LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-37

4.037.திருநெய்த்தானம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். 
தேவியார் - வாலாம்பிகையம்மை. 
364 காலனை வீழச் செற்ற
கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன்
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங்
குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட
நினைக்குமா நினைக்கின் றேனே.
4.037.1
கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன்.
365 காமனை யன்றுகண் ணாற்
கனலெரி யாக நோக்கித்
தூமமுந் தீபங் காட்டித்
தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ்
செறிபொழிற் கோயின் மேய
வாமனை நினைந்த நெஞ்சம்
வாழ்வுற நினைந்த வாறே.
4.037.2
மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.
366 பிறைதரு சடையின் மேலே
பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க
ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக்
குழகனைக் கூட லாமே.
4.037.3
பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவினனாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான்.
367 வடிதரு மழுவொன் றேந்தி
வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே
புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ
நின்றநெய்த் தான மேவி
அடிதரு கழல்க ளார்ப்ப
வாடுமெம் மண்ண லாரே.
4.037.4
சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார்.
368 காடிட மாக நின்று
கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப்
பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரா
ரந்தணெய்த் தான மென்றும்
கூடிய குழக னாரைக்
கூடுமா றறிகி லேனே.
4.037.5
கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே!
369 வானவ வணங்கி யேத்தி
வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ்
சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத்
திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக்
கூடுமா றறிகி லேனே.
4.037.6
தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!
370 காலதிர் கழல்க ளார்ப்பக்
கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று
நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய
விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக
மகிழ்ந்தநெய்த் தான னாரே.
4.037.7
திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.
371 பந்தித்த சடையின் மேலே
பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி
யடிகளை யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று
வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
திருந்துநெய்த் தான னாரே.
4.037.8
முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.
372 சோதியாய்ச் சுடரு மானார்
சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலக மேத்த
வுகந்துதா மருள்கள் செய்வார்
ஆதியா யந்த மானார்
யாவரு மிறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி
நின்றநெய்த் தான னாரே.
4.037.9
ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.
373 இலையுடைப் படைகை யேந்து
மிலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுட னடர்த்து மீண்டே
தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத்
திரிபுர மெரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலு
நின்றநெய்த் தான னாரே.
4.037.10
இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.
திருச்சிற்றம்பலம்

4.037.திருநெய்த்தானம் 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். 

தேவியார் - வாலாம்பிகையம்மை. 

364 காலனை வீழச் செற்ற

கழலடி யிரண்டும் வந்தென்

மேலவா யிருக்கப் பெற்றேன்

மேதகத் தோன்று கின்ற

கோலநெய்த் தான மென்னுங்

குளிர்பொழிற் கோயின் மேய

நீலம்வைத் தனைய கண்ட

நினைக்குமா நினைக்கின் றேனே.(4.037.1)

  கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன். ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே! தற்போதம் அற்று நின் போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன்.

365 காமனை யன்றுகண் ணாற்

கனலெரி யாக நோக்கித்

தூமமுந் தீபங் காட்டித்

தொழுமவர்க் கருள்கள் செய்து

சேமநெய்த் தான மென்னுஞ்

செறிபொழிற் கோயின் மேய

வாமனை நினைந்த நெஞ்சம்

வாழ்வுற நினைந்த வாறே.(4.037.2)

  மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து, நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து, எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது.

366 பிறைதரு சடையின் மேலே

பெய்புனற் கங்கை தன்னை

உறைதர வைத்த வெங்க

ளுத்தம னூழி யாய

நிறைதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தான மென்று

குறைதரு மடிய வர்க்குக்

குழகனைக் கூட லாமே.(4.037.3)

  பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய், பல ஊழிகளின் வடிவினனாய், பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டித் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான்.

367 வடிதரு மழுவொன் றேந்தி

வார்சடை மதியம் வைத்துப்

பொடிதரு மேனி மேலே

புரிதரு நூலர் போலும்

நெடிதரு பொழில்கள் சூழ

நின்றநெய்த் தான மேவி

அடிதரு கழல்க ளார்ப்ப

வாடுமெம் மண்ண லாரே.(4.037.4)

  சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திரவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி, நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார்.

368 காடிட மாக நின்று

கனலெரி கையி லேந்திப்

பாடிய பூதஞ் சூழப்

பண்ணுடன் பலவுஞ் சொல்லி

ஆடிய கழலர் சீரா

ரந்தணெய்த் தான மென்றும்

கூடிய குழக னாரைக்

கூடுமா றறிகி லேனே.(4.037.5)

  கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே!

369 வானவ வணங்கி யேத்தி

வைகலு மலர்க டூவத்

தானவர்க் கருள்கள் செய்யுஞ்

சங்கரன் செங்க ணேற்றன்

தேனமர் பொழில்கள் சூழத்

திகழுநெய்த் தான மேய

கூனிள மதியி னானைக்

கூடுமா றறிகி லேனே.(4.037.6)

தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய், வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற்புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற, வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே!

370 காலதிர் கழல்க ளார்ப்பக்

கனலெரி கையில் வீசி

ஞாலமுங் குழிய நின்று

நட்டம தாடு கின்ற

மேலவர் முகடு தோய

விரிசடை திசைகள் பாய

மாலொரு பாக மாக

மகிழ்ந்தநெய்த் தான னாரே.(4.037.7)

  திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப, ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும், விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம்பட்டவராவார்.

371 பந்தித்த சடையின் மேலே

பாய்புன லதனை வைத்து

அந்திப்போ தனலு மாடி

யடிகளை யாறு புக்கார்

வந்திப்பார் வணங்கி நின்று

வாழ்த்துவார் வாயி னுள்ளார்

சிந்திப்பார் சிந்தை யுள்ளார்

திருந்துநெய்த் தான னாரே.(4.037.8)

  முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று, தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார்.

372 சோதியாய்ச் சுடரு மானார்

சுண்ணவெண் சாந்து பூசி

ஓதிவா யுலக மேத்த

வுகந்துதா மருள்கள் செய்வார்

ஆதியா யந்த மானார்

யாவரு மிறைஞ்சி யேத்த

நீதியாய் நியம மாகி

நின்றநெய்த் தான னாரே.(4.037.9)

  ஆதியும் அந்தமும் ஆகியவராய், எல்லோரும் விரும்பித் துதிக்க, நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும், அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய், திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி, நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார்.

373 இலையுடைப் படைகை யேந்து

மிலங்கையர் மன்னன் றன்னைத்

தலையுட னடர்த்து மீண்டே

தானவற் கருள்கள் செய்து

சிலையுடன் கணையைச் சேர்த்துத்

திரிபுர மெரியச் செற்ற

நிலையுடை யடிகள் போலு

நின்றநெய்த் தான னாரே.(4.037.10)

  இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.