LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-54

4.054.திருப்புகலூர் 
திருநேரிசை : பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அக்கினீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
518 பகைத்திட்டார் புரங்கண் மூன்றும்
பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே
பொறியிலே னுடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளு
மைவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.
4.054.1
திருப்புகலூர் பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது செயற்பாலேன்?
519 மையரி மதர்த்த வொண்கண்
மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்
கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே
யடைக்கும்போ தாவி யார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.
4.054.2
திருப்புகலூர்ப் பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.
520 முப்பது முப்பத் தாறு
முப்பது மிடுகு ரம்பை
அப்பர்போ லைவர் வந்து
வதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றா
லுய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்
திருப்புக லூர னீரே.
4.054.3
செந்நிற மேனியை உடைய திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிபுரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை அடியேன் அறியமாட்டேன்.
521 பொறியிலா வழுக்கை யோம்பிப்
பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றே
னீதனே னீதி யேதும்
அறிவிலே னமரர் கோவே
யமுதினை 1மனனில் வைக்கும்
செறிவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.
4.054.4
திருப்புகலூர்ப் பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்! நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?
522 அளியினார் குழலி னார்க
ளவர்களுக்கு கன்ப தாகிக்
களியினார் பாட லோவாக்
கடவூர் வீரட்ட மென்னும்
தளியினார் பாத நாளுந்
நினைவிலாத் தகவி னெஞ்சம்
தௌவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.
4.054.5
திருப்புகலூர்ப் பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும் பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள்தோறும் விருப்புற்று நினைக்காததும், தகுதியற்றதுமான நெஞ்சம் தௌவு பெறாத அடியேன் யாது செய்வேன்?
523 இலவினார் மாதர் பாலே
இசைந்துநா னிருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி
நீதனே னாதி யுன்னை
உலவிநா னுள்க மாட்டே
னுன்னடி பரவு ஞானம்
செலவிலேன் செய்வ தென்னே
திருப்புக லூர னீரே.
4.054.6
திருப்புகலூர்ப் பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன் திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன் அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?
524 காத்திலே னிரண்டு மூன்றுங்
கல்வியே லில்லை யென்பால்
வாய்த்திலே னடிமை தன்னுள்
வாய்மையாற் றூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்
திருப்புக லூர னீரே.
4.054.7
பொய்கைகள் விளங்கும் திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞானதேசிகராற் பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன் அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது செயற்பாலேன்?
525 நீருமாய்த் தீயு மாகி
நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி
யிமையவ ரிறைஞ்ச 1நின்றார்
2ஆய்வதற் கரிய ராகி
யங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவர்
திருப்புக லூர னாரே.
4.054.8
நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.
526 மெய்யுளே விளக்கை யேற்றி
வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி
யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ
ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்
திருப்புக லூர னீரே.
4.054.9
திருப்புகலூர்ப் பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.
527 அருவரை தாங்கி னானு
மருமறை யாதி யானும்
இருவரு மறிய மாட்டா
வீசனா ரிலங்கை வேந்தன்
கருவரை யெடுத்த ஞான்று
கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்
திருப்புக லூர னாரே.
4.054.10
திருப்புகலூர்ப் பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும் அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.