LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-62

3.062.திருப்பனந்தாள் 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
3460 கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர்
வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை
மால்விடையான் 
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை
வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
ஈச்சரமே
3.062.1
சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன். தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன். மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன். விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய, வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3461 விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர்
வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல
கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி
வெள்ளந்தன்னைத்
தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.2
சிவபெருமான் நான்குவேதங்களின் பொருளை விரித்து ஓதியவன். தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன். ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன். சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3462 உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல்
லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர்
நான்மறையான்
மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் 
வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.3
சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன். தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன். இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன். பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன். தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும்கோயிலாகும். 
3463 சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய
பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின்
பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும்
புனைந்த
தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.4
பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும், அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும், பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும், நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலை மிகவும் போற்றி வழிபடுவீர்களாக! 
3464 விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை
மங்கையொடும்
நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை
சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணி
யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.5
சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன். வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன். எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு, அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3465 விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு
மண்ணுமெல்லாம்
புடைபட வாடவல்லான் மிகு பூதமார்
பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்
கும்மணிந்த
சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.6
சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன். விண்ணுலகமும், மண்ணுலகமும், மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன். பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன். கொன்றைமாலையோடு, வன்னி, எருக்கம் இவை அணிந்த சடையுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3466 மலையவன் முன்பயந்த மட மாதையொர்
கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை
செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி யாடர
வும்மணிந்த
தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.7
சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன். மேரு மலையை வில்லாக்கி, அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன். அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும், சந்திரனையும், பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3467 செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர
லாலடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன்
மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி தோலொடு
கோவணமும்
தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.8
இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன். முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன். உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன். புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3468 வின்மலை நாணரவம் மிகு வெங்கன
லம்பதனால்
புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித்
தான்புனிதன்
நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண
னும்மறியாத்
தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே
3.062.9
சிவபெருமான் மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன். நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத தன்மையன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும். அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான். 
3469 ஆதர் சமணரொடும் மடை யைந்துகில்
போர்த்துழலும்
நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி
னின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி 
யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாட் டிருத்
தாடகை யீச்சரமே
3.062.10
பயனிலிகளாகிய சமணர்களும், அழகிய துணிகளைப்போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 
3470 தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரத்துக் 
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன்
காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம்
பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை
பற்றறுமே
3.062.11
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில், வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும். 
திருச்சிற்றம்பலம்

3.062.திருப்பனந்தாள் 
பண் - பஞ்சமம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர். தேவியார் - பெரியநாயகியம்மை. 

3460 கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர்வெண்மழுவான்பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடைமால்விடையான் விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடைவேதியனூர்தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகைஈச்சரமே3.062.1
சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன். தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன். மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன். விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய, வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3461 விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர்வந்திறைஞ்சஎரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுலகில்லுயிரும்பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலிவெள்ளந்தன்னைத்தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.2
சிவபெருமான் நான்குவேதங்களின் பொருளை விரித்து ஓதியவன். தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன். ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன். சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3462 உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல்லார்வினைகள்கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர்நான்மறையான்மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.3
சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன். தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன். இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன். பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன். தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும்கோயிலாகும். 

3463 சூழ்தரு வல்வினையு முடல் தோன்றியபல்பிணியும்பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின்பாய்புனலும்போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும்புனைந்ததாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.4
பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும், அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும், பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும், நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள, திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலை மிகவும் போற்றி வழிபடுவீர்களாக! 

3464 விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளைமங்கையொடும்நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறைசேருமிடம்படம்புரி நாகமொடு திரை பன்மணியுங்கொணரும்தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.5
சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன். வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன். எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு, அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3465 விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடுமண்ணுமெல்லாம்புடைபட வாடவல்லான் மிகு பூதமார்பல்படையான்தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும்மணிந்தசடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.6
சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன். விண்ணுலகமும், மண்ணுலகமும், மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன். பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன். கொன்றைமாலையோடு, வன்னி, எருக்கம் இவை அணிந்த சடையுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3466 மலையவன் முன்பயந்த மட மாதையொர்கூறுடையான்சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவைசெற்றுகந்தான்அலைமலி தண்புனலும் மதி யாடரவும்மணிந்ததலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.7
சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன். மேரு மலையை வில்லாக்கி, அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன். அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும், சந்திரனையும், பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3467 செற்றரக் கன்வலியைத் திரு மெல்விரலாலடர்த்துமுற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன்மும்மையினான்புற்றர வம்புலியின் னுரி தோலொடுகோவணமும்தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.8
இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன். முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன். உருவம், அருவம், அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன். புற்றில் வாழ்கின்ற பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3468 வின்மலை நாணரவம் மிகு வெங்கனலம்பதனால்புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்புனிதன்நன்மலர் மேலயனுந் நண்ணு நாரணனும்மறியாத்தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகையீச்சரமே3.062.9
சிவபெருமான் மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன். நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத தன்மையன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும். அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான். 

3469 ஆதர் சமணரொடும் மடை யைந்துகில்போர்த்துழலும்நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மினின்மலனூர்போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்தாதவி ழும்பனந்தாட் டிருத்தாடகை யீச்சரமே3.062.10
பயனிலிகளாகிய சமணர்களும், அழகிய துணிகளைப்போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும். 

3470 தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகையீச்சரத்துக் கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன்காழியர்கோன்நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம்பந்தனல்லபண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினைபற்றறுமே3.062.11
குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில், வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.