LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-100

3.100.திருத்தோணிபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோணியப்பர். 
தேவியார் - திருநிலைநாயகியம்மை. 
3872 கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்
காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்த
வற்புதஞ் செப்பரிதால்
பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு
பேர்த்தவர் சேர்ந்தவிடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்
தோணிபுரந்தானே
3.100.1
சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும். 
3873 கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க்
கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும்
பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென்
சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே
3.100.2
இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில் புகுந்து என் வநையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றுருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3874 மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு
மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தௌயநின் றாடி யேறூர்
தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்ட
வொருவர்க் கிடம்போலுந் 
துத்தநல் லின்னிசை வண்டு பாடுந்
தோணி புரந்தானே
3.100.3
மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தௌயச் சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து உஎனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3875 வள்ள லிருந்த மலையத னைவலஞ்
செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன்
றெடுத்தோ னுரநெரிய
மௌள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார்
மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்த
தோணி புரந்தானே
3.100.8
வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும் வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வரவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மித்ந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3876 வெல்பற வைக்கொடி மாலு மற்றை
விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய
தாய்ப்ப ணிந்தஞ்
செல்வறநீண்டெஞ் சிந்தைபொண்ட
செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத்
தோணி புரந்தானே
3.100.9
கருடக்கொடிடையு திருமாலும், நறுமணமிக்க தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே அகழ்ந்து கென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்த ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3877 குண்டிகை பீலி தட்டோடு நின்று
கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி
யூணரும் வாய்மடிய 
இண்டை புனைந்தெரு தேறிவந்தெ
னெழில்கவந் தாரிடமாம்
தொண்டிசை பாட லறாத தொன்மைத்
தோணி புரந்தானே
3.100.10
கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகிய வற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 
3878 தூமரு மாளிகை மாட நீடு
தோணி புரத்திறையை
மாமறை நான்கினொ டங்க மாறும்
வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞான
சம்பந் தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார்
பார்முழு தாள்பவரே
3.100.11
தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நானகு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப் பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக் நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டிட நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்க.ள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர் 
திருச்சிற்றம்பலம்

3.100.திருத்தோணிபுரம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தோணியப்பர். தேவியார் - திருநிலைநாயகியம்மை. 

3872 கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்காரிகை மாட்டருளிஅரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்தவற்புதஞ் செப்பரிதால்பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டுபேர்த்தவர் சேர்ந்தவிடஞ்சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்தோணிபுரந்தானே3.100.1
சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும். 

3873 கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க்கோமள மாதுமையாள்பங்கிய லுந்திரு மேனி யெங்கும்பால்வெள்ளை நீறணிந்துசங்கியல் வெள்வளை சோர வந்தென்சாயல்கொண் டார்தமதூர்துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத்தோணி புரந்தானே3.100.2
இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில் புகுந்து என் வநையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றுருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3874 மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டுமாதுமை பேதுறலுஞ்சித்தந் தௌயநின் றாடி யேறூர்தீவண்ணர் சில்பலிக்கென்றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்டவொருவர்க் கிடம்போலுந் துத்தநல் லின்னிசை வண்டு பாடுந்தோணி புரந்தானே3.100.3
மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தௌயச் சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து உஎனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3875 வள்ள லிருந்த மலையத னைவலஞ்செய்தல் வாய்மையெனஉள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன்றெடுத்தோ னுரநெரியமௌள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார்மேவு மிடம்போலுந்துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்ததோணி புரந்தானே3.100.8
வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும் வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வரவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மித்ந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3876 வெல்பற வைக்கொடி மாலு மற்றைவிரைமலர் மேலயனும்பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றியதாய்ப்ப ணிந்தஞ்செல்வறநீண்டெஞ் சிந்தைபொண்டசெல்வ ரிடம்போலுந்தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத்தோணி புரந்தானே3.100.9
கருடக்கொடிடையு திருமாலும், நறுமணமிக்க தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே அகழ்ந்து கென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்த ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3877 குண்டிகை பீலி தட்டோடு நின்றுகோசரங் கொள்ளியரும்மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சியூணரும் வாய்மடிய இண்டை புனைந்தெரு தேறிவந்தெனெழில்கவந் தாரிடமாம்தொண்டிசை பாட லறாத தொன்மைத்தோணி புரந்தானே3.100.10
கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகிய வற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும். 

3878 தூமரு மாளிகை மாட நீடுதோணி புரத்திறையைமாமறை நான்கினொ டங்க மாறும்வல்லவன் வாய்மையினால்நாமரு கேள்வி நலந்திகழும் ஞானசம்பந் தன்சொன்னபாமரு பாடல்கள் பத்தும் வல்லார்பார்முழு தாள்பவரே3.100.11
தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நானகு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப் பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக் நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டிட நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்க.ள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர் 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.