LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

நான் - பிள்ளை

 

திடீரென வானம் விழுந்தது.
நாலு தென்னைகளும் ஆறேழு பனையும்
தலையாலே முறிந்து தொங்கின.
ஒரு கோழி வீறிட்டுக் கத்தியது.
எனது பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தான்.
வாசல் முழுக்க நட்சத்திரங்கள்
உடைந்து நொறுங்கிக் கிடந்தன. 
ஒரு முகிலை எடுத்து அளைந்துவிட்டு முத்தமிட்டான்.
பின்னர் எழுந்து
அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளை
ஒட்டிப் பார்த்தான். பிறகு எறிந்தான்
இன்னொரு நிலவைச் செய்யலாம் என்று
தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான். 
நான் வீட்டுக்குள் இருந்தேன்.
என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய்
அழுத அழுகைகளை நினைத்தேன்.
ஒரு நட்சத்திரம்கூட என்னால் அந்த நாட்களில்
பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று.
வானம் என்னைவிட வெகு தொலைவில் இருந்தது.
என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய மாறுதல்!
மாங்காய்க்குக் கல்லை எறிவதுபோல்
வானுக்கு எறிந்து
நிலத்தில் கிடக்கின்ற பிள்ளை!
இப்போது அவன் வானத்தை 
மீண்டும் சரிசெய்துவிட்டு நடக்கிறான்.

 

திடீரென வானம் விழுந்தது.

நாலு தென்னைகளும் ஆறேழு பனையும்

தலையாலே முறிந்து தொங்கின.

ஒரு கோழி வீறிட்டுக் கத்தியது.

 

எனது பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தான்.

வாசல் முழுக்க நட்சத்திரங்கள்

உடைந்து நொறுங்கிக் கிடந்தன. 

ஒரு முகிலை எடுத்து அளைந்துவிட்டு முத்தமிட்டான்.

 

பின்னர் எழுந்து

அங்கே சிதறிக் கிடந்த நிலவின் துண்டுகளை

ஒட்டிப் பார்த்தான். பிறகு எறிந்தான்

இன்னொரு நிலவைச் செய்யலாம் என்று

தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தான். 

 

நான் வீட்டுக்குள் இருந்தேன்.

என் சின்ன வயதில் இந்த நிலவிற்காய்

அழுத அழுகைகளை நினைத்தேன்.

ஒரு நட்சத்திரம்கூட என்னால் அந்த நாட்களில்

பிடித்துப் பார்க்க முடியாமல் போயிற்று.

வானம் என்னைவிட வெகு தொலைவில் இருந்தது.

 

என் தலைமுறைக்குள் இப்படியொரு பெரிய மாறுதல்!

மாங்காய்க்குக் கல்லை எறிவதுபோல்

வானுக்கு எறிந்து

நிலத்தில் கிடக்கின்ற பிள்ளை!

 

இப்போது அவன் வானத்தை 

மீண்டும் சரிசெய்துவிட்டு நடக்கிறான்.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.