LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-100

1.100.திருப்பரங்குன்றம் 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர். 
தேவியார் - ஆவுடைநாயகியம்மை. 
1080 நீடலர்சோதி வெண்பிறையோடு
நிரைகொன்றை
சூடலனந்திச் சுடரெரியேந்திச்
சுடுகானில்
ஆடலனஞ்சொ லணியிழையாளை
யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும்
பரங்குன்றே.
1.100.1
நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண்பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று. 
1081 அங்கமொராறும் மருமறைநான்கும்
மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற்
பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர்
தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும்
பரங்குன்றே.
1.100.2
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம். 
1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே
னிரைகொன்றை
சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ்
சேய்தாய
ஓருடம்புள்ளே யுமையொருபாக
முடனாகிப்
பாரிடம்பாட வினிதுறைகோயில்
பரங்குன்றே.
1.100.3
கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக்கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம். 
1083 வளர்பூங்கோங்க மாதவியோடு
மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப்
பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையனல்லாளோ
டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய
நகர்தானே.
1.100.4
வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும். 
1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம்
புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன்
றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய
பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை
யுறுநோயே.
1.100.5
பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடுபொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை. 
1085 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்
கனன்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச்
சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும்
பொருசூலப்
படைநவில்வான்ற னன்னகர்போலும்
பரங்குன்றே.
1.100.6
வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம். 
1086 அயிலுடைவேலோ ரனல்புல்குகையி
னம்பொன்றால்
எயில்படவெய்த வெம்மிறைமேய
விடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும்
வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத
பரங்குன்றே.
1.100.7
கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசை பாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும். 
1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன்
மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான்
பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச்
சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல்
நில்லாவே.
1.100.8
மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட் போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின்சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா. 
1088 முந்தியிவ்வையந் தாவியமாலு
மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த
வுரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித்
திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன்
பரங்குன்றே.
1.100.9
மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகிய கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று. 
1089 குண்டாய்முற்றுந் திரிவார்கூறை
மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு
மெய்யல்ல
பண்டானீழன் மேவியவீசன்
பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல்
நில்லாவே.
1.100.10
பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும். 
1090 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான
சம்பந்தன்
படமலிநாக மரைக்கசைத்தான்றன்
பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந்
துயர்போகி
விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை
மிக்கோரே.
1.100.11
பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப் பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர். 
திருச்சிற்றம்பலம்

1.100.திருப்பரங்குன்றம் 
பண் - குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர். தேவியார் - ஆவுடைநாயகியம்மை. 

1080 நீடலர்சோதி வெண்பிறையோடுநிரைகொன்றைசூடலனந்திச் சுடரெரியேந்திச்சுடுகானில்ஆடலனஞ்சொ லணியிழையாளையொருபாகம்பாடலன்மேய நன்னகர்போலும்பரங்குன்றே.1.100.1
நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண்பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று. 

1081 அங்கமொராறும் மருமறைநான்கும்மருள்செய்துபொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற்பொலிவித்துத்திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர்தேன்மொழிபங்கினன்மேய நன்னகர்போலும்பரங்குன்றே.1.100.2
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம். 

1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேனிரைகொன்றைசீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ்சேய்தாயஓருடம்புள்ளே யுமையொருபாகமுடனாகிப்பாரிடம்பாட வினிதுறைகோயில்பரங்குன்றே.1.100.3
கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக்கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம். 

1083 வளர்பூங்கோங்க மாதவியோடுமல்லிகைக்குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப்பரங்குன்றம்தளிர்போன்மேனித் தையனல்லாளோடொருபாகம்நளிர்பூங்கொன்றை சூடினன்மேயநகர்தானே.1.100.4
வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும். 

1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம்புரிசடைத்துன்னியசோதி யாகியவீசன்றொன்மறைபன்னியபாட லாடலன்மேயபரங்குன்றைஉன்னியசிந்தை யுடையவர்க்கில்லையுறுநோயே.1.100.5
பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடுபொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை. 

1085 கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்கனன்மூழ்கத்தொடைநவில்கின்ற வில்லினனந்திச்சுடுகானில்புடைநவில்பூதம் பாடநின்றாடும்பொருசூலப்படைநவில்வான்ற னன்னகர்போலும்பரங்குன்றே.1.100.6
வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம். 

1086 அயிலுடைவேலோ ரனல்புல்குகையினம்பொன்றால்எயில்படவெய்த வெம்மிறைமேயவிடம்போலும்மயில்பெடைபுல்கி மாநடமாடும்வளர்சோலைப்பயில்பெடைவண்டு பாடலறாதபரங்குன்றே.1.100.7
கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசை பாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும். 

1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன்மகுடங்கள்பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான்பரங்குன்றைச்சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச்சிவனென்றுநித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல்நில்லாவே.1.100.8
மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட் போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின்சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா. 

1088 முந்தியிவ்வையந் தாவியமாலுமொய்யொளிஉந்தியில்வந்திங் கருமறையீந்தவுரவோனும்சிந்தையினாலுந் தெரிவரிதாகித்திகழ்சோதிபந்தியலங்கை மங்கையொர்பங்கன்பரங்குன்றே.1.100.9
மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகிய கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று. 

1089 குண்டாய்முற்றுந் திரிவார்கூறைமெய்போர்த்துமிண்டாய்மிண்டர் பேசியபேச்சுமெய்யல்லபண்டானீழன் மேவியவீசன்பரங்குன்றைத்தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல்நில்லாவே.1.100.10
பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும். 

1090 தடமலிபொய்கைச் சண்பைமன்ஞானசம்பந்தன்படமலிநாக மரைக்கசைத்தான்றன்பரங்குன்றைத்தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந்துயர்போகிவிடமலிகண்ட னருள்பெறுந்தன்மைமிக்கோரே.1.100.11
பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப் பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.