LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-58

3.058.திருச்சாத்தமங்கை 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அயவந்தீசுவரர். 
தேவியார் - மலர்க்கணம்பிகையம்மை. 
3416 திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி
சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது
மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ்
சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தீ யய வந்தி
யமர்ந்தவனே
3.058.1
தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், சந்திரனைத் தலையில் தரித்தவனும், இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில், உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது. 
3417 பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு
பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங்
கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற்
சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி
யமர்ந்தவனே
3.058.2
சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து, பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான். நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3418 நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந்
தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது
மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் 
சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி
யமர்ந்தவனே
3.058.3
முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினை அணிந்து, இடப வாகனத்திலேறி, மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3419 மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண்
ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும்
பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச்
செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி
யமர்ந்தவனே
3.058.4
பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து, திருவெண்ணீற்றினைப் பூசி, புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான். வேதகாமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும். உலகப் பற்றற்ற மெய்யடியார்கள், தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான். 
3420 வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய
வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும்
பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி
யமர்ந்தவனே
3.058.5
இறைவன் திருவெண்ணீற்றினைப் பூசியவன். இடபவாகனத்தில் ஏறியமர்பவன். வேதத்தை இசையோடு பாடியருளி, வேதப் பொருளாகவும் விளங்குபவன். பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன். வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும், ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3421 வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள்
வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல
லாவதொன்றே
சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் 
சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி
யமர்ந்தவனே
3.058.6
இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன். எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும், ஞானவேள்வியாகவும் திகழ்பவன். ஒண்பொருளாகவும், வீடுபேறாகவும் உள்ளவன். சோதிவடிவானவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன். இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ? அத்தகைய சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3422 இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண்
ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன
லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி
யமர்ந்தவனே
3.058.7
சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு, முப்புரங்களை எரித்து, திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும். அவன் சமயநூல்களையும், வேதத்தையும், அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3423 பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர்
பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும்
வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற்
சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி
யமர்ந்தவனே
3.058.8
இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான். பரமயோகி அவன். மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான் குளிர்ச்சி பொருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி, திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3424 பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும்
பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது
மேற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கன கம்மனை 
யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி
யமர்ந்தவனே
3.058.9
மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும், உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும், கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும், காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில், திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3425 கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை
யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல
லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு
சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி
யமர்ந்தவனே
3.058.10
சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி, பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்றஅந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 
3426 மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்
பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக
ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே
லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு
முந்துவரே
3.058.11
நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி, திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர். 
திருச்சிற்றம்பலம்

3.058.திருச்சாத்தமங்கை 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அயவந்தீசுவரர். தேவியார் - மலர்க்கணம்பிகையம்மை. 

3416 திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதிசென்னிவைத்தீர்இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவதுமேற்பதொன்றேபெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ்சாத்தமங்கைஅருமல ராதிமூர்த்தீ யய வந்தியமர்ந்தவனே3.058.1
தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், சந்திரனைத் தலையில் தரித்தவனும், இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில், உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது. 

3417 பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொருபாற்பொருந்தக்கொடியன சாயலாளோ டுடனாவதுங்கூடுவதேகடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற்சாத்தமங்கைஅடிகணக் கன்பரவ வய வந்தியமர்ந்தவனே3.058.2
சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து, பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான். நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3418 நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந்தேறதேறிமானன நோக்கிதன்னோ டுட னாவதுமாண்பதுவேதானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் சாத்தமங்கைஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தியமர்ந்தவனே3.058.3
முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினை அணிந்து, இடப வாகனத்திலேறி, மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3419 மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண்ணீறுபூசிப்புற்றர வல்குலாளோ டுட னாவதும்பொற்பதுவேகற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச்செய்தபாவம்அற்றவர் நாளுமேத்த வய வந்தியமர்ந்தவனே3.058.4
பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து, திருவெண்ணீற்றினைப் பூசி, புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான். வேதகாமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும். உலகப் பற்றற்ற மெய்யடியார்கள், தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான். 

3420 வெந்தவெண் ணீறுபூசி விடை யேறியவேதகீதன்பந்தண வும்விரலா ளுட னாவதும்பாங்கதுவேசந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்சாத்தமங்கைஅந்தமா யாதியாகி யய வந்தியமர்ந்தவனே3.058.5
இறைவன் திருவெண்ணீற்றினைப் பூசியவன். இடபவாகனத்தில் ஏறியமர்பவன். வேதத்தை இசையோடு பாடியருளி, வேதப் பொருளாகவும் விளங்குபவன். பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன். வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும், ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3421 வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள்வீடதாகிச்சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்லலாவதொன்றேசாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் சாத்தமங்கைஆதியாய் நின்றபெம்மா னய வந்தியமர்ந்தவனே3.058.6
இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன். எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும், ஞானவேள்வியாகவும் திகழ்பவன். ஒண்பொருளாகவும், வீடுபேறாகவும் உள்ளவன். சோதிவடிவானவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன். இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ? அத்தகைய சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3422 இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண்ணீறுபூசிஉமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்னலாவதொன்றேசமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்சாத்தமங்கைஅமையவே றோங்குசீரா னய வந்தியமர்ந்தவனே3.058.7
சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு, முப்புரங்களை எரித்து, திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும். அவன் சமயநூல்களையும், வேதத்தையும், அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3423 பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர்பரமயோகிவிண்ணுலா மால்வரையான் மகள் பாகமும்வேண்டினையேதண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற்சாத்தமங்கைஅண்ணலாய் நின்றவெம்மா னய வந்தியமர்ந்தவனே3.058.8
இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான். பரமயோகி அவன். மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான் குளிர்ச்சி பொருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி, திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3424 பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும்பெண்ணோர்பாகம்ஈரெழிற் கோலமாகி யுட னாவதுமேற்பதொன்றேகாரெழில் வண்ணனோடு கன கம்மனை யானுங்காணாஆரழல் வண்ணமங்கை யய வந்தியமர்ந்தவனே3.058.9
மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும், உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும், கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும், காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில், திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3425 கங்கையோர் வார்சடைமே லடை யப்புடையேகமழும்மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்லலாவதொன்றேசங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழுசாத்தமங்கைஅங்கையிற் சென்னிவைத்தா யயவந்தியமர்ந்தவனே3.058.10
சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி, பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்றஅந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். 

3426 மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்பந்தன்மன்னும்நிறையினார் நீலநக்க னெடு மாநகரென்றுதொண்டர்அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமேலாய்ந்தபத்தும்முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலுமுந்துவரே3.058.11
நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி, திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.