LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-55

4.055.திருவலம்புரம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வலம்புரநாதர். 
தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை. 
528 தெண்டிரை தேங்கியோ தஞ்
சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத்
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகண் மதுக்கண் மாந்தும்
வலம்புரத் தடிக டம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
குழகர்தா மிருந்த வாறே.
4.055.1
எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தௌந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது, தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும், தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே!
529 மடுக்களில் வாளை பாய
வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற்
பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித்
தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புரத் திருந்த வாறே.
4.055.2
மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர், மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே, தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே!
530 தேனுடை மலர்கள் கொண்டு
திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை யஞ்சுங் கொண்டே
யன்பினா லமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும்
வலம்புரத் தடிக டம்மை
நானடைந் தேத்தப் பெற்று
நல்வினைப் பயனுற் றேனே.
4.055.3
தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன்.
531 முளையெயிற் றிளநல் லேனம்
பூண்டுமொய் சடைக டாழ
வளையெயிற் றிளைய நாகம்
வலித்தரை யிசைய வீக்கிப்
1புளைகயப் போர்வை போர்த்துப்
புனலொடு மதியஞ் சூடி
வளைபயி லிளைய ரேத்தும்
வலம்புரத் தடிக டாமே.
4.055.4
வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு, செறிந்த சடைகள் தாழ, வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி, துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து, கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார்.
532 சுருளுறு வரையின் மேலாற்
றுலங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
விளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறு மடிய ரெல்லா
மங்கையின் மலர்க ளேந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புரத் தடிக ளாரே.
4.055.5
இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன், மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க, அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார்.
533 நினைக்கின்றே னெஞ்சு தன்னா
னீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்
கன்பினா லமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
யினிவலம் புரவ னீரே.
4.055.6
நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன், அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன். இனி, யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன்.
534 செங்கயல் சேல்கள் பாய்ந்து
தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து
தடம்பொய்கை யடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக்
கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
வலம்புரத் தடிக ளாரே. 
4.055.7
செங்கயல்களும், சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய், பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் (எம்) அடிகள்! (மிக்கு + ஆர் - மிக்கு நிறையும்.)
535 அருகெலாங் குவளை செந்நெல்
அகலிலை யாம்ப னெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை யெல்லாம்
குருகினங் கூடி யாங்கே
கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும்
வலம்புரத் தடிக ளாரே. 
4.055.8
ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன. தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன. மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன. அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன. இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார்.
536 கருவரை யனைய மேனிக்
கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேற்
றிசைமுக னவனுங் காணான்
ஒருவரை யுச்சி யேறி
யோங்கினா ரோங்கி வந்து
அருமையி லௌமை யானா
ரவர்வலம் புரவ னாரே.
4.055.9
கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும், திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாத வராய், ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார்.
537 வாளெயி றிலங்க நக்கு
வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந்
தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா
ரவர்வலம் புரவ னாரே.
4.055.10
தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் (தலைகள்) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு, சிரித்துக் கொண்டே, தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.