LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

முத்தப்பருவம்

328 வாரா ரூசல் வடமலைப்ப மாறா தேறி யுடனலைந்தவ்
      வடநா ணறக்கீழ் விழுவானை வல்லை நிலத்தாங் குவதேய்ப்பப்
போரார் பஞ்சப் புலக்கயிறு பொருக்கென் றறத்தஞ் செயல்யாவும்
      போக்கிக் கிடக்கும் பசுக்கடமைப் புகன்று தாங்கு மருட்கொடியே
நீரார் நிழலந் நிலந்தோற்றா நீர்மை போல வுயிர்க்குயிராய்
      நிற்பா ரோடு குணகுணியாய் நிற்பாய் பொற்பா ரடியார்க்கே
சீரார் திருவந் தருவாய்நின் றிருவாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் குழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.
(1)

 

329 வாடுங்குழவிக் கிரங்கியிவண் வதித லெனக்கண் டிடக்கூடா
      மாதா முலைப்பா லுருக்கொண்டு வரல்போ லிருகண் மழைவார
நேடுமுயிர்கட் கிரங்கியரு ணிலைப்பே ருருவங் கொடுதோன்று
      நிமலத் தருவி னிடம்பிரியா நிறைப்பூங் கொடியே விரைந்தடியேஞ்
சாடும் புலக்கோ டறக்கருணைத் தனிமண் டொடுகூர்ங் கருவிகொடு
      சாய்த்துட் புனலை நின்னிருதர்ட் சலதி மடுக்கப் பாய்ச்சிமகிழ்
சேடு பெறவுஞ் செய்வாய்நின் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.
(2)

 

330 கானார் கொன்றை முடிக்கணிந்த கடவுட் பெருமான் றிருவுள்ளக்
      கமல மலர வரமடலார் கடகக் கரமுண் டகங்குவிய
வானார் சகோரப் பறவைவியன் மதியி னிலவென் றோடிவர
      வளைக்கை யிருந்த சுகம்பவள வள்ளத் தமுதென் றங்காப்ப
மீனார் தடங்கட் கலைமகடன் மேனி கருமைத் தெனநாண
      விரும்பும் பணியிற் பாதிகொள்வாள் விளைவை யறிந்து திருமகிழத்
தேனா ரிளவெண் மூரலெழுந் திருவாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே.
(3)

 

331 அருந்த வொருவெங் குருமழவுக் களிக்கு முலைப்பா லன்றியிவ
      ளமுதத் திருவாய் மொழியுமுயி ரளிக்கும் வெளிற்றென் பினுக்கென்றோ
பொருந்த விரைநா றுவளகத்திற் புல்லப் பொருந்தா தெனநினைந்தோ
      பொதியவ் வணியை நீத்துறுநின் புலவி தணித்துன் முகநோக்குங்
கருந்தண் கடனஞ் சருந்துபிரான் கழியன் பொருநால் வர்கடமிழ்க்குக்
      காணி கொடுத்த திருச்செவிகள் களிதூங் கிடமென் மழலைமொழி
திருந்து விருந்தூட் டிடுங்குமுதச் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே.
(4)

 

332 ஓங்குஞ் சிகரப் பொருப்பிறைவ னுயிரே யனைய திருத்தேவி
      யுவந்து கொங்கை நெரித்தூட்ட வுண்ட நறும்பான் மணநாற
வாங்கும் புணரிப் படைநெடுஞ்சூர் மாட்டுங் குழவிக் கூட்டியநின்
      மணிக்கண் முலைப்பா லக்குழவி வாய்முத் துவப்ப தானாறத்
தாங்குஞ் சிறைப்பைங் கிளிக்கருத்துந் தடித்த செருத்தற் சுரபியின்பாற்
      சலதி நாற் வெம்மான்வாய்த் தண்ணென் பவள நாறமதுத்
தேங்குங் குமுத மலர்நாறுஞ் செவ்வாய் முத்தந் தருகவே
      செழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே.
(5)


வேறு.

333 வெண்ணிறக் கோடுபடு முத்தமான் மட்சுவைய மிச்சிலி னழுந்துமுகளு -
      மீனமுத் தம்புலால் கமழும்வேய் முத்தமதன் விரிகொடுந் தழலின்முழுகு,
மொண்ணிறச் செஞ்சாலி முத்தங் கவைக்கா லொருத்தல்க ளுழக்கநெரியு -
      மூற்றங் கடாக்கரி மருப்புவிளை முத்தமிக லொன்னார் கறைக்கணளை யுந்,
தண்ணிறக் கந்திபடு முத்தம் பசப்புறுந் தறுகட் பொருஞ்சூகரத் -
      தாளுலவை முத்தமண் ணுழுதலிற் றேயுமிவை தரினுமெளி யேமலிரும்பேந்,
தெண்ணிறக் கொங்கைபங் கும்பவள வல்லியொரு செம்பவள முத்தமருளே -
      திருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே.
(6)

 

334 அலைகொண்ட விப்பிவிளை முத்தமுவர் மூழ்குநற வம்போ ருகத்துமுத்த -
      மம்மைநின் சேடிய ரடித்துவைப் புண்ணுமிக் கவிர்முத்தம் வேள்குழைப்ப,
நிலைகொண்ட வுருவமுடை பட்டுதிரு மகளிர்கள நேர்முத்த மகிழ்நர் தங்கை -
      நீட்டியிறு கத்தழு விடுந்தொறு மதுக்குணுமிந் நீர்முத்த மெமதெமதெனா,
விலைகொண்ட பைந்துழாய்க் கொண்டன்முத லிமையோ ரெடுத்துரைப் பாரதன்றி -
      யிடைபடுப் புண்ணுங் கரட்டோ டிரட்டைபடு மிவைசற்றும் யாங்கொளேம்போற்,
சிலைகொண்ட கைத்தலத் தெம்பர னுவந்தநின் செம்பவள முத்தமருளே -
      திருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே.
(7)


வேறு.

335 பொன்னியல் புரிசடை மாணிக் கத்தொரு புறம்வளர் மரகதமே
      பொங்குங் கொங்கைக் கங்கைத் திருமகள் போற்றும் பொற்கொடியே
துன்னிய புவன மனைத்து முயிர்த்த சுடர்த்த விளங்கொடியே
      தொண்ட ருளத்தமு தூறிட வூறுஞ் சுவைமுதிர் தெள்ளமுதே
பன்னிய கருணா நிதியே மறைமுடி வளரும் பைங்கிளியே
      மடநடை பயிலும் வெள்ளன மேயொரு மாத்திரை நினைவார்க்கு
முன்னிய யாவுந் தருவாய் திருவாய் முத்த மளித்தருளே
      மூவுல கேத்து முறந்தை யிருந்தபெண் முத்த மளித்தருளே.
(8)


வேறு.

336 சிவந்த தழலிடை விழுந்த மெழுகென நெக்குரு கிக்கனிவார்
      தெளிந்த வுளமுற நலஞ்செ யிருபத பத்ம நிறுத்திடுவாய்
நிவந்த சடையிடை வளைந்த மதியுர கத்தை முடித்திடுவார்
      நிறஞ்நெய் திருவுடல் பகிர்ந்து மகிழும தர்த்தகடைக்கண்மினே
தவந்த னளவில புரிந்தொர் மலையிறை பெற்றமடப்பிடியே
      தடங்கொ ளிருமுலை சுமந்து வருமொர்ப சுத்தவெழிற்கொடியே
யுவந்தென் மனனிலு முறைந்த களிமயில் முத்தமளித்தருளே
      யுறந்தை நகர்குடி யிருந்த திருமகள் முத்த மளித்தருளே.
(9)


வேறு.

337 தகர மொழுகு குழலு நுதலு மொழுகு மருளி னக்கமுந்
      தவள நிலவு குலவு நகையு மிலகு மிருசு வர்க்கமும்
பகர வரிய மலர்மெ லடியு மனனு ளெழுதி நித்தலும்
      பரவி யுருகு மடிய ரிடமு நெடிய புகழ்கொள் குக்குட
நகரி னிடமு மெனது ளகமு மருவி யுறையு முத்தமி
      நறவு குதிகொள் பொழிலி னளிகள் விளரி யிசைமி ழற்றிட
வொகர மகவு மிமய முதவு புதல்வி தருக முத்தமே
      யொளிசெ யுலக முழுது முதவு முதல்வி தருக முத்தமே.
(10)
by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.