LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-104

3.104.திருப்பருதிநியமம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பருதியப்பர். 
தேவியார் - மங்களநாயகியம்மை. 
3912 விண்கொண்ட தூமதி சூடிநீடு
விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப்
பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த
கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே
3.104.1
ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ, உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திரு வெண்ணீற்றினைப் பூசி, பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று, கண்ணைக் கவரும் தோற்றப் பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும். 
3913 அரவொலி வில்லொலி யம்பினொலி
யடங்கார் புரமூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமே
னிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தெ னெழில்கவர்ந்த
விறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும்
பரிதிந் நியமமே
3.104.2
வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும், மேருமலையாகிய வில்லின் ஓசையும், காற்று, திருமால், நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ, பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான். நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவன் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3914 வாண்முக வார்குழல் வாணெடுங்கண்
வளைத்தோண் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின்
னுரிமே னிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த
நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே
3.104.3
ஒளிபொருந்திய திருமுகத்தையும், நீண்ட கூந்தலையும், வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி, நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவ பெருமான்.அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர். என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர். அத்தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3915 வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி
விரிபுன் சடைதாழத்
துஞ்சிருண் மாலையும் நண்பகலுந்
துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங்
கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்
பரிதிந் நியமமே
3.104.4
சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும், மாலையிலும், நண்பகலிலும், பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர். அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3916 நீர்புல்கு புன்சடை நின்றிலங்க
நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து
தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்த
விறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும்
பரிதிந் நியமமே
3.104.5
சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு, இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர். மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர். பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர். என் தோற்றப் பொலிவையும், அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3917 வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி
விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத்
திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாய லெழில்கவர்ந்த
சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற்
பரிதிந் நியமமே
3.104.6
சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர். எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர். நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3918 பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப்
பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர வெழில்கவர்ந்த
விறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும்
பரிதிந் நியமமே
3.104.7
சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க, பெரிய மழுப்படையைக் கையிலேந்தி, வேதங்களைப் பாடி, திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார். அவர், என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பறை யொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3919 ஆசடை வானவர் தானவரோ
டடியா ரமர்ந்தேத்த
மாசடை யாதவெண்ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங்
கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப்
பரிதிந் நியமமே
3.104.8
அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும், வித்தியாதரர்களும் உடன் திகழ, அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர். அவர், பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து, என் உள்ளம் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 
3920 நாடினர் காண்கிலர் நான்முகனுந்
திருமா னயந்தேத்தக்
கூடல ராடல ராகிநாளுங்
குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர வெழில்கவர்ந்த
இறைவர்க் கிடம்போலும்
பாடல ராடல ராய்வணங்கும்
பரிதிந் நியமமே
3.104.9
தேடிக் காணாதவர்களாகிய பிரமனும், திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும், அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி வணங்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.
3921 கல்வள ராடையர் கையிலுண்ணுங்
கழுக்க ளிழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா
சுடுநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த
நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்
பரிதிந் நியமமே
3.104.10
காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும், கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும், குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா. சுட்ட திருவெண்ணீறு அணிந்து, என் நல் வளையல்கள் கழல, என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு. 
3922 பையர வம்விரி காந்தள்விம்மு
பரிதிந் நியமத்துத்
தையலொர் பாக மமர்ந்தவனைத்
தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும்
பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல்
அவலம் அடையாவே
3.104.11
படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி, தமிழ்வல்ல ஞானசம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை. அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை. 
திருச்சிற்றம்பலம்

3.104.திருப்பருதிநியமம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பருதியப்பர். தேவியார் - மங்களநாயகியம்மை. 

3912 விண்கொண்ட தூமதி சூடிநீடுவிரிபுன் சடைதாழப்பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப்பேணார் பலிதேர்ந்துகண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்தகள்வர்க் கிடம்போலும்பண்கொண்ட வண்டினம் பாடியாடும்பரிதிந் நியமமே3.104.1
ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச் சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ, உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திரு வெண்ணீற்றினைப் பூசி, பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று, கண்ணைக் கவரும் தோற்றப் பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும். 

3913 அரவொலி வில்லொலி யம்பினொலியடங்கார் புரமூன்றும்நிரவவல்லார் நிமிர்புன் சடைமேனிரம்பா மதிசூடிஇரவில் புகுந்தெ னெழில்கவர்ந்தவிறைவர்க் கிடம்போலும்பரவவல் லார்வினை பாழ்படுக்கும்பரிதிந் நியமமே3.104.2
வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும், மேருமலையாகிய வில்லின் ஓசையும், காற்று, திருமால், நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ, பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான். நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவன் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3914 வாண்முக வார்குழல் வாணெடுங்கண்வளைத்தோண் மாதஞ்சநீண்முக மாகிய பைங்களிற்றின்னுரிமே னிகழ்வித்துநாண்முகங் காட்டி நலங்கவர்ந்தநாதர்க் கிடம்போலும்பாண்முக வண்டினம் பாடியாடும்பரிதிந் நியமமே3.104.3
ஒளிபொருந்திய திருமுகத்தையும், நீண்ட கூந்தலையும், வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி, நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவ பெருமான்.அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர். என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர். அத்தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3915 வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணிவிரிபுன் சடைதாழத்துஞ்சிருண் மாலையும் நண்பகலுந்துணையார் பலிதேர்ந்துஅஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங்கவர்ந்தார்க் கிடம்போலும்பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்பரிதிந் நியமமே3.104.4
சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும், மாலையிலும், நண்பகலிலும், பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர். அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3916 நீர்புல்கு புன்சடை நின்றிலங்கநெடுவெண் மதிசூடித்தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்துதலையார் பலிதேர்வார்ஏர்புல்கு சாய லெழில்கவர்ந்தவிறைவர்க் கிடம்போலும்பார்புல்கு தொல்புக ழால்விளங்கும்பரிதிந் நியமமே3.104.5
சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு, இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர். மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர். பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர். என் தோற்றப் பொலிவையும், அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3917 வெங்கடுங் காட்டகத் தாடல்பேணிவிரிபுன் சடைதாழத்திங்கள் திருமுடிமேல் விளங்கத்திசையார் பலிதேர்வார்சங்கொடு சாய லெழில்கவர்ந்தசைவர்க் கிடம்போலும்பைங்கொடி முல்லை படர்புறவிற்பரிதிந் நியமமே3.104.6
சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர். விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர். எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர். நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3918 பிறைவளர் செஞ்சடை பின்றயங்கப்பெரிய மழுவேந்திமறையொலி பாடிவெண் ணீறுபூசிமனைகள் பலிதேர்வார்இறைவளை சோர வெழில்கவர்ந்தவிறைவர்க் கிடம்போலும்பறையொலி சங்கொலி யால்விளங்கும்பரிதிந் நியமமே3.104.7
சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க, பெரிய மழுப்படையைக் கையிலேந்தி, வேதங்களைப் பாடி, திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார். அவர், என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ, என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பறை யொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3919 ஆசடை வானவர் தானவரோடடியா ரமர்ந்தேத்தமாசடை யாதவெண்ணீறுபூசிமனைகள் பலிதேர்வார்காசடை மேகலை சோரவுள்ளங்கவர்ந்தார்க் கிடம்போலும்பாசடைத் தாமரை வைகுபொய்கைப்பரிதிந் நியமமே3.104.8
அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும், வித்தியாதரர்களும் உடன் திகழ, அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர். அவர், பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து, என் உள்ளம் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். 

3920 நாடினர் காண்கிலர் நான்முகனுந்திருமா னயந்தேத்தக்கூடல ராடல ராகிநாளுங்குழகர் பலிதேர்வார்ஏடலர் சோர வெழில்கவர்ந்தஇறைவர்க் கிடம்போலும்பாடல ராடல ராய்வணங்கும்பரிதிந் நியமமே3.104.9
தேடிக் காணாதவர்களாகிய பிரமனும், திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும், அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி வணங்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

3921 கல்வள ராடையர் கையிலுண்ணுங்கழுக்க ளிழுக்கானசொல்வள மாக நினைக்கவேண்டாசுடுநீ றதுவாடிநல்வளை சோர நலங்கவர்ந்தநாதர்க் கிடம்போலும்பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்பரிதிந் நியமமே3.104.10
காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும், கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும், குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா. சுட்ட திருவெண்ணீறு அணிந்து, என் நல் வளையல்கள் கழல, என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு. 

3922 பையர வம்விரி காந்தள்விம்முபரிதிந் நியமத்துத்தையலொர் பாக மமர்ந்தவனைத்தமிழ்ஞான சம்பந்தன்பொய்யிலி மாலை புனைந்தபத்தும்பரவிப் புகழ்ந்தேத்தஐயுற வில்லை பிறப்பறுத்தல்அவலம் அடையாவே3.104.11
படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி, தமிழ்வல்ல ஞானசம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை. அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.