LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-41

4.041.திருச்சோற்றுத்துறை 
திருநேரிசை : பண் - கொல்லி 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர். 
தேவியார் - ஒப்பிலாம்பிகை. 
404 பொய்விரா மேனி தன்னைப்
பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்
வேதியா வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட
வாக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரா லுகளுஞ் செம்மைத்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.1
வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே! வேதங்களை ஓதும் நாவினரே! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன்.
405 கட்டராய் நின்று நீங்கள்
காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி
யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே
யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.2
மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது. தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார். சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார்.
406 கல்லினாற் புரமூன் றெய்த
கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே
யேகாந்த மாக வேத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப்
பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.3
மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள். பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய், வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே.
407 கறையராய்க் கண்ட நெற்றிக்
கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையரா யினிய ராகித்
தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம்
பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தென் னுள்ளச்
சோர்வுகண் டருளி னாரே.
4.041.4
நீலகண்டராய், நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய், இனியராய், ஒப்பற்றவராய் இருப்பாராய், குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய், பெருஞ்செயல்களையே செய்வராய் உள்ள, என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு, அது நீங்க அருள் செய்தவராவார்.
408 பொந்தையைப் பொருளா வெண்ணிப்
பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே யேக மூர்த்தி
யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப்
பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.5
பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை, 'பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று  இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே! எம் தலைவரே! தனிப் பெருந் தெய்வமே' என்றுதுதியாதேனாய், விரைந்தகலக் காலங் கழித்தேன்.
409 பேர்த்தினிப் பிறவா வண்ணம்
பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த
வலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.6
பார்வதிபாகராய், அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை, இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள். (அடைவு கெட - வாயில் வந்தவந்த படி.)
410 கொந்தார்பூங் குழலி னாரைக்
கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற
விறைவனை யேத்தா தந்தோ
முந்தரா வல்கு லாளை
யுடன்வைத்த வாதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.7
விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான, எங்கள் தந்தையாராய், எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர். அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே!
411 அங்கதி ரோன வனை
யண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன்வ ழியே
போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை
யுடன்வைத்த வாதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குந்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.8
அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.
412 ஓதியே கழிக்கின் றீர்க
ளுலகத்தீ ரொருவன் றன்னை
நீதியா னினைய மாட்டீர்
நின்மல னென்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ்
சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.9
'அவன் அருளாலே அவனைக் காணவேண்டும்' என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும், திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய், அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள்.
413 மற்றுநீர் மனம்வை யாதே
மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற்
பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக்
கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார்
திருச்சோற்றுத் துறைய னாரே.
4.041.10
மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால், மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல், பல நூல்களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத்துறையனை, அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள்.
திருச்சிற்றம்பலம்

4.041.திருச்சோற்றுத்துறை 

திருநேரிசை : பண் - கொல்லி 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - தொலையாச்செல்வர். 

தேவியார் - ஒப்பிலாம்பிகை. 

404 பொய்விரா மேனி தன்னைப்

பொருளெனக் காலம் போக்கி

மெய்விரா மனத்த னல்லேன்

வேதியா வேத நாவா

ஐவரா லலைக்கப் பட்ட

வாக்கைகொண் டயர்த்துப் போனேன்

செய்வரா லுகளுஞ் செம்மைத்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.1)

  வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே! வேதங்களை ஓதும் நாவினரே! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன்.

405 கட்டராய் நின்று நீங்கள்

காலத்தைக் கழிக்க வேண்டா

எட்டவாங் கைகள் வீசி

யெல்லிநின் றாடு வானை

அட்டகா மலர்கள் கொண்டே

யானஞ்சு மாட்ட வாடிச்

சிட்டரா யருள்கள் செய்வார்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.2)

  மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது. தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார். சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார்.

406 கல்லினாற் புரமூன் றெய்த

கடவுளைக் காத லாலே

எல்லியும் பகலு முள்ளே

யேகாந்த மாக வேத்தும்

பல்லில்வெண் டலைகை யேந்திப்

பல்லிலந் திரியுஞ் செல்வர்

சொல்லுநன் பொருளு மாவார்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.3)

  மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள். பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய், வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே.

407 கறையராய்க் கண்ட நெற்றிக்

கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்

இறையரா யினிய ராகித்

தனியராய்ப் பனிவெண் டிங்கட்

பிறையராய்ச் செய்த வெல்லாம்

பீடராய்க் கேடில் சோற்றுத்

துறையராய்ப் புகுந்தென் னுள்ளச்

சோர்வுகண் டருளி னாரே.(4.041.4)

  நீலகண்டராய், நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய், இனியராய், ஒப்பற்றவராய் இருப்பாராய், குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய், பெருஞ்செயல்களையே செய்வராய் உள்ள, என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு, அது நீங்க அருள் செய்தவராவார்.

408 பொந்தையைப் பொருளா வெண்ணிப்

பொருக்கெனக் காலம் போனேன்

எந்தையே யேக மூர்த்தி

யென்றுநின் றேத்த மாட்டேன்

பந்தமாய் வீடு மாகிப்

பரம்பர மாகி நின்று

சிந்தையுட் டேறல் போலுந்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.5)

  பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை, 'பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று  இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே! எம் தலைவரே! தனிப் பெருந் தெய்வமே' என்றுதுதியாதேனாய், விரைந்தகலக் காலங் கழித்தேன்.

409 பேர்த்தினிப் பிறவா வண்ணம்

பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக் கருள்கள் செய்த

பாசுப தன்றி றமே

ஆர்த்துவந் திழிவ தொத்த

வலைபுனற் கங்கை யேற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.6)

  பார்வதிபாகராய், அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை, இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள். (அடைவு கெட - வாயில் வந்தவந்த படி.)

410 கொந்தார்பூங் குழலி னாரைக்

கூறியே காலம் போன

எந்தையெம் பிரானாய் நின்ற

விறைவனை யேத்தா தந்தோ

முந்தரா வல்கு லாளை

யுடன்வைத்த வாதி மூர்த்தி

செந்தாது புடைகள் சூழ்ந்த

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.7)

  விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான, எங்கள் தந்தையாராய், எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர். அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே!

411 அங்கதி ரோன வனை

யண்ணலாக் கருத வேண்டா

வெங்கதி ரோன்வ ழியே

போவதற் கமைந்து கொண்மின்

அங்கதி ரோன வனை

யுடன்வைத்த வாதி மூர்த்தி

செங்கதி ரோன்வ ணங்குந்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.8)

  அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.

412 ஓதியே கழிக்கின் றீர்க

ளுலகத்தீ ரொருவன் றன்னை

நீதியா னினைய மாட்டீர்

நின்மல னென்று சொல்லீர்

சாதியா நான்மு கனுஞ்

சக்கரத் தானுங் காணாச்

சோதியாய்ச் சுடர தானார்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.9)

  'அவன் அருளாலே அவனைக் காணவேண்டும்' என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும், திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய், அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள்.

413 மற்றுநீர் மனம்வை யாதே

மறுமையைக் கழிக்க வேண்டில்

பெற்றதோ ருபாயந் தன்னாற்

பிரானையே பிதற்று மின்கள்

கற்றுவந் தரக்க னோடிக்

கயிலாய மலையெ டுக்கச்

செற்றுகந் தருளிச் செய்தார்

திருச்சோற்றுத் துறைய னாரே.(4.041.10)

  மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால், மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல், பல நூல்களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத்துறையனை, அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.