LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார்-நட்பாராய்தல்

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு. 211
நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாம். எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போலும் தன்மையுடையதாகும். (கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பதாம்). 
இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று. 212
பொன்னைக் கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவா¢ன் உயர் குடிப்பிறப்பை நோக்கி, 'இவர் இடையில் மாறமாட்டார்' என்னும் நம்பிக்கையால் நட்புக் கொள்வதேயல்லாமல், பிறருடைய மனநிலையை அறிந்து நட்புக் கொள்வது என்பதில்லை. (எனினும் நட்புக்கு மனக்கருத்தும் அறிதல் வேண்டும் என்பது உட்பொருள்). 
யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய். 213
யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். (கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவா¢டம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம் என்பது கருத்து. 
பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு. 214
பலநாட்களாகப் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனத்துடன் பொருத்தமில்லாதரோடு அறிவுடையோர் சேரமாட்டார்கள். அங்ஙனமின்றித் தம் நெஞ்சம் பிணித்தாரோடு கொண்ட நட்பினை, தம்மை விட்டுப் பல நாட்கள் விலகியிருந்தார்கள் என்பதற்காக அவர்களைக் கைவிடுவார்களோ? (மனப்பொருத்தம் உடையாரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங்கிழமை தரும்' என்பது குறள்). 
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல். 215
கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்). 
கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு. 216
நட்புத் தன்மையில் கடையாயவர், நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பராமா¢க்க உதவும் பாக்கு மரம் போல, நாள்தோறும் உதவி செய்தால்தான் பயன்படுவர்; இடையாயவர், விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம்போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர்; தொன்மைத் தொடர்பு பாராட்டும் (ஒரு முறை செய்த நட்பினைப் போற்றும்) தன்மையுடைய தலையாயவர். விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமா¢ப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர். 
கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217
அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த, கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் (நண்பா¢டமிருந்து) அன்புடன் பெற்றால் அ·து அமிழ்தமாகும். (ஆனால்) சீரிய தாளிப்பினையுடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும், அன்பிலாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின், அ·து எட்டிக் காயைத் தின்பது போலாம். (உணவின் சுவையும் நட்பினர் பண்புக்கு ஏற்ப அமையும்). 
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. 218
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து). 
தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று. 219
அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது; மருந்தினால் தீராத கொடிய நோயை விடச் சாதல் நல்லது; ஒருவரது மனம் மிகவும் வருந்தும்படி இகழ்தலைவிட அவரைக் கொல்வது நல்லது; ஒருவா¢டம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலைவிட அவரைப் பழித்தல் நல்லது. (நோயினும் சாதல் நன்றாதல் போல, புகழ்தலை விடப் பழித்தல் நன்றாதல் போல, அறிவிலார் நட்பைவிடப் பகை நல்லது என்பது கருத்து). 
மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு. 220
பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகிப் பலருடைய குணங்களையும் ஒப்பிட்டு அறிந்து தகுதியுடைய மேலோரை நண்பராகக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும், பழகிவிட்டுப் பின் பிரிதல் துன்பம் தருவதாகும். (கூடிப் பழகியபின் பிரிதல் துன்பம் ஆதலின், முன்பே ஒருவரது குணங்களை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பது கருத்து). 

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்குஎதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்மதுரம் இலாளர் தொடர்பு. 211
நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாம். எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போலும் தன்மையுடையதாகும். (கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பதாம்). 

இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!மனமறியப் பட்டதொன் றன்று. 212
பொன்னைக் கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவா¢ன் உயர் குடிப்பிறப்பை நோக்கி, 'இவர் இடையில் மாறமாட்டார்' என்னும் நம்பிக்கையால் நட்புக் கொள்வதேயல்லாமல், பிறருடைய மனநிலையை அறிந்து நட்புக் கொள்வது என்பதில்லை. (எனினும் நட்புக்கு மனக்கருத்தும் அறிதல் வேண்டும் என்பது உட்பொருள்). 

யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்மெய்யதா வால்குழைக்கும் நாய். 213
யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். (கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவா¢டம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம் என்பது கருத்து. 

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்துயாத்தாரோடு யாத்த தொடர்பு. 214
பலநாட்களாகப் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனத்துடன் பொருத்தமில்லாதரோடு அறிவுடையோர் சேரமாட்டார்கள். அங்ஙனமின்றித் தம் நெஞ்சம் பிணித்தாரோடு கொண்ட நட்பினை, தம்மை விட்டுப் பல நாட்கள் விலகியிருந்தார்கள் என்பதற்காக அவர்களைக் கைவிடுவார்களோ? (மனப்பொருத்தம் உடையாரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங்கிழமை தரும்' என்பது குறள்). 

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாதுவேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்டகயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரைநயப்பாகும் நட்பாரும் இல். 215
கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்). 

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. 216
நட்புத் தன்மையில் கடையாயவர், நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பராமா¢க்க உதவும் பாக்கு மரம் போல, நாள்தோறும் உதவி செய்தால்தான் பயன்படுவர்; இடையாயவர், விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம்போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர்; தொன்மைத் தொடர்பு பாராட்டும் (ஒரு முறை செய்த நட்பினைப் போற்றும்) தன்மையுடைய தலையாயவர். விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமா¢ப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர். 

கழுநீருள் காரட கேனும் ஒருவன்விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமியகுய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்கைத்துண்டல் காஞ்சிரங் காய். 217
அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த, கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் (நண்பா¢டமிருந்து) அன்புடன் பெற்றால் அ·து அமிழ்தமாகும். (ஆனால்) சீரிய தாளிப்பினையுடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும், அன்பிலாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின், அ·து எட்டிக் காயைத் தின்பது போலாம். (உணவின் சுவையும் நட்பினர் பண்புக்கு ஏற்ப அமையும்). 

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு. 218
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து). 

தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்விளியா அருநோயின் நன்றால் - அளியஇகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லாபுகழ்தலின் வைதலே நன்று. 219
அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது; மருந்தினால் தீராத கொடிய நோயை விடச் சாதல் நல்லது; ஒருவரது மனம் மிகவும் வருந்தும்படி இகழ்தலைவிட அவரைக் கொல்வது நல்லது; ஒருவா¢டம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலைவிட அவரைப் பழித்தல் நல்லது. (நோயினும் சாதல் நன்றாதல் போல, புகழ்தலை விடப் பழித்தல் நன்றாதல் போல, அறிவிலார் நட்பைவிடப் பகை நல்லது என்பது கருத்து). 

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னாமரீஇப் பின்னைப் பிரிவு. 220
பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகிப் பலருடைய குணங்களையும் ஒப்பிட்டு அறிந்து தகுதியுடைய மேலோரை நண்பராகக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும், பழகிவிட்டுப் பின் பிரிதல் துன்பம் தருவதாகும். (கூடிப் பழகியபின் பிரிதல் துன்பம் ஆதலின், முன்பே ஒருவரது குணங்களை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பது கருத்து). 

by Swathi   on 29 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
கருத்துகள்
30-Aug-2017 12:50:41 சுப்ரமணியன் NA said : Report Abuse
நாற்றம் உரைக்கும் மலருண்மை கூறிய மாற்றம் உரைக்கும் வினைநலம் தூக்கின் அகம் பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம் முகம் போல முன்னுரைப்பதில். - இந்த செய்யுள் எந்த தலைப்பில் வருகிறது ?; ஆசிரியர் யார் ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.