LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-108

4.108.திருக்கடவூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர். 
தேவியார் - அபிராமியம்மை. 
1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க்
கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி
போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப
வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.1
தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு, வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி, மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான்.
1017 பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப்
பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண
வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன
லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.2
ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
1018 கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன்
காமனையும்
நெருப்புமிழ் கண்ணின் னீள்புனற் கங்கையும்
பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப்
பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.3
வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய், மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய், கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய், வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன்.
1019 மறித்திகழ் கையினன் வானவர் கோனை
மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான்
கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத்
தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.4
மான்குட்டி விளங்கும் கையினனாய், தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட, மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன், கடவூர் உறை உத்தமன்.
1020 குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக்
குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர்
கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத்
தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.5
குழையணிந்த காதுகளை உடைய, தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன்.
1021 பாலனுக் காயன்று பாற்கட லீந்து
பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி
யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந்
தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.6
சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி, பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான், கடவூர் உறை உத்தமனாவான்.
1022 படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை
பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக்
கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத்
துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.7
பரவிய சடையிலே கொன்றைமாலை, பாம்பு மாலை, பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய், உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய், ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன்.
1023 வெண்டலை மாலையுங் கங்கை கரோடி
விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும்
பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து
கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.8
வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய், நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய், கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன்.
1024 கேழல தாகிக் கிளறிய கேசவன்
காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம்
மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை
யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை
யுத்தமனே.
4.108.9
பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய், தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய், ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய், எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன்.
1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை
திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை
யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங்
குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை
யுத்தமனே. 
4.108.10
தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வமாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய், ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.