LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-97

3.097.திருச்சிறுகுடி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மங்களேசுவரர். 
தேவியார் - மங்களநாயகியம்மை. 
3842 3482. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே 3.097.1
வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர். 
3843 சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே 3.097.2
குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை. 
3844 தௌளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநல முறுமே 3.097.3
தௌந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர். 
3845 செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே 3.097.4
செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச் சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர். (உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு பதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர்). 
3846 செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவ ரருவினை யிலரே 3.097.5
பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே! பேறு பெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள். அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர். 
3847 செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை யிடமுடை யீரே
மங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே 3.097.6
செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, உமாதேவி யைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளம்கும் சிவபெருமானே! உமா தேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர். நலமிக்கவரும், தவப்பேறு உடைய வரும் ஆவர். 
3848 செறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீரு விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந்தோரே 3.097.7
அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர். 
3849 திரைசயவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகு னுரநெரித் தீரே
தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறு மதுவழி பாடே 3.097.8
எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை வழிபட்டதன் பலனாகும். 
3850 செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவர யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவிணை யொடுதுய ரிலரே 3.097.9
வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு கொண்ட திருமால், பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர். 
3851 செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோ டமண்புறத் தீரே
புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடியப் பரிசே 3.097.10
வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர். 
3852 தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே 3.097.11
வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர். 
திருச்சிற்றம்பலம்

3.097.திருச்சிறுகுடி 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மங்களேசுவரர். தேவியார் - மங்களநாயகியம்மை. 

3842 3482. திடமலி மதிளணி சிறுகுடி மேவியபடமலி யரவுடை யீரேபடமலி யரவுடை யீருமைப் பணிபவர்அடைவது மமருல கதுவே 3.097.1
வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர். 

3843 சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவியசுற்றிய சடைமுடி யீரேசுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்உற்றவ ருறுபிணி யிலரே 3.097.2
குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை. 

3844 தௌளிய புனலணி சிறுகுடி மேவியதுள்ளிய மானுடை யீரேதுள்ளிய மானுடை யீரும தொழுகழல்உள்ளுதல் செயநல முறுமே 3.097.3
தௌந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர். 

3845 செந்நெல வயலணி சிறுகுடி மேவியஒன்னலர் புரமெரித் தீரேஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்சொன்னல முடையவர் தொண்டே 3.097.4
செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச் சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர். (உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு பதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர்). 

3846 செற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவியபெற்றிகொள் பிறைமுடி யீரேபெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்சற்றவ ரருவினை யிலரே 3.097.5
பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே! பேறு பெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள். அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர். 

3847 செங்கயல் புனலணி சிறுகுடி மேவியமங்கையை யிடமுடை யீரேமங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்சங்கைய திலர்நலர் தவமே 3.097.6
செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, உமாதேவி யைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளம்கும் சிவபெருமானே! உமா தேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர். நலமிக்கவரும், தவப்பேறு உடைய வரும் ஆவர். 

3848 செறிபொழி றழுவிய சிறுகுடி மேவியவெறிகமழ் சடைமுடி யீரேவெறிகமழ் சடைமுடி யீரு விரும்பிமெய்ந்நெறியுணர் வோருயர்ந்தோரே 3.097.7
அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர். 

3849 திரைசயவர் தொழுதெழு சிறுகுடி மேவியதசமுகு னுரநெரித் தீரேதசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்வசையறு மதுவழி பாடே 3.097.8
எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை வழிபட்டதன் பலனாகும். 

3850 செருவரை வயலமர் சிறுகுடி மேவியஇருவர யசைவுசெய் தீரேஇருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்அருவிணை யொடுதுய ரிலரே 3.097.9
வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு கொண்ட திருமால், பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர். 

3851 செய்த்தலை புனலணி சிறுகுடி மேவியபுத்தரோ டமண்புறத் தீரேபுத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்பத்தர்கள் தம்முடியப் பரிசே 3.097.10
வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர். 

3852 தேனமர் பொழிலணி சிறுகுடி மேவியமானமர் கரமுடை யீரேமானமர் கரமுடை யீருமை வாழ்த்தியஞானசம் பந்தன தமிழே 3.097.11
வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.