LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- முஸ்லீம் பண்டிகைகள்

மிலாடி நபி

 

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். 
மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணி 
தான் நபிகள் நாயகம். நாயகம் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார்கள். இவரது தந்தை ஹஸ்ரத் அப்துல்லாஹ். தாய் 
ஹஸ்ரத் ஆமீனா. நாயகம் அவர்களை ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று 
அழைப்பர்.  நாயகம் அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அவர்களது தந்தை இறந்து விட்டார். தாயார் ஆமீனா, அவர் பிறந்த ஆறாம் ஆண்டில் காலமாகி 
விட்டார். எனவே, பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் நாயகம்  அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவரும் காலமாகி விடவே, சிறிய 
தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் இருந்தார்கள்.  அண்ணலார் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்கள். இதன் 
காரணமாக மக்கள் அவர்களை அல் அமீன் என்றும், அஸ்ஸாதிக் என்றும் பாராட்டினர். 
வாழ்க்கை வரலாறு:23ம் வயதில் இவர் கதீஜா அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள்.  40ம் வயதில் இவர்களை தனது தூதராக 
அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் 
மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை 
பெற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையார் அவர்கள் சுவர்க்கத்து பெண்களின் தலைவி 
என போற்றப்படுகிறார்கள்.நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் 
அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்று சொன் னார் கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் 
கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. 
மிலாடி நபி பெயர்க்காரணம்: மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து 
மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை 
நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந்தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் 
தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என்னும் பெயரில் 
கொண்டாடுகிறார்கள்.

     இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணி தான் நபிகள் நாயகம். நாயகம் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார்கள். இவரது தந்தை ஹஸ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஸ்ரத் ஆமீனா. நாயகம் அவர்களை ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று அழைப்பர்.  

 

     நாயகம் அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அவர்களது தந்தை இறந்து விட்டார். தாயார் ஆமீனா, அவர் பிறந்த ஆறாம் ஆண்டில் காலமாகி விட்டார். எனவே, பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் நாயகம்  அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவரும் காலமாகி விடவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் இருந்தார்கள்.  அண்ணலார் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை அல் அமீன் என்றும், அஸ்ஸாதிக் என்றும் பாராட்டினர். 

 

வாழ்க்கை வரலாறு:

 

     23ம் வயதில் இவர் கதீஜா அம்மையாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டார்கள்.  40ம் வயதில் இவர்களை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம் அவர்களுக்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா அம்மையார், இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு ஹசன், ஹுசைன் என பெயரிடப்பட்டது.

 

     பாத்திமா அம்மையார் அவர்கள் சுவர்க்கத்து பெண்களின் தலைவி என போற்றப்படுகிறார்கள்.நபிகள் நாயகம் அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப் பட்டதும், நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன், என்று சொன் னார் கள். இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர்கள் கடுமையான சோதனைகளை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள மெதீனாவுக்கு குடிபெயர வேண்டியதாயிற்று. 

 

மிலாடி நபி பெயர்க்காரணம்:

 

     மெதீனாவில் தான் நாயகம் அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள் நாயகம் அவர்கள். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவர்களுக்கு இணை யாருமில்லை. அவர்கள் இவ்வுலகில் தங்களது 63ம் வயதுவரை வாழ்ந்தார்கள். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே மிலாடி நபி என்னும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

by Swathi   on 17 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.