LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

முதல் திருமுறை-74

1.074.திருப்புறவம் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 
திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். 
தேவியார் - திருநிலைநாயகி. 
798 நறவநிறைவண் டறைதாக்கொன்றை
நயந்து நயனத்தாற்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம்
பொடியா விழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார்
புரமூன் றெரிசெய்த
இறைவன்அறவ னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.1
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்ப நலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும் பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித் துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
799 உரவன்புலியி னுரிதோலாடை
யுடைமேற் படநாகம்
விரிவிவிரிபூங் கச்சாவசைத்த
விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப்
புறவம் பதியாக
இரவும்பகலு மிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.2
மிக்க வலிமையை உடையவனும், புலியினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர் செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான். 
800 பந்தமுடைய பூதம்பாடப்
பாதஞ் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக்
கரிகாட் டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம்
பதியா வமர்வெய்தி
எந்தம்பெருமா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.3
எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
801 நினைவார்நினைய வினியான்பனியார்
மலர்தூய் நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை
திங்கள் கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ்
புறவம் பதியாக
எனையாளுடையா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.4
என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
802 செங்கணரவு நகுவெண்டலையு
முகிழ்வெண் டிங்களுந்
தங்குசடையன் விடையனுடையன்
சரிகோ வணவாடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார்
புறவம் பதியாக
எங்கும்பரவி யிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.5
சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கி எழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 
803 பின்னுசடைகள் தாழக்கேழ
லெயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகடோறு
மழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார்
புறவம் பதியாக
என்னையுடையா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.6
என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப் பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 
804 உண்ணற்கரிய நஞ்சையுண்
டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த
விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப்
புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.7
யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
805 விண்டானதிர வியனார்கயிலை
வேரோ டெடுத்தான்றன்
றிண்டோளுடலு முடியுநெரியச்
சிறிதே யூன்றிய
புண்டானொழிய வருள்செய்பெருமான்
புறவம் பதியாக
எண்டோளுடையா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.8
எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலை மலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
806 நெடியானீடா மரைமேலயனும்
நேடிக் காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள
வரைபோற் றிருமார்பிற்
பொடியார்கோல முடையான்கடல்சூழ்
புறவம் பதியாக
இடியார்முழவா ரிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.9
திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல்உறையும் நான்முகனும் தேடிக் காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 
807 ஆலும்மயிலின் பீலியமண
ரறிவில் சிறுதேரர்
கோலும்மொழிக ளொழியக்குழுவுந்
தழலு மெழில்வானும்
போலும்வடிவு முடையான்கடல்சூழ்
புறவம் பதியாக
ஏலும்வகையா லிமையோரேத்த
வுமையோ டிருந்தானே.
1.074.10
ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 
808 பொன்னார்மாட நீடுஞ்செல்வப்
புறவம் பதியாக
மின்னாரிடையா ளுமையாளோடு
மிருந்த விமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரக
னுரைத்த தமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார்
பரலோ கந்தானே.
1.074.11
அழகு பொருந்திய உயர்ந்த மாட வீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப் பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர். 
திருச்சிற்றம்பலம்

1.074.திருப்புறவம் 
பண் - தக்கேசி 
திருச்சிற்றம்பலம் 

திருப்புறவம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி. 

798 நறவநிறைவண் டறைதாக்கொன்றைநயந்து நயனத்தாற்சுறவஞ்செறிவண் கொடியோனுடலம்பொடியா விழிசெய்தான்புறவமுறைவண் பதியாமதியார்புரமூன் றெரிசெய்தஇறைவன்அறவ னிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.1
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்ப நலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும் பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித் துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

799 உரவன்புலியி னுரிதோலாடையுடைமேற் படநாகம்விரிவிவிரிபூங் கச்சாவசைத்தவிகிர்த னுகிர்தன்னாற்பொருவெங்களிறு பிளிறவுரித்துப்புறவம் பதியாகஇரவும்பகலு மிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.2
மிக்க வலிமையை உடையவனும், புலியினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர் செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான். 

800 பந்தமுடைய பூதம்பாடப்பாதஞ் சிலம்பார்க்கக்கந்தமல்கு குழலிகாணக்கரிகாட் டெரியாடிஅந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம்பதியா வமர்வெய்திஎந்தம்பெருமா னிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.3
எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

801 நினைவார்நினைய வினியான்பனியார்மலர்தூய் நித்தலுங்கனையார்விடையொன் றுடையான்கங்கைதிங்கள் கமழ்கொன்றைபுனைவார்சடையின் முடியான்கடல்சூழ்புறவம் பதியாகஎனையாளுடையா னிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.4
என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

802 செங்கணரவு நகுவெண்டலையுமுகிழ்வெண் டிங்களுந்தங்குசடையன் விடையனுடையன்சரிகோ வணவாடைபொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார்புறவம் பதியாகஎங்கும்பரவி யிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.5
சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கி எழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 

803 பின்னுசடைகள் தாழக்கேழலெயிறு பிறழப்போய்அன்னநடையார் மனைகடோறுமழகார் பலிதேர்ந்துபுன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார்புறவம் பதியாகஎன்னையுடையா னிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.6
என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப் பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 

804 உண்ணற்கரிய நஞ்சையுண்டொருதோ ழந்தேவர்விண்ணிற்பொலிய வமுதமளித்தவிடைசேர் கொடியண்ணல்பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப்புறவம் பதியாகஎண்ணிற்சிறந்த விமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.7
யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

805 விண்டானதிர வியனார்கயிலைவேரோ டெடுத்தான்றன்றிண்டோளுடலு முடியுநெரியச்சிறிதே யூன்றியபுண்டானொழிய வருள்செய்பெருமான்புறவம் பதியாகஎண்டோளுடையா னிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.8
எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலை மலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

806 நெடியானீடா மரைமேலயனும்நேடிக் காண்கில்லாப்படியாமேனி யுடையான்பவளவரைபோற் றிருமார்பிற்பொடியார்கோல முடையான்கடல்சூழ்புறவம் பதியாகஇடியார்முழவா ரிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.9
திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல்உறையும் நான்முகனும் தேடிக் காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான். 

807 ஆலும்மயிலின் பீலியமணரறிவில் சிறுதேரர்கோலும்மொழிக ளொழியக்குழுவுந்தழலு மெழில்வானும்போலும்வடிவு முடையான்கடல்சூழ்புறவம் பதியாகஏலும்வகையா லிமையோரேத்தவுமையோ டிருந்தானே.1.074.10
ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான். 

808 பொன்னார்மாட நீடுஞ்செல்வப்புறவம் பதியாகமின்னாரிடையா ளுமையாளோடுமிருந்த விமலனைத்தன்னார்வஞ்செய் தமிழின்விரகனுரைத்த தமிழ்மாலைபன்னாள்பாடி யாடப்பிரியார்பரலோ கந்தானே.1.074.11
அழகு பொருந்திய உயர்ந்த மாட வீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப் பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 30 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.