LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-102

4.102.திருவாரூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
976 குலம்பலம் பாவரு குண்டர்முன்
னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புன
லாரூ ரவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
யான்றிரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.1
கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும்தண்ணிய நீர்வளம் மிக்க திருவாரூரில், விளங்குகின்ற சடைமுடியையும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையும் உடைய சிவபெருமானுடைய திருமூலத்தானத்தே, அப்பெருமானுடைய பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணி உருகுதலால் கண்ணீர் வடித்து வரும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப்பேறு, கூட்டமும் வலிமையும் பரவிய மூர்க்கர்களாகிய சமணர் காணுமாறு, அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்டுமோ?
977 மற்றிட மின்றி மனை துறந்
தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்
டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனொ
டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.2
அருச்சுனனுடைய வில்லின் வலிமையைக் கவர்ந்து அக்காலத்தில் வேடுவனாய்க் காட்சி வழங்கிய திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு, வீட்டினையும் துறந்து வேறு இடமும் இல்லாமல் இரவில் உண்ணுதல் இல்லாத உடல் வலிய சமணர்கள் கூறும் செய்திகளே உறுதியானவை என்று கருதிக் குற்றம் செய்த அடியேனுக்கும் கிட்டுமோ?
978 ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புர
மட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்
திருமூலட் டானன்செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.3
போருக்காக வளைத்துக் கொண்ட மேருமலையாகிய வில்லினாலே மும்மதில்களையும் அழித்தவனாய், தான் போய்த் தேடாமல் இயல்பாகவே மேம்பட்ட செல்வத்தை உடையனாய்த் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறைபவனான, திருமாலாகிய, சிவந்த கண்களை உடைய போரிடும் காளையை உடைய பெருமானுடைய அடியார்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு, ஆடைகளால் பொலிவு செய்யப்படும் வடிவழகின்றி நின்றபடியே உணவினை வாங்கி உண்ணும் மூர்க்கர்களாகிய சமணர், தம் கண்களால் காணுமாறு, அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
979 மாசினை யேறிய மேனியர்
வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு
வேனுக்கு முண்டுகொலோ
தேசனை யாரூர்த் திருமூலட்
டானனைச் சிந்தைசெய்து
பூசனைப்பூசுரர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.4
ஞான ஒளி வடிவினனாகிய திருவாரூர் மூலத்தானப் பெருமானைப் பூசனை செய்யும் நில உலகத்தேவர்களின் அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப் பேறு, அழுக்கு ஏறிய உடம்பினராய், அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணினராய் வழுக்கைத் தலையரான சமணர்களுடைய தொடர்பை விடுத்து, எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமானையே நினைத்து வருந்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
980 அருந்தும் பொழுதுரை யாடா
வமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று
வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதி லாரூர்த்
திருமூலட் டானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.5
திருத்தமாக அமைந்த பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானனுக்கு உகப்பான தவத்தில் ஈடுபட்ட அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு, உண்ணும் போது யாரிடமும் பேசாதிருத்தலை விரதமாகக் கொண்ட அமணர் கூட்டத்தை விடுத்து, பழைய செயலுக்கு வருந்தி நின்று 'தீவினையை அழிப்பவனே' என்று, அவனை வாழ்த்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
981 வீங்கிய தோள்களுந் தாள்களு
மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
திருமூலட் டானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.6
மணம் கமழும் சோலைகளை உடைய அழகிய ஆரூரில் திருமூலத்தானத்து உறையும் சிவந்த மலர்போன்ற திருவடிகளை உடைய பெருமான் திருவடிகளில் தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு, பருத்த தோள்களையும் கால்களையும் கொண்டு ஆடை உடுக்காதவராய் ஊமைகள் போல யாரிடமும் பேசாமல் உண்ணும் மூடர்களாகிய சமணர்கள் காணுமாறு நமக்குக் கிட்டும் வாய்ப்பு உளதோ?
982 பண்ணிய சாத்திரப் பேய்கள்
பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணில் புகழீசன் றன்னருள்
பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதி லாரூர்த்
திருமூலட் டானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.7
உறுதியான பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எங்கள் நல்வினை வடிவினனாகிய பெருமானுடைய அடித்தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம், தாமாகவே புனைந்துரைத்த சாத்திரங்களை உபதேசிப்பவராய், வலிய தலைமயிரை நீக்கிக் கொள்பவராய் உள்ள சமண மூர்க்கர்களை விடுத்துக் கணக்கிட முடியாத புகழை உடைய ஈசன் அருளைப் பெற்ற அடியேனுக்கும் உண்டோ?
983 கரப்பர்கண் மெய்யைத் தலைபறிக்
கச்சுக மென்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்
தேனுக்கு முண்டுகொலோ
திருப்பொலி யாரூர்த் திருமூலட்
டானன் றிருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே.
4.102.8
செல்வத்தால் பொலிவு பெற்ற திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் கயிலாயபதியிடம் விருப்பம் பொருந்திய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், ஒரோவழித் தம் உடம்பைப் பாயால் மறைப்பவராய்த் தலைமயிரை வலிய நீக்குவதே சுகம் என்று கூறும் சமண சமய மூர்க்கர்கள் உரைத்தனவற்றைக் கேளாமல் சிவபெருமான் பக்கல் கடைத்தேறுவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் உண்டோ?
984 கையிலிடு சோறு நின்றுண்ணுங்
காத லமணரைவிட்
டுய்யு நெறிகண்டிங் குய்யப்போந்
தேனுக்கு முண்டுகொலோ
ஐய னணிவய லாரூர்த்
திருமூலட் டானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.9
நம் தலைவனாய் அழகிய வயல்களை உடைய திருவாரூரின் திருமூலத்தானப் பெருமான் பக்கல் உண்மையான அன்புடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், கையில் வழங்கப்படும் சோற்றை நின்றபடியே உண்ணும் செயலில் விருப்பம் கொள்ளும் சமணரைவிடுத்து, பிழைத்தற்குரிய வழியைக் கண்டு சிவபெருமான் பக்கல் பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்காக வந்து சேர்ந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ?
985 குற்ற முடைய வமணர்
திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்
தேனுக்கு முண்டுகொலோ
மற்பொலி தோளா னிராவணன்
றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே. 
4.102.10
வலிமை பொருந்திய தோள்களை உடைய இராவணனுடைய வலிமையை அழியச் செய்த பொன்னாலாகிய கழலை அணிந்த சிவபெருமானுடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், குற்றமுடைய சமணர்கள் சமயத்தின் கூறுபாடுகளை விடுத்து நீங்கி, சைவ சமயத்தில் அடியேனுக்குச் செய்வதற்காக வகுக்கப்பட்ட செயல்களைச் செய்து பிறவிப் பிணியினின்றும் பிழைத்துப் போவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ?

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.