LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-33

                                                                 4.033.திருமறைக்காடு 
                                                                     திருநேரிசை 
                                                                  திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
324       இந்திர னோடு தேவ
          ரிருடிக ளேத்து கின்ற
          சுந்தர மானார் போலுந்
          துதிக்கலாஞ் சோதி போலும்
          சந்திர னோடு கங்கை
          யரவையுஞ் சடையுள் வைத்து 
          மந்திர மானார் போலு
          மாமறைக் காட னாரே.                4.033.1
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.
325       தேயன நாட ராகித்
         தேவர்க டேவர் போலும்
         பாயன நாட றுக்கும்
         பத்தர்கள் பணிய வம்மின்
         காயன நாடு கண்டங்
         கதனுளார் காள கண்டர்
         மாயன நாடர் போலு
         மாமறைக் காட னாரே.                 4.033.2
தெய்வந் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழி பட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.
326      அறுமையிவ் வுலகு தன்னை
         யாமெனக் கருதிநின்று
         வெறுமையின் மனைகள் வாழ்ந்து
         வினைகளா னலிவு ணாதே
         சிறுமதி யரவு கொன்றை
         திகழ்தரு சடையுள் வைத்து
         மறுமையு மிம்மை யாவார்
         மாமறைக் காட னாரே.                  4.033.3
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.
327      கால்கொடுத் திருகை யேற்றிக்
         கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
         தோல்படுத் துதிர நீராற்
         சுவரெடுத் திரண்டு வாசல்
         ஏல்வுடைத் தாவ மைத்தங்
         கேழுசா லேகம் பண்ணி
         மால்கொடுத் தாவி வைத்தார்
         மாமறைக் காட னாரே                  4.033.4
மாமறைக்காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.
328       விண்ணினார் விண்ணின் மிக்கார்
          வேதங்கள் விரும்பி யோதப்
          பண்ணினார் கின்ன ரங்கள்
          பத்தர்கள் பாடி யாடக்
          கண்ணினார் கண்ணி னுள்ளே
          சோதியாய் நின்ற வெந்தை
          மண்ணினார் வலங்கொண் டேத்து
          மாமறைக் காட னாரே.             4.033.5
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.
329        அங்கையு ளனலும் வைத்தார்
          அறுவகைச் சமயம் வைத்தார்
          தங்கையில் வீணை வைத்தார்
          தம்மடி பரவ வைத்தார்
          திங்களைக் கங்கை யோடு
          திகழ்தரு சடையுள் வைத்தார்
          மங்கையைப் பாகம் வைத்தார்
          மாமறைக் காட னாரே.           4.033.6
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங் களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.
330      கீதராய்க் கீதங் கேட்டுக்
        கின்னரந் தன்னை வைத்தார்
        வேதராய் வேத மோதி
        விளங்கிய சோதி வைத்தார்
        ஏதராய் நட்ட மாடி
        யிட்டமாய்க் கங்கை யோடு
        மாதையோர் பாகம் வைத்தார்
        மாமறைக் காட னாரே.             4.033.7
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கையிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேதவடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவராய் உள்ளார்.
331     கனத்தினார் வலியு டைய
        கடிமதி லரண மூன்றும்
        சினத்தினுட் சினமாய் நின்று
        தீயெழச் செற்றார் போலும்
        தனத்தினைத் தவிர்ந்து நின்று
        தம்மடி பரவு வார்க்கு
        மனத்தினுண் மாசு தீர்ப்பார்
        மாமறைக் காட னாரே.            4.033.8
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.
332 தேசனைத் தேசன் றன்னைத்
          தேவர்கள் போற்றி சைப்பார்
          வாசனை செய்து நின்று     
          வைகலும் வணங்கு மின்கள்
          காசினைக் கனலை யென்றுங்
          கருத்தினில் வைத்த வர்க்கு
          மாசினைத் தீர்ப்பர் போலு
          மாமறைக் காட னாரே.          4.033.9
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.
333        பிணியுடை யாக்கை தன்னைப்
          பிறப்பறுத் துய்ய வேண்டில்
          பணியுடைத் தொழில்கள் பூண்டு
          பத்தர்கள் பற்றி னாலே
          துணிவுடை யரக்க னோடி
          யெடுத்தலுந் தோகை யஞ்ச
          மணிமுடிப் பத்தி றுத்தார்
          மாமறைக் காட னாரே.        4.033.10
கயிலையைப் பெயர்த்து அற்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி. அஞ்ச, அவன்தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக்களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப்படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.