LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-101

4.101.திருவின்னம்பர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். 
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை. 
966 மன்னு மலைமகள் கையால் வருடின
மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின
தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத் தொண்டர்க்
கமுதரும்பி
இன்னல் களைவன வின்னரம்ப ரான்ற
னிணையடியே.
4.101.1
இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின் கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம் பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன. தூய தாமரை போன்ற வடிவின; தம்மாட்டு அன்புடைய அடியவர்களுக்கு அமுது வழங்கி அவர்களுடைய துயர்களைப் போக்குவன.
967 பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங்
கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ் செய்தன
சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங்கூற்றை யுதைத்தன
வும்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.2
இன்னம்பரான் தன் இணை அடிகள் இளம் பிள்ளைகளின் பிணங்களைக் காதணிகளாக அணியும் காளியின் கொடிய கோபத்தைப் போக்குவதற்கு மற்றவர்களால் செய்தற்கு அரிய திருக்கூத்தினை நிகழ்த்துவன. சிறப்புடைய அந்தணனாகிய மார்க்கண்டேயன் உயிர் தப்புவதற்காகக் கொடிய கூற்றுவனை உதைத்தன. தேவர்களுக்கெல்லாம் கிட்டுதற்கு அரியன.
968 சுணங்குநின் றார்கொங்கை யாளுமை சூடின
தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு
மறைகடம்மில்
பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன
பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.3
இன்னம்பரான் தன் இணையடிகள் தேமல் படர்ந்த கொங்கைகளை உடைய உமாதேவியால் சூடப்பட்டன; தேவர்கள் வணங்கிநின்று தூய மலர்களைத் தூவி வாழ்த்துதலைப் பொருந்தியன; என்றும் நிலைபெற்ற நான்கு வேதங்களும் தம்முள் கருத்து மாறுபட்டு உண்மையில் இத்தன்மையன என்று அறியப்படாதன; பேய்க் கூட்டத்தொடு கலந்து நின்று கூத்து நிகழ்த்தின.
969 ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க்
கப்பொருள்கள்
வேறொன்றி லாதன விண்ணோர் மதிப்பன
மிக்குவமன்
மாறொன்றி லாதன மண்ணொடு விண்ணகம்
மாய்ந்திடினும்
ஈறொன்றி லாதன வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.4
இன்னம்பரான் தன் இணையடிகள் ஆறு ஆறாக நான்கு வகைகளில் அடங்கிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு வேறாகாது அவ்வப் பொருள்களாக நின்று அருள்புரிவன; தேவர்களால் மதிக்கப்படுவன; தம்மை ஒப்பனவும் தம்மின் மிக்கனவும் இல்லாதன; நில உலகமும் மேல் உலகமும் அழிந்த காலத்தும் தமக்கு அழிவு இல்லாதன
970 அரக்கர்தம் முப்புர மம்பொன்றி னாலட
லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன
கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு வாயின
பல்பதிதோ
றிரக்க நடந்தன வின்னம்ப ரான்ற
னிணையடியே.
4.101.5
இன்னம்பரான் தன் இணை அடிகள், அரக்கர்களுடைய முப்புரங்களும் அம்பு ஒன்றினால் அழிக்கும் நெருப்பிற்கு இரையாகி மறையுமாறு அக்காலத்தில் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றன; எடுத்துக்கொண்ட வேடர் வடிவம் சிறக்குமாறு கொடிய காட்டிலே வேடர்களுடைய அடிகளின் வடிவின ஆயின; பல ஊர்கள்தோறும் பிச்சை எடுக்க நடந்தன.
971 கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழன்முன் றேடின
கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு மாயின
வாரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின
மேவுசிலம்
பீண்டுங் கழலின வின்னம்ப ரான்ற
னிணையடியே.
4.101.6
இன்னம்பரான் தன் இணையடிகள், நிலத்தைக் கிழித்தும் கிளரியும் பொலிவை உடைய பன்றி வடிவெடுத்த திருமாலால் தேடப்பட்டன; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊழிகள் கடந்தாலும் கெடுதியை அடையாதன; வேதங்களின் விரும்பிய பொருள் புலப்படுமாறு திருக்கூத்து நிகழ்த்தின; விரும்பிய சிலம்பும் கழலும் அணிந்தன.
972 போற்றுந் தகையன பொல்லா முயலகன்
கோபப்புன்மை
ஆற்றுந் தகையன வாறு சமயத்
தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச்
செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற
னிணையடியே.
4.101.7
இன்னம்பரான் தன் இணையடிகள், வழிபடத் தக்கன; கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையன; அறு வகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தௌவிக்கும் தன்மையன; தௌவடைந்த அடியவர்களை மேம்பட்ட நெறிக்கண் உயர்த்தும் தன்மையன.
973 பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன
பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக் குலாவின்
கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர்
வேதங்கணின்
றியம்புங் கழலின வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.8
இன்னம்பரான் தன் இணை அடிகள், அச்சமும் கீழ்மையும் ஒரு சேர வழங்கும் பாவங்களைப் போக்குவன; பார்வதியினுடைய தனங்களாகிய பொலிவுடைய தாமரை மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாகிய தம் இனத்தனவாகக் கொண்டு நட்புச் செய்தன; அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மாத்திரம் அடைய முடியாத தான்தோன்றி என்று சொல்லத் தகுந்த சிவபெருமானே அத்திருவடிகள் என்று நான்கு வேதங்களும் இயம்பும் சிறப்பினவாய்க் கழல்களை அணிந்தன, சிவபெருமான் செய்யும் அருள்களை அவன் திருவடிகளே வழங்கும் என்பதாம்.
974 அயனொடு மாலிந் திரன்சந்த்ரா தித்த
ரமரரெலாம்
சயசய வென்றுமுப் போதும் பணிவன
தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர்
வியனகர்க்கும்
இயபர மாவன வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.9
இன்னம்பரான் தன் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன் மற்றுள்ள தேவர்கள் எல்லோரும் சய சய என்று பல்லாண்டு பாடிக் காலை நண்பகல் அந்தி என்ற முப்பொழுதுகளிலும் பணியும் திறத்தன. குளிர்ந்த கடலால் சூழப்பட்டபரந்த இந்த நில உலகத்தில் உள்ளவர்களுக்கும் தேவர் உலகத்தவருக்கும் நாகர் உலகத்தவருக்கும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் நல்குவன.
975 தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன
தாமரைப்போ
துருக்கிய செம்பொ னுவமனி லாதன
வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை பத்து
நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின வின்னம்ப ரான்ற
னிணையடியே. 
4.101.10
இன்னம்பரானுடைய இணையடிகள், செருக்குற்ற தக்கனுடைய வேள்வியை அழித்தன; தாமரைப் பூ, உருக்கிய செம்பொன் என்பனவும் தமக்கு உவமம் ஆகாத வகையில் அவற்றிலும் மேம்பட்டன; கயிலையைப் பெயர்க்க முற்பட்ட கொடிய இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரித்து அவனால் பாடப்பட்ட வேதங்களின் இயல்பைத் தம் இயல்பாகக் கொண்டன.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.