LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-112

3.112.திருப்பல்லவனீச்சரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 
4001 பரசுபாணியர் பாடல்வீணையர் 
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.1
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார். 
4002 பட்டநெற்றியர் நட்டமாடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.2
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்? 
4003 பவளமேனியர் திகழுநீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.3
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்? 
4004 பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.4
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? 
4005 பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.5
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்? 
4006 பச்சைமேனியர் பிச்சைகொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.6
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார் அறிவார்? 
4007 பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.7
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும் வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்? 
4008 பாதங்கைதொழ வேதமோதுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.8
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்? 
4009 படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.9
இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்? 
4010 பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார்
3.112.10
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்? 
4011 வானமாள்வதற் கூனமொனறிலை
மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே
3.112.11
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை. 
திருச்சிற்றம்பலம்

3.112.திருப்பல்லவனீச்சரம் 
பண் - பழம்பஞ்சுரம் 
திருச்சிற்றம்பலம் 

4001 பரசுபாணியர் பாடல்வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்தரசுபேணி நின்றார்இவர்தன்மை யறிவாரார்3.112.1
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார். 

4002 பட்டநெற்றியர் நட்டமாடுவர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்திட்டமா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.2
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்? 

4003 பவளமேனியர் திகழுநீற்றினர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தழகரா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.3
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்? 

4004 பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தண்ணலா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.4
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? 

4005 பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தெல்லியாட் டுகந்தார்இவர்தன்மை யறிவாரார்3.112.5
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்? 

4006 பச்சைமேனியர் பிச்சைகொள்பவர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்திச்சையா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.6
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார் அறிவார்? 

4007 பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தெங்குமா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.7
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும் வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்? 

4008 பாதங்கைதொழ வேதமோதுவர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தாதியா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.8
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்? 

4009 படிகொண்மேனியர் கடிகொள்கொன்றையர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்தடிகளா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.9
இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்? 

4010 பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர்பட்டினத்துறை பல்லவனீச்சரத்திறைவரா யிருப்பார்இவர்தன்மை யறிவாரார்3.112.10
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்? 

4011 வானமாள்வதற் கூனமொனறிலைமாதர்பல்லவ னீச்சரத்தானைஞானசம்பந்தன் நற்றமிழ்சொல்லவல்லவர் நல்லவரே3.112.11
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை. 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.