|
|||||
விரைவில் ஸ்கைப்பில் டிரான்ஸ்லேட் ஆப்ஷனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட் !! |
|||||
இன்டர்நெட் பயனாளர்களுக்கு ஸ்கைப் பற்றி தெரியாமல் இருக்காது, அந்த அளவுக்கு ஸ்கைப்பின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஸ்கைப்பை பயன்படுத்தி உலகம் எங்கும் இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோ கால் செய்யலாம்.. இதன் எதிர்காலத்தை அறிந்த மைக்ரோசாப்ட் ஸ்கைப்பை விலைக்கு வாங்கியது. தற்போது அதில் தொடர்ந்து பல புது மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக விரைவில் ஸ்கைப் மொழியினை டிரான்ஸ்லேட்(Translate) செய்யும் டூலை ஸ்கைப்புக்கு அப்டேட் தர இருக்கின்றது. இதன்மூலம் ஸ்கைப்பில் பாஷை தெரியாதவரிடமும் நீங்களா் உரையாடலாம் நீங்கள் உங்களது மொழியில் பேசினால் பேசுபவருக்கு அவரது மொழியில் கேட்கும். அதாவது ஸ்கைப்பில் நீங்கள் ஒருவருடன் தமிழில் உரையாடினால் அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்றால் Language Mode ல் English என்று அவர் மாற்றினால் போதும். அவருக்கு நீங்கள் பேசும் மொழி ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த ஆண்டுக்குள் இதற்கான அப்டேட் அனைத்து ஸ்கைப் அக்கவுன்ட் யூஸர்ஸூக்கும் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. |
|||||
by Swathi on 29 May 2014 0 Comments | |||||
Tags: ஸ்கைப் Skype instant translator Skype | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|