LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்!

உணவு செய்தோம்
ஆடை நெய்தோம்
வீடு கட்டினோம்
வாகனம் தயாரித்தோம்
வசதிகளை பெருக்கினோம்
விண்ணையும் மண்ணையும்
ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம்

எல்லாவற்றிலும்
மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது

மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய
மண்ணில்
மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப
மாறி இருப்பதன் யதார்த்தத்தில்
எப்படி
சுயத்தை திணிக்கிறோம்?

இது நீ
இது நான்
அவ்வளவு புரிந்திருந்திருந்தால்
ரத்தத்தில் நம்
பூமி நனைந்திருக்காது..

வெட்டிய தலைக்கு
வெற்றி நிகழ்ந்திருக்காது

வெட்டும் கைகளில்
கண்ணீர் சொட்டப் பார்
நீயும் நானும் வேறு வேறா?

உனது நோக்கமும்
எனது நோக்கமும் வேறு வேறா ?

நீ எதை நோக்கிப் புறப்பட்டாயோ
அதை அடையத் தானே நானும் பயணிக்கிறேன் (?)
பிறகு ஏன்
உனக்கும் எனக்கும் மதவாதம்?

நீ வேறு சட்டை போட்டிருக்கிறாய்
நான் வேறு போட்டிருக்கிறேன்
நமக்கு
ஆடை அணிவித்தவர்கள் நாமாக இருக்கலாம்,
ஆடை செய்தவர்கள் நாமல்லவே (?)

ஒவ்வாமை உண்டெனில்
சீர் செய்தல் நியாயமா
உடம்பை அறுத்தல் நியாயமா?

சிந்தியுங்கள்

சிந்தியுங்கள் தோழர்களே
மதம் வேண்டுமோ வேண்டாமோ
அது அவரவர் மனது ஏற்றதன் புரிதல்படி
இருந்துபோகட்டும் -

ஆனால் உயிர் வேண்டும்
வாழ்தல் எல்லோருக்குமே வரம்
இறப்பு எல்லோருக்குமே பொது
போனால் -
திரும்ப கிடைக்காத உயிர்
வாழும் அத்தனைப்பேருக்குமே பெரிது..

பர்மாவில் இல்லை
எங்கே யார் யாரைக் கொன்றாலும்
கொலையை மிஞ்சியதொரு
பாதகமில்லை,

மீட்க முடியாததை
தொலைப்பதற்கு யாருக்கிங்கே உரிமையுண்டு?

போடுங்கள்
அத்தனைப்பேருமே
ஆயுதங்களைப் போட்டுவிடுங்கள்,

கடவுள் என்பது ஒரு தெளிவு நிறையும் புள்ளி
நிறைவு புரியுமிடம்
சமநிலை கலையாத பொது
சரிசமம்
நடுநிலை
நடுநிலை என்பதே 'வேண்டிய அறிவின் முக்தி
பிறஉயிர் காத்தலே பொதுநிலை
இறைநிலை
இறைநிலைக்கு
பொது நிலைக்கு உயிர் கொடுக்கலாமா?

உயிர் எவ்வளவு பெரிது தெரியுமா?
தெரியவேண்டுமெனில்
செய்யவேண்டாம் சிந்தித்துப் பாருங்கள்
உங்கள் கைகளால் உங்களின் தாயை
வெட்ட முடியுமா ?
உங்கள் கைகளால்
உங்களுடையப் பிள்ளையை சுட்டுக் கொல்ல கைவருமா?
வராதில்லையா ?
வராதெனில் அதுதான் ஒரு உயிரின் விலை

அதை எடுக்க
எதற்கும்
யாருக்குமே உரிமையில்லை
 
கடவுள் மதம் எல்லாமே
கற்றறிந்த அறிவு படி -நாம்
கற்றுக் கொண்டது தான்., ஆனால்
உயிர் கற்றது அல்ல மாற்றிக்கொள்ள
பெற்றது
பெற்றதை பேணிக்காப்பதே
பொதுக்கடன்
அழிப்பதல்ல..,

கண்டிப்பாக யாரையும்
அழிப்பதல்ல..

 

by Swathi   on 04 Jun 2015  0 Comments
Tags: Matham Kavithai   Jathi Matham Kavithai   சாதி மதம் கவிதை   மதம் கவிதை   மனிதம்        
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.