LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-70

3.070.திருமயிலாடுதுறை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாயூரநாதர். 
தேவியார் - அஞ்சநாயகியம்மை. 
3548 ஏனவெயி றாடரவொ டென்புவரி
யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய
படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின்
மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
மூசுமயி லாடுதுறையே
3.070.1
சிவபெருமான் பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும், வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர், படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 
3549 அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில்
கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது 
வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே
3.070.2
சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தனமரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால், அதனைக் கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும். 
3550 தோளின்மிசை வரியரவ நஞ்சழல
வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது
காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண
நாறுமயி லாடுதுறையே
3.070.3
சிவபெருமான், தோளின்மீது வரிகளையுடைய பாம்புநஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய, அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3551 ஏதமில ரரியமறை மலையர்மக
ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை
கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை
கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
கமழுமயி லாடுதுறையே
3.070.4
சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர். அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர். மலையரசன் மகளான. ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப் பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக, மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமாயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3552 பூவிரி கதுப்பின்மட மங்கையர
கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி
லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி
சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
கொள்ளுமயி லாடுதுறையே
3.070.5
மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள, தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர். காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகளில் மோதி, மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த, அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 
3553 கடந்திகழ் கருங்களி றுரித்துமையு
மஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய
வேதியர் விரும்புமிடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறுமயி லாடுதுறையே
3.070.6
சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர். மனத்தால் எண்ணுதற்கு அரியவர். பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர். வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர். அப்பெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும், கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 
3554 அவ்வதிசை யாருமடி யாருமுள
ராகவருள் செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி
யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு
தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண
நாறுமயி லாடுருறையே
3.070.7
அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து, அவர்களுடைய வினைகள். நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஆரவாரத் தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை, மாரவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3555 இலங்கையநகர் மன்னன்முடி யொருபதினொ
டிருபருதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ 
ரிருந்தவிடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய
மூகிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி
கின்றமயி லாடுதுறையே
3.070.8
இலங்கை மன்னனான இராவணனின் பத்து மடிகளையும், இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், கலங்களோடு நுரையைத் தள்ளி, எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திரும்யிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3556 ஒண்டிறலி னான்முகனு மாலுமிக
நேடிண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக
நீண்டவர னாரதிடமாம்
கொண்டையிரை கொண்டுகௌ றாருட
னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரையிளை
யாடுமயி லாடுதுறையே
3.070.9
மிகுந்த வலிமையுடைய பிரனும், திருமாலும் தேடியும் உணரமடியபவண்ணம், அகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கொண்டைமீனை இரையாக உண்டு, கௌறு, ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை, தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 
3557 மிண்டுதிற லமணரொடு சாக்கியரு
மலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு
மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய 
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடுதுறையே
3.070.10
துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும், புத்தர்களும் பழித்துக்கூற, அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும், இண்டைமாலை சூடிய சடைமுடி உடைய வனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தௌளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண, தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 
3558 நிணந்தரு மயானநில வானமதி
யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்
வார்பெறுவர் பொன்னுலகமே
3.070.11
இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடுகாட்டில், பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு, பேய்க்கூட்டங்கள் தொழ, பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன், நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன், திருமயிலாடுதுறையைப் போற்றிப்ப பாடிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர். 
திருச்சிற்றம்பலம்

3.070.திருமயிலாடுதுறை 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாயூரநாதர். தேவியார் - அஞ்சநாயகியம்மை. 

3548 ஏனவெயி றாடரவொ டென்புவரியாமையிவை பூண்டிளைஞராய்க்கானவரி நீடுழுவை யதளுடையபடர்சடையர் காணியெனலாம்ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின்மீதுபுகை போகியழகார்வானமுறு சோலைமிசை மாசுபடமூசுமயி லாடுதுறையே3.070.1
சிவபெருமான் பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும், வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர், படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 

3549 அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில்கொன்றையொ டணிந்தழகராம்எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்கந்தமலி சந்தினொடு காரகிலும்வாரிவரு காவிரியுளால்வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்சிந்துமயி லாடுதுறையே3.070.2
சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தனமரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால், அதனைக் கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும். 

3550 தோளின்மிசை வரியரவ நஞ்சழலவீக்கிமிகு நோக்கரியராய்மூளைபடு வெண்டலையி லுண்டுமுதுகாடுறையு முதல்வரிடமாம்பாளைபடு பைங்கமுகு செங்கனியுதிர்த்திட நிரந்துகமழ்பூவாளைகுதி கொள்ளமடல் விரியமணநாறுமயி லாடுதுறையே3.070.3
சிவபெருமான், தோளின்மீது வரிகளையுடைய பாம்புநஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய, அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3551 ஏதமில ரரியமறை மலையர்மகளாகியவி லங்குநுதலொண்பேதைதட மார்பதிட மாகவுறைகின்றபெரு மானதிடமாம்காதன்மிகு கவ்வையொடு மவ்வலவைகூடிவரு காவிரியுளால்மாதர்மறி திரைகள்புக வெறியவெறிகமழுமயி லாடுதுறையே3.070.4
சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர். அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர். மலையரசன் மகளான. ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப் பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக, மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமாயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3552 பூவிரி கதுப்பின்மட மங்கையரகந்தொறு நடந்துபலிதேர்பாவிரி யிசைக்குரிய பாடல்பயிலும்பரமர் பழமையெனலாம்காவிரி நுரைத்திரு கரைக்குமணிசிந்தவரி வண்டுகவரமாவிரி மதுக்கிழிய மந்திகுதிகொள்ளுமயி லாடுதுறையே3.070.5
மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள, தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர். காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகளில் மோதி, மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த, அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார். 

3553 கடந்திகழ் கருங்களி றுரித்துமையுமஞ்சமிக நோக்கரியராய்விடந்திகழு மூவிலைநல் வேலுடையவேதியர் விரும்புமிடமாம்தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகுதொண்டையெழில் கொண்டதுவர்வாய்மடந்தையர் குடைந்தபுனல் வாசமிகநாறுமயி லாடுதுறையே3.070.6
சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர். மனத்தால் எண்ணுதற்கு அரியவர். பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர். வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர். அப்பெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும், கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 

3554 அவ்வதிசை யாருமடி யாருமுளராகவருள் செய்தவர்கண்மேல்எவ்வமற வைகலு மிரங்கியெரியாடுமெம தீசனிடமாம்கவ்வையொடு காவிரி கலந்துவருதென்கரை நிரந்துகமழ்பூமவ்வலொடு மாதவி மயங்கிமணநாறுமயி லாடுருறையே3.070.7
அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து, அவர்களுடைய வினைகள். நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஆரவாரத் தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை, மாரவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3555 இலங்கையநகர் மன்னன்முடி யொருபதினொடிருபருதொ ணெரியவிரலால்விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேல்கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகயமூகிமலர் கொண்டுமகிழாமலங்கிவரு காவிரி நிரந்துபொழிகின்றமயி லாடுதுறையே3.070.8
இலங்கை மன்னனான இராவணனின் பத்து மடிகளையும், இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், கலங்களோடு நுரையைத் தள்ளி, எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திரும்யிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3556 ஒண்டிறலி னான்முகனு மாலுமிகநேடிண ராதவகையால்அண்டமுற வங்கியுரு வாகிமிகநீண்டவர னாரதிடமாம்கொண்டையிரை கொண்டுகௌ றாருடனிருந்துகிளர் வாயறுதல்சேர்வண்டன்மணல் கெண்டிமட நாரையிளையாடுமயி லாடுதுறையே3.070.9
மிகுந்த வலிமையுடைய பிரனும், திருமாலும் தேடியும் உணரமடியபவண்ணம், அகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கொண்டைமீனை இரையாக உண்டு, கௌறு, ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை, தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும். 

3557 மிண்டுதிற லமணரொடு சாக்கியருமலர்தூற்ற மிக்கதிறலோன்இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெருமானதிட மென்பரெழிலார்தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூவண்டவை திளைக்கமது வந்தொழுகுசோலைமயி லாடுதுறையே3.070.10
துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும், புத்தர்களும் பழித்துக்கூற, அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும், இண்டைமாலை சூடிய சடைமுடி உடைய வனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தௌளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண, தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். 

3558 நிணந்தரு மயானநில வானமதியாததொரு சூலமொடுபேய்க்கணந்தொழு கபாலிகழ லேத்திமிகவாய்த்ததொரு காதன்மையினால்மணந்தண்மலி காழிமறை ஞானசம்பந்தன்மயி லாடுதுறையைப்புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்வார்பெறுவர் பொன்னுலகமே3.070.11
இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடுகாட்டில், பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு, பேய்க்கூட்டங்கள் தொழ, பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன், நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன், திருமயிலாடுதுறையைப் போற்றிப்ப பாடிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.