LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-116

1.116.திரு நீலகண்டம் 
பண் - வியாழக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 
இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. 
1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு
மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக்
கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்
நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.1
நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம் என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங்
கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென்
றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்
நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.2
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை. 
1251 முலைத்தட மூழ்கிய போகங் களுமற்
றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட
விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு
மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறாதிரு
நீலகண்டம்.
1.116.3
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை. 
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும்
வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும்
புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங்
கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.4
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் புண்ணிய வடிவமானவர் என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண்
டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந்
தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி
யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.5
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை
வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை
யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும்
பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.6
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்கொண்டு பூசித்து உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள் எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங்
கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும்
நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள்
செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.8
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் 'தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே! என உருகிப் போற்றுவோமாயின் சிவனடிவழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும் தீவினை. 
1256 நாற்ற மலர்மிசை நான்முக னாரணன்
வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந்
தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும்
நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.9
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத் தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திரு நீலகண்டத்தின்மேல் ஆணை. 
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி
யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும்
பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி
போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு
நீலகண்டம்.
1.116.10
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன்
கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர்
கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ்
பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங்
கூடுவரே.
1.116.11
மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவ பிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர். 
திருச்சிற்றம்பலம்

1.116.திரு நீலகண்டம் 
பண் - வியாழக்குறிஞ்சி 
திருச்சிற்றம்பலம் 

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. 

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்உய்வினை நாடா திருப்பது முந்தமக்கூனமன்றேகைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்நாமடியோம்செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.1
நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம் என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 

1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங்கனிமனத்தால்ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென்றிருபொழுதும்பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்நாமடியோம்தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.2
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை. 

1251 முலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையுமெல்லாம்விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்டவிரிசடையீர்இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவுமிவையுடையீர்சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறாதிருநீலகண்டம்.1.116.3
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை. 

1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும்வேதியரும்புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும்புண்ணியரேகண்ணிமை யாதன மூன்றுடை யீருங்கழலடைந்தோம்திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.4
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் புண்ணிய வடிவமானவர் என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 

1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண்டோளுடையீர்கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந்தன்மைகொல்லோசொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடியேயடைந்தோம்செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.5
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 

1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியைவற்புறுத்திப்பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழையாதவண்ணம்பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும்பணியடியோம்சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.6
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்கொண்டு பூசித்து உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள் எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 

இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.053.7

1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங்கழலடிக்கேஉருகி மலர்கொடு வந்துமை யேத்துதும்நாமடியோம்செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள்செய்தவரேதிருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.8
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் 'தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே! என உருகிப் போற்றுவோமாயின் சிவனடிவழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும் தீவினை. 

1256 நாற்ற மலர்மிசை நான்முக னாரணன்வாதுசெய்துதோற்ற முடைய வடியு முடியுந்தொடர்வரியீர்தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும்நாமடியோம்சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.9
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத் தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திரு நீலகண்டத்தின்மேல் ஆணை. 

1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகியுடையொழிந்தும்பாக்கிய மின்றி யிருதலைப் போகமும்பற்றும்விட்டார்பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடிபோற்றுகின்றோம்தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிருநீலகண்டம்.1.116.10
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. 

1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன்கழலடைவான்இறந்த பிறவியுண் டாகி லிமையவர்கோனடிக்கண்திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ்பத்தும்வல்லார்நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங்கூடுவரே.1.116.11
மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவ பிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.