LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    கட்டுரை/தொடர்கள் Print Friendly and PDF

மாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு

வணக்கம்,

உலகத்தின் மிகச்சிறந்த மன மகிழ் கலையான மந்திர வித்தை கலையை வலைத்தமிழ் நேயர்களுக்கு சமர்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

என்று மனிதன் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினானோ அன்றே மந்திரக்  கலை உருவாகி விட்டது. புராணங்களிளும் இதிகாசங்களிலும் மந்திர கலை ஒரு அம்சமாக பின்னி பிணைந்து இருக்கிறது.

எரியும் நெருப்பின் உள்ளே புகுந்து வெளி வருவது, நீரின் மேல் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது, பூமிக்கு உள்ளே உயிருடன் புதைந்து கிடந்து பிறகு வெளிவருவது இவைகள் மந்திரவாதிகளின் செயல்திறனின் வெளிபாடாக இருந்தது.

நெருப்பு, ஆகாயம், காற்று, பூமி, கடல் இவற்றில் நிகழும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து அவனுடைய விருப்பதிற்கு இணங்க ஆட்டுவிப்பவனாக உலகுக்கு சொல்லிக் கொள்பவன் உலகின் தலை சிறந்த மந்திரவாதியாக உலகத்தாரால் சொல்லப் படுகிறான்.

எகிப்திய அரசர்கள் காலத்தில் மந்திர குருமார்களும்,  மந்திரவாதிகளும், ஜோசியத்தின் துணையுடன் அரசர்களை தங்களுடைய கைப்பாவையாக ஆக்கி தங்களுடைய விருப்பத்திற்கு திரை மறைவில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வந்தார்கள்.

எகிப்து நாட்டு மன்னர்களின் சபையில் உலக மகா மந்திர வித்தை வித்தகர்கள் இருந்ததாக தெரியவருகிறது. பைபிளில் இதை பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆரானும், மோஸஸ்சும், ஜேன்ஸ், ஜாம்பஸ் என்ற இரு மந்திர விற்பன்னர்களை எகிப்து நாட்டு பாரோவின் அரசவையில் எதிர் கொண்டதாக தெரியவருகிறது.  

எகிப்த்தின் சியாப் அரசன் அரசவையில் டெடி என்ற மந்திரவாதி வாத்தின் தலையை வெட்டி தனியாக எடுத்து பிறகு ஒன்று சேர்த்து வாத்தை உயிருடன் ஓட விட்டார் என்று 1700 கி.மு. வில் எழுதிய வெஸ்ட்கார் பாபிரஸ் புத்தகங்களில் சொல்லபட்டிருக்கிறது.

நமது பாரத கண்டத்தில் மந்திர வித்தை ஒரு முக்கிய கலையாக பழங்காலத்தில் விளங்கியது. தேவர்களின் தலைவனான இந்திரன் மந்திரக் கலையின் கடவுளாக கருதபெருகிறான்.  மந்திர கலை இந்திர ஜாலம் என்று புராணங்களில் வருணிக்கபட்டிருக்கிறது.

இந்தியாவின் கிண்ணப் பந்துகள் வித்தை, சைனாவின் கூடிப்பிரியும் வளையங்கள், இந்திய கூடை வித்தை இவைகள் எப்பொழுது பிறந்தன என்று சொல்லமுடியாது.

இந்த மந்திரக்கலை வரலாற்றின் தொடர்ச்சியை வரும் இதழ்களிள் தொடருவோம்...

by Swathi   on 09 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல்
குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர் குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்
இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது. இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது.
அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா?  உண்மையாகவா?  -மு.சிவலிங்கம் அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா? உண்மையாகவா? -மு.சிவலிங்கம்
மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன? மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன?
மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன் மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.