தொலை யத்தொலை யாரைத் தொலைத்தகள
முற்றத் தனிவந்து தோன்றுத லாலன்பர் மோகவெள்ளம்
வற்றக் கடை[க்]கணிப் பார்மது ராபுரி வாகைதருங்
கொற்றத் தனிக்கொடி யோவல வாநங் குலக்கொடியே.     [374]

விரைவது பயன்
கோடாப் புரவி யிரவிபொற் றேரொடு கூட்டிநமக்
கோடாப் புரவியைப் பூட்டினை யேபல வூழிசென்று
மாடாக் கடைமணி யார[ா]ல வாய்நண்ப வங்கிருந்து
வாடாத் தளரு மடந்தைக்கென் னாமிந்த வஞ்சனையே.     [375]

தலைவன் தேர்வர வுரைத்தல்
தொடைமணி யார்முலையீரா றெதிர்கொள் ளுஞ்சொக்கர்வெள்ளை
விடைமணி யோசை யொலிப்பது போற்கடல் வேலிநிலங்
கடைமணி யோசை கறங்காது காப்பவர் கைக்களிற்றின்
புடைமணி யோசை யிருசெவித் தாரையும் பூரித்ததே.     [376]

மறவாமை கூறல்
மனைக்கற் பகவல்லி யேயொரு காலு மறந்தொருகா
னினைக்கைக் கிடமில்லை யில்லைகண் டாய்சினை நீலவண்டு
கனைக்கக் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிநெடும்
பனைக்கைக் கடாசலம் பூச லறாதடும் பாசறைக்கே.     [377]

வினைமேற் பிரிவு முற்றும்.

VI உற்றுழிப் பிரிவு.

தலைவ னுற்றுழிப்பிரிந்தமை கூறல்
மருவா முயங்கி மயங்கிவற் றாவின்ப வாரிவெள்ளந்
தருவா ருனையும் பிரிந்தன ரால்முத் தமிழ்மதுரைத்
திருவால வாயர் திருப்பாத ராகிய தென்னர்தெவ்வைப்
பொருவார் புரிசையு நாடுமென் னாமின்று பூங்கொடியே.     [378]

பிரிவாற்றாமை கூறல்
காருட லாவள ருங்கடம் பாடவிக் காவலர்நாட்
டாருட லாவி யகன்றிருந் தாரச லக்கொடிபோ
லோருட லாகத் தவம்புரி யாத வுனக்குநெஞ்சே
யீருட லாயிருந் தாவிது வோவின்ன மெய்துவதே.     [379]

பருவங்கண் டிரங்கல்.
சிந்துஞ் சிறிய துளியரி தாமன்று சென்றவழி
வந்தும் புரவலர் வந்தில ரேமது மாரியும்பூங்
கொந்துந் தருங்கொன்றை யார்கூட னாயகர் கொற்கைமுத்துஞ்
சந்துந் தருமுலை யாயெங்ங னேவுயிர் தாங்குவதே.     [380]

உற்றுழிப் பிருவு முற்றும்.

VII. இணங்கலர்ப் பொருத்தல்.

இணங்கலர்ப் பொருத்தப் பிரிகின்றமை தலைவன் தோழிக்குரைத்தல்
போற்றா ரிருவர் பொருதடங் காதவெம் போர்தளரிவித்
தாற்றா விடிலுற வாட்சியென் னாம்வையை யாறடைக்க
மாற்றா வடிபடு வார்மது ரேசர்க்கு மாறுபட்ட
கூற்றா மதர்விழி யாய்குடை நீழற் குவலயத்தே.    [381]

தலைவன் பிரிந்தமை தோழி தலைவிக் குரைத்தல்
வணங்கா[ர்] வணங்க வனைகழற் கான மவுணர்தம்மி
விணங்க ரிணங்கு பரிசகன் றார்தம்மை யேத்துமன்பர்
குணங்கா தலித்திருப் பார்சொக்க நாயகர் கூடல்வண்டின்
கணங்கா தலிக்குஞ் சுருளள காடவிக் காரிகையே.     [382]

பருவங்கண் டிரங்கல்
தேர்முந் துவதென்று நாமிங்ங னேதவஞ் செய்யவின்று
கார்முந் துவதென்ன கைதவ மோகழைக் கானலில்நெற்
றூர்முந்து தண்பணை சூழ்மது ராபுரிச் சொக்கர்கைவேற்
போர்முந்து வேல்விழி யாய்நன்று காணம் புரவலர்க்கே.     [383]

தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
விருந்தாய்ப் பருமணற் சோறந்த நாளுண்டு வெந்துயர்க்கோர்
மருந்தாய்ப் புகுந்த மவுணர்வந் தார்கடல் வாரிவிட
மருந்தாக் களங்கறுப் பாரால வாயி லரிவையென்றுந்
திருந்தாய் பகைமன்னர் தம்மிலொன் றாய்வந்து சேவிக்கவே.    [384]

இணங்கலர்ப் பொருத்தல் முற்றும்.

VIII. பொருண்மேற் பிரிவு.

தலைவன் பொருள்வயிற் பிரிகின்றமை தோழி தலைவிக் குரைத்தல்
கறங்காழி வையத் தளவு படாவின்பங் காணினுமில்
லறங்கா ணினுமெவர் காண்பவ ரோவிடங் காரடங்கா
மறங்காலும் வேற்படை யார்மது ராபுரி வண்பொருளின்
புறங்காணு நெஞ்சத் தவரன்றி வேறு பொலன்கொடியே.     [385]

தோழி செலவழங்குவித்தல்
பொறியா டரவம்பொறுத்த மண்ணேழும் பொருத்ததொங்கல்
வெறியாடு குங்குமத் தோளண்ண லேபுள்ளி வெள்ளைநிலா
மறியாடு செங்கை மதுரைப்பிரான் பொருள் வண்மையையன்
றறியாம் லோகொடுத் தாருடல் பாதியு மம்பிகைக்கே.     [386]

தலைவன் பொருள்வயிற் பிரிந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
தொடைக்கடங் காத புயத்தா ரழகிய சொக்கர்கைவேற்
கடைக்கடங் காத கயல்விழி யாயெதிர் கண்டவன்றே
யிடைக்கடங் காத தனந்தள ராம லிருக்கவுங்கள்
கொடைக்கடங் காத தனந்தன மாளங் குருசிலுக்கே.    [387]

மாலைப்பொழுது கண்டு வருந்தல்
திருந் தாத தொண்டு திருத்திய தேசிகத் தெள்ளமுதாய்க்
குருந்தாய நிழல் புகுந்திருப் பார்தமிழ்க் கூடல்விண்ணோர்
அருந்தா வமுதனை யாயன்பர் போகவு மாருயிர்கொண்
டிருந்தா ருயிருண்ண வோவந்தி மாலையெதிர்ப்பட்டதே.     [388]

பனிக்காலங் கண்டு வருந்தல்
துறப்பார் தொழுகழற் கால்மது ராபுரிச் சொக்கர்நன்னாட்
டறப்பா தகமென்செய் தோநெஞ்ச மேயறத்தோடுதம்மை
மறப்பார் மறப்பதை முன்னறி யாத மனத்தொடும்பெண்
பிறப்பா ரொருவர்க்கு மோபனிக் காலம் பெரும்பிழையே.     [389]

இரவினீட்டம்
மீளா விரவி தடந்தேரு மின்னமு மீண்டுசென்ற
கேளா மவர்வருங் காலமு மாய்நவ கீதம்வல்லாற்
காவாய் விறகுவிற் பாரால வாயி லதுவுமொரு
நாளாய் விடிவதுண் டோகங்குல் யாமம் நடந்தெமக்கே.     [390]

தலைவியைத் தோழி தெளித்தல்
வையும் புலவு மறாமழு வாளர் மதுரையில்நீ
நையுங் கவலைப் படுவதென் னோவொரு நாளிரவி
கொய்யுங் கலியுளை மான்றேர் திரிந்து குடக்கெழினும்
பொய்யும் புகல்வதுண் டோவணங் கேநம் புரவலரே.     [391]

தலைவியைத் தலைவன் சுரத்திடை நினைதல்
நனையா ரளக நறுங்காரு முத்த நகையுமொன்றும்
புனையாது சோபை தரும்புண்ட ரீகமும் பொற்புயத்திற்
கணையாழி மான்புரப் பார்கடம் பாடவிக் கள்விகொண்டு
நினையாமுன் னெஞ்சம் புகுந்தன ளாலென் னினைவதுவே.     [392]

தலைவன் சுரத்திடை நெஞ்சொடு கூறல்
மருட்பா லவரறி யாமது ரேசர் மனங்கவலா
வருட்பா லவரொரு நால்வருக் கோதிய வாகமத்தின்
பொருட்பா லறமுத லாகவெல் லாந்தரும் பொன்னைவிட்டுத்
தெருட்பால தோமன மேயிடை யேயொன்று தேடுவதே.     [393]

தலைவன் தலைவிவருத்தம் நினைந்து கூறல்.
ஆலைத் துழனி யறாவால வாய ரணிநகர்சூழ்
சோலைக் குருகிளஞ் சேவலெல் லாந்[தொக்கி]ருக் குங்கங்குல்
வேலைக் கலவி மறவாது சேக்கை விரும்பிச்செல்லு
மாலைப் பொழுதுகண் டாலுய்யு மோவென் மடமயிலே.     [394]

சாரொடு கூறல்
முளையிட்ட முத்த முகிணகை யார்திரு முன்பினந்தே
ருளையிட்ட வாம்பரி முன்செல்வை யோநறை யோதியர்க்கு
வளையிட்ட சொக்கர் மதுரேசர் சுந்தர மாறான்று
தளையிட் டவருன்னை விட்டில ராகிற் சலமுகிலே.     [395]

தோழி தலைவிக்குப் பொருள் வரவுரைத்தல்
இற்பா லறமுந் தொலையாத வின்பமு மெய்துவிக்கும்
பொற்பாய செவ்விப் பொருளுட னேபுலம் பூழிபட
மற்பா வியபுயத் தார்மது ரேசர் வடித்தசங்கச்
சொற்பா வலர்புகழ் தோன்றல் பொற்றேர்வந்து தோன்றியதே.     [396]

தலைவன் வருத்தந் தீர்த்து கூறல்
தோட்டுச் சுரிகுழ லாரின்ப வாரி துளும்புமுலை
மோட்டுத் தடம்படிந் தாடியுய்ந் தேனலை மோதுசடைக்
காட்டிற் கமழ்கொன்றை யார்கடம் பாடவிக் கன்னிப்பொருள்
வேட்டுச் சுடுசுரம் போய்வினை யேனுற்ற வெவ்வழற்கே.     [397]

பொருண்மேற் பிரிவு முற்றும்.

IX. ஓதற் பிரிவு.

தலைவன் தோழிக் கோதற் பிரிவுணர்த்தல்
நாவித் தகர்சென் றிருந்தமை யாவிய னாடியன்று
பாவித்த சங்கப் பலகையின் கீழுழை பார்த்திரங்குங்
தரவித் தடங்கணல் லாய்கடம் பாடவிக் கண்ணுதல்போய்ச்
சேவித்து நிற்குந் தமிழ்க்கெதி ராயென்கொல் தேடுவதே.     [398]

தோழி தலைவன் பிரிந்தமை தலைவிக்குரைத்தல்
கொல்வாற் செயலறி யாக்கொடுஞ் சூலத்தர் கூடனல்லாய்
மல்லாற்கு[ந்] தோனண்ணவ் வாய்மைநன் றேமுத்தர் வாய்திறந்து
சொல்லாப் பொருளு மறமுமண் ணாளத் துணிபொருளு
மெல்லாப் பயனுந் தருங்கல்வி யாமென்ப தெண்ணினரே.     [399]

தலைவி பிரிவாற்றாமை கூறல்
மணந்தாழ் சடையர் மதுரா புரியின் மனக்கவலை
கொணர்ந்தாவி கொள்ளை கொளும்பிரிவேகுழை யக்குழையப்
புணர்ந்தா ருயிரிரு வர்க்குமொன் றாமென்று பொய்மொழிந்து
தணந்தா ரையுமறி யாயிருந் தாரையென் சாதிப்பதே.     [400]

தலைவன் வந்தமை தோழி தலைவிக்குரைத்தல்
வேய்வந்த தோளி தடாதகை சாபம் விடுத்தவளுக்
காய்வந் தரசிருப் பாரால வாய்முருந் தாயரும்புந்
தூய்வந்த மூரற் றுடியிடை யாயென்ன சோபனமோ
போய்வந்த துன்ற னிறைவர்பொற் றேரும் புரவியுமே.     [401]

கலந்துழி மகிழ்தல்: தலைவன் துறவு நினைதல்
வாழிப் புவனந் தொழுமது ரேசர் வரசரணச்
சூழிக் கமலந் தொழுநெஞ்ச மேயுயிர் தொக்கடங்கு
மூழிக் கடைசென்று மானந்த வாரமு தூறவின்ப
வாழிக்கு மான வருங்கல மாமிவ் வருந்ததியே.     [402]

காழிக் கவுணியக் கன்றுண்ட பான்முலைக் கண்ணியடிச்
சூழிக் கமலமுந் தாமணிந் தார்விண் சுருட்டுதிரை
யாழிக் கடலமைத் தாரால் வாயுறை யத்தர்மற்றை
வாழிக் கமல மெனக்களித் தாரடி மாறிவைத்தே.     [403]

ஓதற் பிரிவு முற்றும்.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.