LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-106

4.106.திருப்புகலூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அக்கினீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
1009 தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன்
னடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன
கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத்
தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத்
திருத்திடுமே.
4.106.1
புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன் திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன் செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில் கொண்டு சேர்த்து விடுவான்.
1010 பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர்
மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்த னேதமி
யேற்கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக
லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம்
யாதுசொல்லே. 
4.106.2
பொன்னார் மேனியனே! பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம் தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
1011 பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக
லூரரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே
வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத்
தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்று மிரங்காத
வுத்தமனே. 
4.106.4
பொன்னை ஒத்த நீண்ட சடைக்கண் கொன்றைப்பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள் தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவா உளர்?
1012 ஓணப் பிரானு மொளிர்மா மலர்மிசை
யுத்தமனும்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர
நாலைந்துடைத்
தோணப் பிரானை வலிதொலைத் தோன்றொல்லை
நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா
கொடுவினையே.
4.106.10
திருவோணநாளுக்குத் தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக் காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில் உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய அளவில், கொடிய தீவினைகள் நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.