LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

கொம்பன் காற்று

 

உசும்பு காற்று.
ஒருமாதிாி தலையைச் சவட்டி....
கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல
முழிசி மிலாந்தி...
பிச்சைக்காரச் சிறுமியின் மயிராய்
முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற
பச்சை சிவப்பு
குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி...
ஈரும்
ஒட்டும்
தேடித் தேடி
பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை ஒத்ததாய்
நீக்கி விலக்கி...
இவர்
காலம் இல்லாக் காலம் வந்த
மனிதர்!
என்னவோ எதையோ நினைத்துக்கொண்டு
நீண்ட நாட்களாய்
மிக நீண்ட நாட்களாய்
கோழி திருடிய கள்ளனைப்போல
நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல்
மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான். 
பூவைப் பார்க்கிறார்.
புல்லைப் பார்க்கிறார்.
புல்லின் ஓலையில் முட்டையிடுகிற
கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும்
இந்த மனிதர் நினைத்த மாதிாி
அழுகவுமில்லை.
அழியவுமில்லை.
பழுக்கவுமில்லை.
புழுக்கவுமில்லை.
மனிதர் திகைத்து என்னை நோக்கினார்.
கரப்பான் பூச்சியை உறுஞ்சிக் குடிக்கிற
சீனாக்காரனின் எழுத்தின் தோதாய்
வானம் முழுக்க ஒட்டியும் விலகியும்
அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து
நான் மருண்டிருந்தேன்.
நான் மருண்டிருந்தேன். 
உச்சந் தலையால் நடக்க நினைத்தவர்
குப்பற விழுந்தார்,
எனினும் மீசையில்
மண்பட வில்லைபோல் நாலு பூக்களை
கிள்ளியெறிந்தார்.
அவையும்
காய்ந்து போன சருகுச் சுக்குகள்.

 

உசும்பு காற்று.

ஒருமாதிாி தலையைச் சவட்டி....

கொச்சிக்காய் கடித்த பாலரசிபோல

முழிசி மிலாந்தி...

 

பிச்சைக்காரச் சிறுமியின் மயிராய்

முடிச்சுக் கட்டிச் சுருண்டு கிடக்கிற

பச்சை சிவப்பு

குரோட்டன் இலைகளைத் தொட்டுத் தடவி...

 

ஈரும்

ஒட்டும்

தேடித் தேடி

பெண்டுகள் பேன்பார்க்கும் விதத்தை ஒத்ததாய்

நீக்கி விலக்கி...

 

இவர்

காலம் இல்லாக் காலம் வந்த

மனிதர்!

 

என்னவோ எதையோ நினைத்துக்கொண்டு

நீண்ட நாட்களாய்

மிக நீண்ட நாட்களாய்

கோழி திருடிய கள்ளனைப்போல

நின்ற இடத்திற்கும் விசளம் சொல்லாமல்

மாயமாய் மறைந்த திண்டான் பாஞ்சான். 

 

பூவைப் பார்க்கிறார்.

புல்லைப் பார்க்கிறார்.

புல்லின் ஓலையில் முட்டையிடுகிற

கைக்குச் சிறுத்த வெண்ஈ வரைக்கும்

இந்த மனிதர் நினைத்த மாதிாி

 

அழுகவுமில்லை.

அழியவுமில்லை.

பழுக்கவுமில்லை.

புழுக்கவுமில்லை.

 

மனிதர் திகைத்து என்னை நோக்கினார்.

கரப்பான் பூச்சியை உறுஞ்சிக் குடிக்கிற

சீனாக்காரனின் எழுத்தின் தோதாய்

வானம் முழுக்க ஒட்டியும் விலகியும்

அழகு தருகிற வெள்ளியைப் பார்த்து

நான் மருண்டிருந்தேன்.

நான் மருண்டிருந்தேன். 

 

உச்சந் தலையால் நடக்க நினைத்தவர்

குப்பற விழுந்தார்,

எனினும் மீசையில்

மண்பட வில்லைபோல் நாலு பூக்களை

கிள்ளியெறிந்தார்.

அவையும்

காய்ந்து போன சருகுச் சுக்குகள்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.