LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-53

4.053.திருவாரூர் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
508 குழல்வலங் கொண்ட சொல்லாள்
கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டுநீங்காக்
கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையா
னருட்கதி ரெறிக்கு மாரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
றோன்றினார் தோன்றி னாரே.
4.053.1
வேய்ங்குழல் ஓசையை வென்ற இனியசொல்லையுடையவளாய் அழகிய வேல்போன்ற கண்களையுடைய பார்வதியின் திருவடிகளை வலம் வந்து நீங்காத அடியவர்களுடைய கண்கள் நிறைவுறும்படியாகத் தீயினை வலக்கையில் கொண்ட பெருமான் அருளாகிய ஒளியைவீசும் திருவாரூரைத் தொழுவதற்கும் வலம் வருவதற்கும் வாய்ப்புடையவராகப் பிறப்பெடுத்தவரே பயனுடைய பிறப்பினைப் பெற்றவராவார்.
509 நாகத்தை நங்கை யஞ்ச
நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்
வேழத்தி னுரிவை போர்த்து
பாகத்தி னிமிர்தல் செய்யாத்
திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாக
மடங்குமா ரூர னார்க்கே.
4.053.2
ஆரூரனிடத்தில் பாம்பைப் பார்த்துப் பார்வதி அஞ்ச, அப்பார்வதியை மயில் என்று கருதிப் பாம்பு தான் சீறிச் செயற்படும் உற்சாகத்தை நீக்கிச் சோர்வடைய, அப்பாம்பு தன்னை விழுங்கும் என்று அஞ்சிப்பிறை யானைத்தோலுள் மறைய ஒரு பகுதியும் நிமிர்ந்து பார்த்தலைச் செய்யாத சந்திரனை மின்னல் என்று கருதி அஞ்சி மார்பில் கிடந்த நாகம் சோர்ந்து கிடக்கிறது.
510 தொழுதகங் குழைய மேவித்
தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றா
ரவரவர் போலு மாரூர்
எழிலக நடுவெண் முத்த
மன்றியு மேர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்
புதுமுகிழ் சூடி னாரே.
4.053.3
தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக, ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால், தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார்.
511 நஞ்சிருண் மணிகொள் கண்டர்
நகையிரு ளீமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி
விளங்கினார் போலு மூவா
வெஞ்சுடர் முகடுதீண்டி
வெள்ளிநா ராசமன்ன
அஞ்சுட ரணிவெண்டிங்க
ளணியுமா ரூரனாரே.
4.053.4
அழியாத சூரியமண்டலத்தின் உச்சியைத் தொட்டுக் கொண்டுள்ள சடைமுடியில் வெள்ளிக் கம்பி இருந்தாற்போன்ற அழகிய ஒளி வீசும் பிறையை அணிந்த ஆரூர்ப் பெருமான் நஞ்சினால் இருண்ட நீலகண்டராய், இருள்மிக்க சுடுகாட்டில் இரவிலே வெளிப்படுகின்ற சுடுகாட்டுத் தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே கூத்தாடி விளங்குபவராவார்.
512 எந்தளிர் நீர்மை கோல
மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன
படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்
தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளி ராகம் போலும்
வடிவரா ரூர னாரே.
4.053.5
எம்முடைய கற்பக மரத் தளிரின் தன்மையான அழகிய மேனியை உடைய ஆரூரன் என்று தேவர்கள் போற்றுமாறு, பசிய தளிரை உடைய காமவல்லி போன்று, தம் மேனிமீது படரும் கொடிபோன்ற பார்வதியால் தழுவப்பட்டு, தம்முடைய சடைத் தொகுதியினாலும் தம்முடைய தனிப்பண்பினாலும் அழகிய தளிரினது வடிவம் போன்றவர் ஆவார் ஆரூரனார்.
513 வானகம் விளங்க மல்கும்
வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து
தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டி
லுண்பது மொளிகொ ணஞ்சம்
ஆனகத் தஞ்சு மாடு
மடிகளா ரூர னாரே.
4.053.6
புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து, ஒளி பொருந்திய விடத்தை உண்டு, பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி, பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும்.
514 அஞ்சணை கணையி னானை
யழலுற வன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
யமுதமா வணைந்து நக்கு
அஞ்சணை யஞ்சு மாடி
யாடர வாட்டுவார் தாம்
அஞ்சணை வேலி யாரூ
ராதரித் திடங்கொண் டாரே.
4.053.7
ஐந்து வேலிப் பரப்புடைய திருவாரூர்க்கோயிலை விரும்பி உறையும் பெருமான் ஐங்கணைகளை உடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் நோக்கி, ஐந்து விதமாக முடிக்கப்படும் (ஐம்பால்) கூந்தலையுடைய பார்வதியை அமுதமாகக் கருதி அவளோடு பொருந்தி, சிரித்து, பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் கொண்டு, ஐந்து தலைகளை உடையதாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பினை ஆட்டுபவராக உள்ளார்.
515 வணங்கிமுன் னமர ரேத்த
வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
யாரூரெம் மடிக ளாரே.
4.053.8
சந்திர மண்டலம் வரையில் உயர்ந்து அந்த வட்டமான பகுதியில் அடைந்து சந்திரனை அணுகுகின்ற அழகிய கொடிகள் உயர்த்தப்பட்ட மாடங்களை உடைய வீதிகளைக் கொண்ட ஆரூரில் உள்ள எம்பெருமான் தேவர்கள் தம்முடைய வலிய வினைப் பயன்கள் தீருமாறு முன் நின்று வணங்கித் துதிக்க ஒன்றோடொன்று கலந்து பின்னி முறுகிய சடைகளிடையே பிறையைச் சூடிய பெருமையை உடைய தலைவராவார்.
516 நகலிடம் பிறர்கட் காக
நான்மறை யோர்க டங்கள்
புகலிட மாகி வாழும்
புகலிலி யிருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
கீண்டெழி லழல தாகி
அகலிடம் பரவி யேத்த
வடிகளா ரூர னாரே.
4.053.9
வீண் பேச்சிற் பொழுதுபோக்கி நல்லோர் இகழ்ச்சிக்கிடமாகும் நிலை (அடியாரல்லாத) பிறர்க்காக நான்கு வேதங்களையும் ஓதும் பக்தர்களுக்கு அடைக்கலமாகி வாழ்பவராய், தமக்கு அடைக்கலம் தருபவர் பிறர் யாரும் இல்லாதவகையில் அனைவருக்கும் தாமே அடைக்கலமாகும் பெருமானாய், திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து தமக்குள் மாறுபட்டு அடியும் முடியும் தேடும் தீப்பிழம்பாக நீண்டு, உலகத்தார் முன் நின்று துதித்துப் புகழுமாறு ஆரூர்த் தலைவர் விளங்குகிறார்.
517 ஆயிர நதிகண் மொய்த்த
வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு
மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித்
தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த
வடிகளா ரூர னாரே.
4.053.10
நதிகள் பலவாக வந்து கலக்கும் அலைகளையுடைய கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி, அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் கொண்டுள்ளவர் ஆரூரனாகிய பெருமான்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.