LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-36

4.036.திருப்பழனம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஆபத்சகாயர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
354 ஆடினா ரொருவர் போலு
மலர்கமழ் குழலி னாளைக்
கூடினா ரொருவர் போலுங்
குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்
தூயநன் மறைக ணான்கும்
பாடினா ரொருவர் போலும்
பழனத்தெம் பரம னாரே.
4.036.1
திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும், மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும், கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார்.
355 போவதோர் நெறியு மானார்
புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு
வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார்
குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.2
பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும், முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார். அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்ப தில்லை. ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன். நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீயவினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார்.
356 கண்டராய் முண்ட ராகிக்
கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்
தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த
வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைக டீர்ப்பார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.3
வீரராய், மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தி, அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய், பகைவருடைய மும்மதில்களையும் அம்புஎய்து அழித்த வேதியராய், வேதம் ஓதும் நாவினராய்என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்துஎம்பெருமான் அமைந்து உள்ளார்.
357 நீரவன் றீயி னோடு
நிழலவ னெழில தாய
பாரவன் விண்ணின் மிக்க
பரமவன் பரம யோகி
ஆரவ னண்ட மிக்க
திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமிழ்த மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.4
பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார்.
358 ஊழியா ரூழி தோறு
முலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்
பராபரர் பரம தாய
ஆழியா னன்னத் தானு
மன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்
பழனத்தெம் பரம னாரே.
4.036.5
எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான், ஊழிகளாய், ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய, சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார்.
359 ஆலின்கீ ழறங்க ளெல்லா
மன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா
நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.6
பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து, காலனைத்தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின், பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார்.
360 ஆதித்த னங்கி சோம
னயனொடு மால்பு த(ன்)னும்
போதித்து நின்று லகிற்
போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழுல குஞ்
சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.7
சூரியன், அக்கினி, சந்திரன், பிரமன், திருமால், புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள். இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள். பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதிபாகராக உள்ளார்.
361 காற்றனாற் காலற் காய்ந்து
காருரி போர்த்த வீசர்
தோற்றனார் கடலு ணஞ்சைத்
தோடுடைக் காதர் சோதி
ஏற்றினா ரிளவெண் டிங்க
ளிரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்
பழனத்தெம் பரம னாரே.
4.036.8
காலினாலே கூற்றுவனை உதைத்து, யானைத்தோலைப் போர்த்தியவராய், அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான், கடலில் தோன்றியவிடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய், தோடு அணிந்த காதினராய், வெண்ணிறமுடைய காளையினராய், பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச்செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார்.
362 கண்ணனும் பிரம னோடு
காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த
வெரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்க டூவி
வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்
பழனத்தெம் பரம னாரே.
4.036.9
பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து, தம்மை வாழ்த்தும்அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார்.
363 குடையுடை யரக்கன் சென்று
குளிர்கயி லாயவெற் பின்
இடைமட வரலை யஞ்ச
வெடுத்தலு மிறைவ னோக்கி
விடையுடை விகிர்தன் றானும்
விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை யடிகள் போலும்
பழனத்தெம் பரம னாரே.
4.036.10
அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை, அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில், காளையை வாகனமாக உடைய, உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான், தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர்.
திருச்சிற்றம்பலம்

4.036.திருப்பழனம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - ஆபத்சகாயர். 

தேவியார் - பெரியநாயகியம்மை. 

354 ஆடினா ரொருவர் போலு

மலர்கமழ் குழலி னாளைக்

கூடினா ரொருவர் போலுங்

குளிர்புனல் வளைந்த திங்கள்

சூடினா ரொருவர் போலுந்

தூயநன் மறைக ணான்கும்

பாடினா ரொருவர் போலும்

பழனத்தெம் பரம னாரே.(4.036.1)

  திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும், மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும், கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார்.

355 போவதோர் நெறியு மானார்

புரிசடைப் புனித னார்நான்

வேவதோர் வினையிற் பட்டு

வெம்மைதான் விடவுங் கில்லேன்

கூவல்தா னவர்கள் கேளார்

குணமிலா வைவர் செய்யும்

பாவமே தூர நின்றார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.2)

  பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும், முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார். அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்ப தில்லை. ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன். நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீயவினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார்.

356 கண்டராய் முண்ட ராகிக்

கையிலோர் கபால மேந்தித்

தொண்டர்கள் பாடி யாடித்

தொழுகழற் பரம னார்தாம்

விண்டவர் புரங்க ளெய்த

வேதியர் வேத நாவர்

பண்டையென் வினைக டீர்ப்பார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.3)

  வீரராய், மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தி, அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை உடையவராய், பகைவருடைய மும்மதில்களையும் அம்புஎய்து அழித்த வேதியராய், வேதம் ஓதும் நாவினராய்என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்துஎம்பெருமான் அமைந்து உள்ளார்.

357 நீரவன் றீயி னோடு

நிழலவ னெழில தாய

பாரவன் விண்ணின் மிக்க

பரமவன் பரம யோகி

ஆரவ னண்ட மிக்க

திசையினோ டொளிக ளாகிப்

பாரகத் தமிழ்த மானார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.4)

  பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய் மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார்.

358 ஊழியா ரூழி தோறு

முலகினுக் கொருவ ராகிப்

பாழியார் பாவந் தீர்க்கும்

பராபரர் பரம தாய

ஆழியா னன்னத் தானு

மன்றவர்க் களப் பரிய

பாழியார் பரவி யேத்தும்

பழனத்தெம் பரம னாரே.

  எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான், ஊழிகளாய், ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய, சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தாம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார்.

359 ஆலின்கீ ழறங்க ளெல்லா

மன்றவர்க் கருளிச் செய்து

நூலின்கீ ழவர்கட் கெல்லா

நுண்பொரு ளாகி நின்று

காலின்கீழ்க் காலன் றன்னைக்

கடுகத்தான் பாய்ந்து பின்னும்

பாலின்கீழ் நெய்யு மானார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.6)

  பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து, காலனைத்தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின், பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார்.

360 ஆதித்த னங்கி சோம

னயனொடு மால்பு த(ன்)னும்

போதித்து நின்று லகிற்

போற்றிசைத் தாரி வர்கள்

சோதித்தா ரேழுல குஞ்

சோதியுட் சோதி யாகிப்

பாதிப்பெண் ணுருவ மானார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.7)

  சூரியன், அக்கினி, சந்திரன், பிரமன், திருமால், புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள். இவர்கள் தம் முயற்சியால் சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள். பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதிபாகராக உள்ளார்.

361 காற்றனாற் காலற் காய்ந்து

காருரி போர்த்த வீசர்

தோற்றனார் கடலு ணஞ்சைத்

தோடுடைக் காதர் சோதி

ஏற்றினா ரிளவெண் டிங்க

ளிரும்பொழில் சூழ்ந்த காயம்

பாற்றினார் வினைக ளெல்லாம்

பழனத்தெம் பரம னாரே.(4.036.8)

  காலினாலே கூற்றுவனை உதைத்து, யானைத்தோலைப் போர்த்தியவராய், அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான், கடலில் தோன்றியவிடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய், தோடு அணிந்த காதினராய், வெண்ணிறமுடைய காளையினராய், பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச்செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார்.

362 கண்ணனும் பிரம னோடு

காண்கில ராகி வந்தே

எண்ணியுந் துதித்து மேத்த

வெரியுரு வாகி நின்று

வண்ணநன் மலர்க டூவி

வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்

பண்ணுலாம் பாடல் கேட்டார்

பழனத்தெம் பரம னாரே.(4.036.9)

  பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து, தம்மை வாழ்த்தும்அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார்.

363 குடையுடை யரக்கன் சென்று

குளிர்கயி லாயவெற் பின்

இடைமட வரலை யஞ்ச

வெடுத்தலு மிறைவ னோக்கி

விடையுடை விகிர்தன் றானும்

விரலினா லூன்றி மீண்டும்

படைகொடை யடிகள் போலும்

பழனத்தெம் பரம னாரே.(4.036.10)

  அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை, அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில், காளையை வாகனமாக உடைய, உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான், தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.