LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-103

3.103.திருவலம்புரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வலம்புரநாதர். 
தேவியார் - வடுவகிர்க்கணம்மை. 
3901 கொடியுடை மும்மதி லூடுருவக்
குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட வெய்த வமரர்பிரா
னடியா ரிசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத்
துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே
3.103.1
கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி, பேரொலியுடன் அம்மதில் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான், அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்ற குறுகிய இடையுடைய உமா தேவியைப்பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 
3902 கோத்தகல் லாடையுங் கோவணமுங்
கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத்
திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த
கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர்
வலம்புர நன்னகரே
3.103.2
சிவபெருமான் காவியுடையும், கோவணமும் அணிந்தவர். ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர். மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர். எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி, காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர். அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், முத்தீ வளர்த்து, நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 
3903 நொய்யதொர் மான்மறி கைவிரலின் 
னுனைமே னிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி
விரிபுன் சடைதாழபப
மையிருஞ் சோலை மணங்கமழ
இருந்தா ரிடம்போலும்
வைகலு மாமுழ வம்மதிரும்
வலம்புர நன்னகரே
3.103.3
இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து, நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி, விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப் போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும், இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 
3904 ஊனம ராக்கை யுடம்புதன்னை
உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே
சிறுகாலை யேத்துமினோ
ஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்த
வடிக ளிடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும்
வலம்புர நன்னகரே
3.103.4
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது, தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 
3905 செற்றெறியுந் திரையார் கலுழிச்
செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியா தனலாடு நட்ட
மணியார் தடங்கண்ணி
பெற்றறிவா ரெருதேற வல்ல
பெருமா னிடம்போலும்
வற்றறியாப் புனல்வாய்ப் புடைய
வலம்புர நன்னகரே
3.103.5
கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை, ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர். அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாக ஏற்றவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3906 உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு
உமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
சுடர்ச்சோதி நின்றிலங்கப் 
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப்
பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா
வலம்புர நன்னகரே
3.103.6
தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு, கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான். உமா தேவியை உடனாகக் கொண்டவர். மணம் பொருந்திய திரு வெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர். சுடர்விடும் சோதியாய் விளங்குபவர். பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவகைப்பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3907 புரிதரு புன்சடை பொன்றயங்கப்
புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தி னீருரிதோன்
மேன்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகி லாரணங்கை
அமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
வலம்புர நன்னகரே
3.103.7
முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர, முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க, மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி, மூங்கிலையொத்த தோளையுடையவளாய், இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய, குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3908 தண்டணை தோளிரு பத்தினொடுந்
தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தானடுங்க
வொருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில்
வலம்புர நன்னகரே
3.103.8
தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது, தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமா தேவி நடுங்க, சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி, பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது, அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3909 தாருறு தாமரை மேலயனுந்
தரணி யளந்தானும்
தேர்வறி யாவகை யாலிகலித்
திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யானிமிர்ந்த
பெருமா னிடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும்
வலம்புர நன்னகரே
3.103.9
மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது, தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு, முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து, பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க, அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3910 காவிய நற்றுவ ராடையினார்
கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்
பழந்தொண்ட ருள்ளுருக
ஆவியு ணின்றருள் செய்யவல்ல
வழக ரிடம்போலும்
வாவியி னீர்வயல் வாய்ப்புடைய
வலம்புர நன்னகரே
3.103.10
காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும், கடுமையான நோன்புகளை மேற்கோள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் திருச்சிற்றம்பலம் சிறிதும் கேளாத, வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த, அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 
3911 நல்லிய னான்மறை யோர்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான்
வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
சிவலோகஞ் சேர்வாரே
3.103.11
நல்லொழுக்கமுடைய, நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன், புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர். 
திருச்சிற்றம்பலம்

3.103.திருவலம்புரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வலம்புரநாதர். தேவியார் - வடுவகிர்க்கணம்மை. 

3901 கொடியுடை மும்மதி லூடுருவக்குனிவெஞ் சிலைதாங்கிஇடிபட வெய்த வமரர்பிரானடியா ரிசைந்தேத்தத்துடியிடை யாளையொர் பாகமாகத்துதைந்தா ரிடம்போலும்வடிவுடை மேதி வயல்படியும்வலம்புர நன்னகரே3.103.1
கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி, பேரொலியுடன் அம்மதில் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான், அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்ற குறுகிய இடையுடைய உமா தேவியைப்பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 

3902 கோத்தகல் லாடையுங் கோவணமுங்கொடுகொட்டி கொண்டொருகைத்தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத்திசையார் தொழுதேத்தக்காய்த்தகல் லாலதன் கீழிருந்தகடவுள் ளிடம்போலும்வாய்த்தமுத் தீத்தொழி னான்மறையோர்வலம்புர நன்னகரே3.103.2
சிவபெருமான் காவியுடையும், கோவணமும் அணிந்தவர். ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர். மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர். எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி, காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர். அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், முத்தீ வளர்த்து, நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 

3903 நொய்யதொர் மான்மறி கைவிரலின் னுனைமே னிலையாக்கிமெய்யெரி மேனிவெண் ணீறுபூசிவிரிபுன் சடைதாழபபமையிருஞ் சோலை மணங்கமழஇருந்தா ரிடம்போலும்வைகலு மாமுழ வம்மதிரும்வலம்புர நன்னகரே3.103.3
இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து, நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி, விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப் போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும், இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 

3904 ஊனம ராக்கை யுடம்புதன்னைஉணரிற் பொருளன்றுதேனமர் கொன்றையி னானடிக்கேசிறுகாலை யேத்துமினோஆனம ரைந்துங்கொண் டாட்டுகந்தவடிக ளிடம்போலும்வானவர் நாடொறும் வந்திறைஞ்சும்வலம்புர நன்னகரே3.103.4
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து, அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது, தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும். 

3905 செற்றெறியுந் திரையார் கலுழிச்செழுநீர்கிளர் செஞ்சடைமேல்அற்றறியா தனலாடு நட்டமணியார் தடங்கண்ணிபெற்றறிவா ரெருதேற வல்லபெருமா னிடம்போலும்வற்றறியாப் புனல்வாய்ப் புடையவலம்புர நன்னகரே3.103.5
கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை, ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர். அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபத்தை வாகனமாக ஏற்றவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3906 உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டுஉமையோ டுடனாகிச்சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்சுடர்ச்சோதி நின்றிலங்கப் பண்ணவண் ணத்தன பாணிசெய்யப்பயின்றா ரிடம்போலும்வண்ணவண் ணப்பறை பாணியறாவலம்புர நன்னகரே3.103.6
தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு, கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான். உமா தேவியை உடனாகக் கொண்டவர். மணம் பொருந்திய திரு வெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர். சுடர்விடும் சோதியாய் விளங்குபவர். பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பலவகைப்பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3907 புரிதரு புன்சடை பொன்றயங்கப்புரிநூல் புரண்டிலங்கவிரைதரு வேழத்தி னீருரிதோன்மேன்மூடி வேய்புரைதோள்அரைதரு பூந்துகி லாரணங்கைஅமர்ந்தா ரிடம்போலும்வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறாவலம்புர நன்னகரே3.103.7
முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர, முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க, மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி, மூங்கிலையொத்த தோளையுடையவளாய், இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய, குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3908 தண்டணை தோளிரு பத்தினொடுந்தலைபத் துடையானைஒண்டணை மாதுமை தானடுங்கவொருகால் விரலூன்றிமிண்டது தீர்த்தருள் செய்யவல்லவிகிர்தர்க் கிடம்போலும்வண்டணை தன்னொடு வைகுபொழில்வலம்புர நன்னகரே3.103.8
தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது, தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமா தேவி நடுங்க, சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி, பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது, அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3909 தாருறு தாமரை மேலயனுந்தரணி யளந்தானும்தேர்வறி யாவகை யாலிகலித்திகைத்துத் திரிந்தேத்தப்பேர்வறி யாவகை யானிமிர்ந்தபெருமா னிடம்போலும்வாருறு சோலை மணங்கமழும்வலம்புர நன்னகரே3.103.9
மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது, தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு, முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து, பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க, அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3910 காவிய நற்றுவ ராடையினார்கடுநோன்பு மேல்கொள்ளும்பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்பழந்தொண்ட ருள்ளுருகஆவியு ணின்றருள் செய்யவல்லவழக ரிடம்போலும்வாவியி னீர்வயல் வாய்ப்புடையவலம்புர நன்னகரே3.103.10
காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும், கடுமையான நோன்புகளை மேற்கோள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் திருச்சிற்றம்பலம் சிறிதும் கேளாத, வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த, அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும். 

3911 நல்லிய னான்மறை யோர்புகலித்தமிழ்ஞான சம்பந்தன்வல்லியந் தோலுடை யாடையினான்வலம்புர நன்னகரைச்சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்லவல்லவர் தொல்வினைபோய்ச்செல்வன சேவடி சென்றணுகிச்சிவலோகஞ் சேர்வாரே3.103.11
நல்லொழுக்கமுடைய, நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன், புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.