LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு

 

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது. 
நூல்
தோழி அறத்தொடு நிற்றல்
அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத
லொலிமென் கூந்தலென் றோழி மேனி 
விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ 
யகலு ளாங்க ணறியுநர் வினாயும் 
பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் 5
வேறுபல் லுருவிற் கடவுட் பேணி
நறையும் விரயு மோச்சியு மலவுற்
றெய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும்
புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு 10
முட்கரந் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்  
தலைவியின் அன்பு மிகுதி
முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் 15
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த 
லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் 
மாதரு மடனு மோராங்குத் தணப்ப
நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி 20
யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
நாமறி வுறாலிற் பழியு முண்டோ
வாற்றின் வாரா ராயினு மாற்ற
வேனையுல கத்து மியைவதா னமக்கென 
மானமர் நோக்கங் கலக்கிக் கையற் 25
றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு  
மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல
மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் 
வினையிடை நின்ற சான்றோர் போல 
விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும 30
வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா
தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை
நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்
செப்ப லான்றிசிற் சினவா தீமோ  
தினைப்புனம் காத்த வகை
நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை 35
முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத் 
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர 
னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி
யெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த 40
புலியஞ் சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலத்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங்
கிளிகடி மரபின வூழூழ் வாங்கி 
யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து 45
சுனையில் நீராடல்
விசும்பாடு பறவை வீழ்பதிப் படர
நிறையிரும் பெளவங் குறைபட முகந்துகொண்
டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு
நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி 50
யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ
யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின் 
மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென 
வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ 
ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் 55
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்
பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவர 60
யுள்ளகஞ் சிவந்த கண்ணேம்  
பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்
வள்ளித
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை 
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள 65
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70
விரிமல ராவிரை வேரல் சூரல் 
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி 
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங் 75
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை 
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் 
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை 80
ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க 85
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை 
யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை 
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி 
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு 95
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் 
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்  
தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக 100
கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்
பைவரி யல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் 105
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக  
தலைவனது வருகை
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி 
யீரம் புலர விரலுளர்ப் பவிழாக்
காழகி லம்புகை கொளீஇ யாழிசை 110
யணிமிகு வரமிஞி றார்ப்பத் தேங்கலந்து 
மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் 
மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்
வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய
தண்ணறுத் தொடையல் வெண்போழ்க் கண்ணி 115
நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப்
பைங்காற் பித்தகத் தாயித ழலரி 
யத்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ
யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ
யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்த 120
மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்
தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலியச்
செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின் 
வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து 
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி 125
யியலணிப் பொலிந்த வீகை வான்கழ 
றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ  
தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்
முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் 
பகைபுறங்க் கண்ட பல்வே லிளைஞரி
னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு 130
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா 
மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர  
தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல
மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் 135
தாகாண் விடையி னணிபெற வந்தெ 
மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
யசைமென் சாய லவ்வாங் குந்த 140
மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
கெடுதியு முடையே னென்றென னதனெதிர்
சொல்லே மாதலி னல்லாந்து  
தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்
கலங்கிக்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லிய வீரென 145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதவி ழலரித் தாசினை பிளந்து
தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் 150
கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்
சொல்லற் பாணி நின்றன னாக  
யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை
விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப்
பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத்
தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து 155
சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்
திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா
தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக்
குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக்
கணைவிடு புடையூக் கானங் கல்லென 160
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக 
விரும்பிணர்த் தடக்கை யுருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு
மையல் வேழ மடங்கலி னெதிர்தர 165
வுய்விட மறியே மாகி யொய்யெனத்
திருத்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து 
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் 
சூருறு மஞ்ஞையி னடுங்க  
யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்
வார்கோ
லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிச 170
யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் 
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் 
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர்  
நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை
நெடுவே 
ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் 175
திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய 
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ 
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை 
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை
யஞ்சி லோதி யசையல் யாவது 180
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென 
மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கன  
தலைவி தலைவனுடன் கூடிய நிலை
னந்நிலை
நாணு முட்கு நண்ணுவழி யடைதர
வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ 185
யாக மடைய முயங்கலி னவ்வழிப்
பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை 
முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் 
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி
னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற. 190
னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி 
யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள்
கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
வரையர மகளிரிற் சாஅய் விழைதக 195
விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட்
டண்கம ழலரி தாஅய் நன்பல
வம்புவிரி களித்திற் கவின்பெறப் பொலிந்த 
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற  
இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை
லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு 200
சாறயர்த் தன்ன மிடாஅச் சொன்றி 
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப 
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்
வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு 205
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்
கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை 
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு
தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி 210
யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந்
தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி 
வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும் 
பூமலி சோலை யப்பகல் கழிப்பி
யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் 215
பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய  
மாலைக்காலத்தின் வருகை
மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங்
கன்றுபயிர் குரல மன்னுநிறை புகுதர
வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி
லோங்கிரும் பெண்ணை யகமட லகவப் 220
பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல 
ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற 
வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப் 
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி 
யந்தி யந்தண ரயரக் கானவர் 225
விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த 
வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச்
சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ 230
தலைவன் பெயர்ந்த நிலை
நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட்
கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென 
வீர நன்மொழி தீரக் கூறித்
துணைபுண ரேற்றி னெம்மோடு வந்து 235
துஞ்சா முழவின் மூதூர் வாயி
லுண்டுறை நிறுத்தப் பெயர்ந்தன  
தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்
னதற்கொண் 
டன்றை யன்ன விருப்போ டென்று 
மிரவரன் மாலைய னேவரு தோறுங்
காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு 240
நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்
பெறாஅன் பெயரனு முனிய லுறாஅ 
னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் 
றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் 245
மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி
நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா 
வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க
ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும்
வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய் 250
நினைத்தொறுங் கலுழுமா லிவளே  
இரவில் தலைவன் வரும் வழியின் அருமை
கங்கு 
லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் 
புகற்கோட் டாமான் புகல்வியுங் களிரும் 
வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் 
துருமுஞ் சூரு மிரைதே ரரவமு 255
மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங்
கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் 
பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் 
வழுவின் வழாஅ விழுமமவர்
260
குழுமலை விடரக முடையவா லெனவே.  
குறிஞ்சிப்பாட்டு முற்றும்.
தனிப் பாடல்கள்
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; 
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று 
அருவி கொழிக்கும் அணி மலை நாடன் 
தெரியுங்கால், தீயது இலன். 1
ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப் 
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற 
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின் 
குறையாக் குறிஞ்சிக் குணம். 2

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது. 
நூல்

தோழி அறத்தொடு நிற்றல்

அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுதலொலிமென் கூந்தலென் றோழி மேனி விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ யகலு ளாங்க ணறியுநர் வினாயும் பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் 5வேறுபல் லுருவிற் கடவுட் பேணிநறையும் விரயு மோச்சியு மலவுற்றெய்யா மையலை நீயும் வருந்துதிநற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும்புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு 10முட்கரந் துறையு முய்யா வரும்படர்செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்  

தலைவியின் அன்பு மிகுதி

முத்தினு மணியினும் பொன்னினு மத்துணைநேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் 15மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த லாசறு காட்சி யையர்க்கு மந்நிலையெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்பநெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி 20யிருவே மாய்ந்த மன்ற லிதுவெனநாமறி வுறாலிற் பழியு முண்டோவாற்றின் வாரா ராயினு மாற்றவேனையுல கத்து மியைவதா னமக்கென மானமர் நோக்கங் கலக்கிக் கையற் 25றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு  

மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல

மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும 30வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணாதெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினைநிகழ்ந்த வண்ண நீநனி யுணரச்செப்ப லான்றிசிற் சினவா தீமோ  

தினைப்புனம் காத்த வகை

நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை 35முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பியெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த 40புலியஞ் சிதண மேறி யவணசாரற் சூரற் றகைபெற வலத்ததழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங்கிளிகடி மரபின வூழூழ் வாங்கி யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து 45

சுனையில் நீராடல்

விசும்பாடு பறவை வீழ்பதிப் படரநிறையிரும் பெளவங் குறைபட முகந்துகொண்டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடுநிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி 50யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎயொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின் மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் 55தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழிநளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவர 60யுள்ளகஞ் சிவந்த கண்ணேம்  

பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்

வள்ளிதழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சிசெங்கொடு வேரி தேமா மணிச்சிகை யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள 65மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்வடவனம் வாகை வான்பூங் குடசமெருவை செருவிளை மணிப்பூங் கருவிளைபயினி வானி பல்லிணர்க் குரவம்பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70விரிமல ராவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரிசெருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங் 75கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்தறாழை தளவ முட்டாட் டாமரை 80ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடிசேடல் செம்மல் சிறுசெங் குரலிகோடல் கைதை கொங்குமுதிர் நறுவழைகாஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க 85மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டிவஞ்சி பித்திகம் சிந் துவாரம்தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90நந்தி நறவ நறும்புன் னாகம்பாரம் பீரம் பைங்குருக் கத்தி யாரங் காழ்வை கடியிரும் புன்னைநரந்த நாக நள்ளிரு ணாறிமாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு 95மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் மாலங் குடைய மலிவன மறுகிவான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்  

தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக 100கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்பைவரி யல்குற் கொய்தழை தைஇப்பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டியெரியவி ருருவி னங்குழைச் செயலைத் 105தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக  

தலைவனது வருகை

வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்தண்ணறுந் தகரங் கமழ மண்ணி யீரம் புலர விரலுளர்ப் பவிழாக்காழகி லம்புகை கொளீஇ யாழிசை 110யணிமிகு வரமிஞி றார்ப்பத் தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇயதண்ணறுத் தொடையல் வெண்போழ்க் கண்ணி 115நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப்பைங்காற் பித்தகத் தாயித ழலரி யத்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீயொண்பூம் பிண்டி யொருகாது செரீஇயந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்த 120மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலியச்செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின் வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி 125யியலணிப் பொலிந்த வீகை வான்கழ றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ  

தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்

முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் பகைபுறங்க் கண்ட பல்வே லிளைஞரினுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு 130முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலிதிளையாக் கண்ண வளைகுபு நெரிதரநடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர  

தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல

மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் 135தாகாண் விடையி னணிபெற வந்தெ மலமர லாயிடை வெரூஉத லஞ்சிமெல்லிய வினிய மேவரக் கிளந்தெமைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடியசைமென் சாய லவ்வாங் குந்த 140மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்தகெடுதியு முடையே னென்றென னதனெதிர்சொல்லே மாதலி னல்லாந்து  

தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்

கலங்கிக்கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடுசொல்லலும் பழியோ மெல்லிய வீரென 145நைவளம் பழுநிய பாலை வல்லோன்கைகவர் நரம்பி னிம்மென விமிருமாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்ததாதவி ழலரித் தாசினை பிளந்துதாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் 150கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்சொல்லற் பாணி நின்றன னாக  

யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை

விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப்பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத்தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து 155சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனாதரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக்குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக்கணைவிடு புடையூக் கானங் கல்லென 160மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக விரும்பிணர்த் தடக்கை யுருநிலஞ் சேர்த்திச்சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்புமையல் வேழ மடங்கலி னெதிர்தர 165வுய்விட மறியே மாகி யொய்யெனத்திருத்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க  

யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்

வார்கோலுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிச 170யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லாதயர்ந்துபுறங் கொடுத்த பின்னர்  

நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை

நெடுவே ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் 175திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடேஎ நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகையஞ்சி லோதி யசையல் யாவது 180மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்தென்முக நோக்கி நக்கன  

தலைவி தலைவனுடன் கூடிய நிலை

னந்நிலைநாணு முட்கு நண்ணுவழி யடைதரவொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ 185யாக மடைய முயங்கலி னவ்வழிப்பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவினெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற. 190னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள்கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்வரையர மகளிரிற் சாஅய் விழைதக 195விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட்டண்கம ழலரி தாஅய் நன்பலவம்புவிரி களித்திற் கவின்பெறப் பொலிந்த குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற  

இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை

லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு 200சாறயர்த் தன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப்பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு 205விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகைநின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுதேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி 210யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந்தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும் பூமலி சோலை யப்பகல் கழிப்பியெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் 215பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய  

மாலைக்காலத்தின் வருகை

மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங்கன்றுபயிர் குரல மன்னுநிறை புகுதரவேங்குவயி ரிசைய கொடுவா யன்றிலோங்கிரும் பெண்ணை யகமட லகவப் 220பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி யந்தி யந்தண ரயரக் கானவர் 225விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச்சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத்துனைஇய மாலை துன்னுதல் காணூஉ 230

தலைவன் பெயர்ந்த நிலை

நேரிறை முன்கை பற்றி நுமர்தரநாடறி நன்மண மயர்கஞ் சின்னாட்கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென வீர நன்மொழி தீரக் கூறித்துணைபுண ரேற்றி னெம்மோடு வந்து 235துஞ்சா முழவின் மூதூர் வாயிலுண்டுறை நிறுத்தப் பெயர்ந்தன  

தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்

னதற்கொண் டன்றை யன்ன விருப்போ டென்று மிரவரன் மாலைய னேவரு தோறுங்காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு 240நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும்வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்பெறாஅன் பெயரனு முனிய லுறாஅ னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் 245மாய வரவி னியல்புநினைஇத் தேற்றிநீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்கணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும்வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய் 250நினைத்தொறுங் கலுழுமா லிவளே  

இரவில் தலைவன் வரும் வழியின் அருமை

கங்கு லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் புகற்கோட் டாமான் புகல்வியுங் களிரும் வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் துருமுஞ் சூரு மிரைதே ரரவமு 255மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங்கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமுநூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் வழுவின் வழாஅ விழுமமவர்260குழுமலை விடரக முடையவா லெனவே.  

குறிஞ்சிப்பாட்டு முற்றும்.

தனிப் பாடல்கள்

நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று அருவி கொழிக்கும் அணி மலை நாடன் தெரியுங்கால், தீயது இலன். 1
ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின் குறையாக் குறிஞ்சிக் குணம். 2

by Swathi   on 29 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
19-Feb-2015 04:55:16 நிதிஷ் குமார் said : Report Abuse
நல்ல குறிஞ்சிபட்டு எனக்கு பிடித்திருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.